Published:Updated:

டெக் டாக் GADGETS

ஆதவன்

டெக் டாக் GADGETS

ஆதவன்

Published:Updated:

ப்ரல் 10-ம் தேதி முதல் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வாட்ச்சுக்கான முன்பதிவு துவங்குகிறது. ஏப்ரல் 24-ம் தேதி முதல் டெலிவரி. இந்திய மதிப்பில் சுமார் 30,000 ரூபாயில் இருந்து 8 லட்சம் வரை வெவ்வேறு மாடல்களில் கிடைக்கிறது இந்த ஆப்பிள் வாட்ச். என்னது 8 லட்சம் ரூபாயா? ஆம், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட், ஆப்பிள் வாட்ச் எடிஷன் என மூன்று மாடல்கள் வருகின்றன. மூன்று மாடல்களுமே 38 மிமீ, 32 மிமீ என இரண்டு அளவுகளில் கிடைக்கிறது. ஸ்போர்ட் மாடல் யூத்ஃபுல். இளசுகளுக்குப் பிடிக்கும். ஆப்பிள் வாட்ச் மாடல், ஒரு பக்கா பிசினஸ்மேனுக்கானது. ஆப்பிள் வாட்ச் எடிஷன், 18 கேரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 8 லட்சம் ரூபாய்க்கும் மேல். ஆப்பிள் வாட்ச்சைப் பயன்படுத்த, ஆப்பிள் ஐஃபோனும் வைத்திருக்க வேண்டும். வாட்ச்சுக்கு என பிரத்யேக ஆப்ஸும் தயாராகிவிட்டன.

டெக் டாக் GADGETS

ண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் கார் ஆர்வலர்களுக்கு, ‘ரியல் ரேஸிங் 3’ கேம்தான் செம தோஸ்த். இது, ப்ளே ஸ்டோரின் டாப் கேம்களில் ஒன்று. லேட்டஸ்ட் ஸ்போர்ட்ஸ் கார்கள், சூப்பர் கார்கள் அனைத்தும் துல்லியமான கிராஃபிக்ஸில் மின்னுகின்றன. ரியல்-டைமில் நண்பர்களுடன் ‘மல்ட்டிப்ளேயர்’ ரேஸ்களில் தீப்பொறி பறக்க, காரை விரட்டலாம். நண்பர் இல்லாவிட்டாலும், Time Shifted Multiplayer டெக்னாலஜி மூலம், ஏற்கெனவே நண்பர் ஒட்டிய டிராக்கில், அவருடைய லாப் டைமைப் போட்டியாக வைத்து விளையாடலாம். கார்களின் டைனமிக்ஸும் ‘ரியலாக’ இருக்கிறது. இந்த கேம் இலவசம் என்பது ப்ளஸ். ஆனால், அப்ளிகேஷன் அதிக மெமரியை எடுத்துக்கொள்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெக் டாக் GADGETS

ன்னும் 4G நெட்வொர்க் இந்தியாவுக்கு வரவில்லை. ஆனால், அதற்குள் நான்கு 4G ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் களமிறங்கிவிட்டன. இதில் மைக்ரோமேக்ஸ் யு யுரேகா, லெனோவோ A6000, Xiaomi ரெட்மீ நோட் 4G ஆகிய போன்கள் விற்பனையிலேயே இருக்க, 4G வசதியுடன் இரண்டாவது ஜெனரேஷன் மோட்டோ E ஸ்மார்ட்போன் வரும் மே மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இதன் போட்டி போன்களில் 5 இன்ச் ஸ்க்ரீன்கள் இருக்க, இதில் 4.5 இன்ச்தான். ரெசல்யூஷனும் குறைவு. 1.2 Ghz குவாட் கோர் ப்ராசஸர், 1 ஜிபி RAM, 8 ஜிபி இன்டர்னல் மெமரி, 5 மெகா பிக்ஸல் ரியர் கேமரா, 0.3 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா போன்றவை உள்ளன. மற்ற போன்களுடன் ஒப்பிடும்போது, இதன் கேமரா சுமார்தான். ஆனால், ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் ஆபரேட்டிங் சிஸ்டம் உண்டு. 10,000 ரூபாய்க்குக் கீழே விலை நிர்ணயிக்க முடிவெடுத்திருக்கிறது மோட்டோரோலா. ஆனால், விலை இன்னும் குறைவாக இருந்தால்தான், டெக்னிக்கலாக மிரட்டும் போட்டி போன்களை வீழ்த்த முடியும்.

டெக் டாக் GADGETS
டெக் டாக் GADGETS

‘என்னப்பா, ஷார்ட் ஃபிலிமா? ஸ்க்ரிப்ட் ரெடின்னா சொல்லு. ஒரு 5D எடுத்துட்டு ஷூட் போயிடலாம்.’ - இப்படி ஷார்ட்ஃபிலிம் யூத்களிடையே கேனான் 5D கேமரா ரொம்பவே பிரபலம். எப்போது ஒரு DSLR கேமராவில் ப்ரொஃபஷனல் லெவல் சினிமா எடுக்க முடியும் என்று கேனான் 5D கேமரா மூலம் நிரூபித்ததோ, அப்போதே 5D கேமரா வெற்றி பெற்றுவிட்டது. தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான ‘வழக்கு எண் 18/9,      கோலி சோடா’ ஆகிய படங்கள் முழுவதுமே கேனான் 5D கேமராவில் படம்பிடிக்கப்பட்டவை. ஹாலிவுட்டில் ‘Iron Man 2, கேப்டன் அமெரிக்கா’ ஆகிய படங்களில்கூட கேனான் 5D கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளிச்சம் குறைவாக இருந்தாலும், ப்ரில்லியன்ட்டான படங்களை எடுப்பத்தில் 5D பெஸ்ட். ஃபுல் ஃப்ரேம் சென்ஸார், ஃபுல் HD ரெக்கார்டிங் என டெக்னிக்கலாக மிரட்டுகிறது 5D. இப்போது விற்பனையில் இருப்பது 5D Mark III கேமரா. இதன் விலை சுமார் 2 லட்சம் (லென்ஸ் கிட் உடன்). இவ்வளவு செலவு செய்ய முடியாது என்றால்,  5D Mark II கேமரா சுமார் 1 லட்சம் ரூபாய்க்கு யூஸ்டு கேமரா சந்தையில் கிடைக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism