Published:Updated:

இது வேற லெவல் பைக் !

KAWASAKI VERSYS 1000ரா.ராஜா ராமமூர்த்தி

ந்திய பைக் ஆர்வலர்களிடைய இப்போது மிக பிரபலமான சூப்பர் பைக் - கவாஸாகி. அதனால் இந்திய சூப்பர் பைக் மார்க்கெட்டை முழுவதுமாகக் கைப்பற்றுவதில் தீவிரமாக இருக்கிறது கவாஸாகி. புதிய பைக்குகள் தொடர்ந்து விற்பனைக்கு வந்துகொண்டே இருக்கின்றன. 2015 சீஸன் துவக்கமாக மார்ச் மாதம் வெர்ஸிஸ் என்னும் புதிய சூப்பர் பைக்கைக் களமிறக்கியுள்ளது கவாஸாகி.

டிஸைன்

கரடுமுரடான தோற்றத்தில் இருந்தாலும், ஒரு பக்கா கவாஸாகி ஃபார்முலா டிஸைனைக்கொண்டுள்ளது வெர்ஸிஸ். ஆனால், பைக்கின் உயரம் மிகவும் அதிகம். இதனால், சாலையில் ஓட்டும்போது மிரட்டலாக இருக்கிறது. ட்வின் ஹெட்லைட்ஸ் பளிச் வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன. முன்பக்க வைஸரின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யலாம். மணிக்கு 200 கி.மீ வேகத்தில் ஓட்டினாலும், காற்று முகத்தில் அறைவதில் இருந்து காக்கிறது இந்த வைஸர். டேக்கோ மீட்டர் மட்டும் அனலாக். மற்ற டயல்கள் எல்லாமே டிஜிட்டல்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இது வேற லெவல் பைக் !

ரீச் அட்ஜஸ்டபிள் பிரேக், கிளட்ச் லீவர்கள் உள்ளன. ஸ்விட்ச் கியர் தரமும் நன்றாக இருக்கிறது. பெரிய இன்ஜின் வெளியே தெரிவதுகூட ஸ்டைல்தான். சென்டர் ஸ்டாண்ட்தான். ஆனால், இயக்க எளிதாக இருக்கிறது. எக்ஸாஸ்ட் பைப்பின் டிஸைனை இன்னும் நன்றாக வடிவமைத்திருக்கலாம்.

இன்ஜின்

வெர்ஸிஸ் 1000 பைக்கில் இருப்பது 1,043 சிசி, இன்லைன் 4 சிலிண்டர், ஃப்யூல் இன்ஜெக்டட், லிக்விட் கூல்டு இன்ஜின். 118.4bhp சக்தியை 9,000 ஆர்பிஎம்-ல் அளிக்கிறது. 10.4 kgm டார்க் 7,500 ஆர்பிஎம்-ல் வெளிப்படுகிறது. ஜப்பான் இன்ஜின் என்பதால், நம்பகமாகவும் ஸ்மூத்தாகவும் இருக்கிறது. 6-ஸ்பீடு கியர் பாக்ஸை டவுன் ஷிஃப்ட் செய்யும்போது, வீல் லாக் ஆகிவிடாமல் தடுக்க, ஸ்லிப்பர் கிளட்ச்சும் உள்ளது. இன்ஜின் டார்க் டெலிவரியும் சூப்பர். ‘L, F’ என 2 பெர்ஃபாமென்ஸ் மோடுகள் உள்ளன. F மோடில் மிரட்டலான பவர் டெலிவரியும், L மோடில் சாஃப்ட்டான பவர் டெலிவரியும் கிடைக்கிறது. டிராக்‌ஷன் கன்ட்ரோல் சிறப்பாக இயங்குகிறது. குறைவான வேகத்தில் ஓட்டும்போது, இன்ஜின் ஹீட் அதிகமாக இருப்பது மைனஸ்.

இது வேற லெவல் பைக் !

ஓட்டுதல் தரம், கையாளுமை

முன்பக்கம் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்பக்கம் கேஸ்-சார்ஜ்டு மோனோ ஷாக் சஸ்பென்ஷும் உள்ளன. உயரமான பைக்குகளின் ட்ரேட் மார்க்கான, சாஃப்ட்டான ஓட்டுதல் தரம் வெர்ஸிஸ் பைக்கில் இல்லை. கையாளுமை யும் ஸ்டீரீட் பைக் அளவுக்கு இல்லை.

இது வேற லெவல் பைக் !

 முன் பக்கம் 310 மீமீ பெட்டல் டைப் டபுள் டிஸ்க்குகளும், பின் பக்கம் 250 மிமீ சிங்கிள் ரோட்டார்

இது வேற லெவல் பைக் !

பிரேக்கும் உள்ளன. ஏபிஎஸ் சிறப்பாக இயங்குகிறது.

லாங் டிராவல் சஸ்பென்ஷன், உயரமான தோற்றம், செம பெர்ஃபாமென்ஸ், ‘வேற லெவல்’ ஓட்டுதல் தரம் என ஒரு டூரிங் பைக்குக்குள், சூப்பர் பைக்காக இருக்கிறது இந்த கவாஸாகி வெர்சிஸ்.