Published:Updated:

மோட்டார் கிளினிக்

கேள்வி - பதில்

 எனக்கு 46 வயது ஆகிறது. மூன்று பேர் கொண்ட மிடில் கிளாஸ் குடும்பம். 75,000 ரூபாய் முன்பணம் கொடுத்து, மாதம் 5,000 ரூபாய் தவணை முறையில் வாங்கலாம் என்பது திட்டம். தினமும் காரை ஓட்டப் போவது இல்லை. சென்னை சிட்டிக்குள் வாரம் சுமார் 50 கி.மீ தூரம் வரை ஓட்டுவேன். மேலும், புதிதாக இப்போதுதான் கார் ஓட்ட ஆரம்பித்துள்ளேன். என் மனைவியும் இப்போதுதான் கார் ஓட்டப் பழகியுள்ளார். டாடா நானோ ட்விஸ்ட் வாங்க விரும்புகிறேன். எங்கள் தேர்வு சரியா?

- D.ஜெயக்குமார், சென்னை (இ-மெயில்)

புதிதாக கார் ஓட்டுபவர்களுக்கு, டாடா நானோ எளிதான காராகவே இருக்கும். மேலும், நானோ ட்விஸ்ட் மாடலில் பவர் ஸ்டீயரிங் இருப்பதால், சென்னை டிராஃபிக்கில் ஈஸியாக ஓட்டிச் செல்லலாம். டாடா நானோ ட்விஸ்ட் காரின் சென்னை ஆன் ரோடு விலை 2.93 லட்சம் ரூபாய். இதில், நீங்கள் கடன் தொகையாகப் பெறுவது சுமார் 2,18,000 ரூபாய். மாதம் 5 ஆயிரம் ரூபாய் தவணை என்றால், கடனைக் கட்டி முடிக்க சுமார் 4 ஆண்டுகள் ஆகும். டாடா நானோ ட்விஸ்ட் லிட்டருக்கு 18 கி.மீ மைலேஜ் தருகிறது. நீங்கள் வாரத்துக்கு 50 கி.மீ தூரம்தான் ஓட்டுவீர்கள் என்றால், மாதம் சுமார் 11 லிட்டர் பெட்ரோல் ஆகும். எனவே, மாதத்துக்கு தோராயமாக பெட்ரோலுக்கு மட்டும் 750 ரூபாய் செலவாகும். இது ஓகே என்றால், நிச்சயம் உங்களுடைய தேர்வு சரிதான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மோட்டார் கிளினிக்

 நான் கோவையில் பணி புரிகிறேன். வேலை காரணமாக கோவை முழுவதும் நாள் முழுக்க பைக்கில் சுற்றவேண்டியிருக்கிறது. ஹோண்டா சிபி யூனிகார்ன் பைக் வைத்திருக்கிறேன். அடுத்து கார் வாங்கிவிட்டால், ஏ.சி போட்டுக்கொண்டு நிம்மதியாக ஊருக்குள் ஓட்டலாம். பைக்கில் இருந்து காருக்குத் தாவுகிறேன் என்பதால், எல்லோரும் புது டாடா நானோ வாங்கச் சொன்னார்கள். ஆனால், அதே விலைக்கு ஒரு நல்ல யூஸ்டு காரே வாங்கிவிட்டால் என்ன என்று ஒரு யோசனை. பழைய ஹூண்டாய் ஐ10, சிட்டியில் ஓட்டுவதற்கு எளிதாக இருக்கும். அதை யூஸ்டு கார் மார்க்கெட்டில் வாங்கலாமா? என்னவெல்லாம் கவனிக்க வேண்டும்?

- ப. செந்தில், அவினாசி

 ஹூண்டாய் ஐ10 கார்கள் யூஸ்டு கார் மார்க்கெட்டில் நல்ல நிலையிலேயே கிடைக்கின்றன. இதன் சர்வீஸ் மெயின்டெனன்ஸும் பர்ஸைக் கடிக்காது. சின்ன காராக இருந்தாலும், கேபின் கொஞ்சம் விசாலமாக இருக்கும். எனவே, நானோவுக்குப் பதிலாக இதை வாங்கினால், பெரிய கார் வைத்திருக்கிறோம் என்ற உணர்வு கிடைக்கும். பழைய ஐ10 காரில் 1.1 லிட்டர் இன்ஜின், 1.2 லிட்டர் Kappa இன்ஜின், அப்டேட்டட் Kappa2 இன்ஜின் கொண்ட கார்கள் கிடைக்கும். யூஸ்டு கார்களில் கொஞ்சம் விலை அதிகமாக இருந்தாலும், இந்த Kappa2 இன்ஜின் கொண்ட ஐ10 கார்கள்தான் பெஸ்ட். காரை டெஸ்ட் டிரைவ் செய்யும்போது ஸ்டீயரிங் நன்றாக இருக்கிறதா என்று பாருங்கள். ஏ.சியில் இருந்து சத்தம் வருகிறதா என்று சோதியுங்கள். ஏ.சி கம்ப்ரஸர் பழுதடைந்திருந்தால், சரிசெய்ய சுமார் 16 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். சஸ்பென்ஷனில் இருந்து சத்தம் வருகிறதா என்றும் பாருங்கள். 2013 மாடல் ஐ10 கார்கள் சுமார் 3.5 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கும். 

 நான் இப்போது 2010 மாடல் மாருதி டிஸையர் VDi கார் வைத்திருக்கிறேன். 1,55,000 கி.மீ ஓடிவிட்டது. சிவில் இன்ஜினீயர் என்பதால், ஒரு நாளைக்கு 150 முதல் 200 கி.மீ வரை பயணிப்பேன். கார் ஒரு லட்சம் கி.மீ தாண்டியதில் இருந்தே சர்வீஸுக்கு அதிகம் செலவழிக்கிறேன். ஒவ்வொரு 10,000 கி.மீ-க்கும் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை செலவாகிறது. இன்னும் ஒரு லட்சம் கி.மீ-க்கு இந்த காரையே பயன்படுத்தலாமா அல்லது யூஸ்டு மஹிந்திரா பொலேரோ (செல்லும் இடங்கள் காரணமாக) கார் வாங்கலாமா?

- குமரேஷ் ராஜகோபாலன், கோபிசெட்டிபாளையம்

 நீங்கள் எவ்வளவு சீக்கிரம் டிஸையருக்கு ரெஸ்ட் கொடுக்கிறீர்களோ, அவ்வளவு நல்ல யூஸ்டு பொலேரோ காரை வாங்க முடியும்.

மோட்டார் கிளினிக்

 ஹோண்டா சிவிக் காரை யூஸ்டு கார் சந்தையில் வாங்க விரும்புகிறேன். சென்னையில் பதிவு செய்யப்பட்ட ஒரு சிவிக் காரைப் பார்த்துள்ளேன். 2009-ம் ஆண்டில் வாங்கப்பட்ட சிவிக் SMT வேரியன்ட் அது. இதுவரை 54,000 கி.மீ ஓடியிருக்கிறது. ஒரே ஓனர்தான். நல்ல நிலையிலும் உள்ளது. இந்த காரை என்ன விலைக்கு வாங்கலாம்?

- பூபதி தேவி (மெயில்)

 54,000 கி.மீ ஓடிய 2009 ஹோண்டா சிவிக் SMT மாடல் காரை 3.5 லட்சம் ரூபாயில் இருந்து 4 லட்சம் ரூபாய் வரை வாங்கலாம். கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவான கார் என்பதால், காரின் கீழ்ப்பக்கம் அடி ஏதும் பட்டிருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். சிவிக் காரின் அகலமும் அதிகம். அதனால், காரின் முன்/பின் பம்பர்களின் பக்கவாட்டுப் பகுதிகளில் ஸ்க்ராட்ச், டேமேஜ்களை மறைத்திருக்கிறார்களா என்றும் பாருங்கள். சர்வீஸ் ரெக்கார்டை சோதனை செய்தால், காரின் முழு விபரங்களையும் தெரிந்துகொள்ளலாம். டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு வாங்குங்கள்.

 150/160 சிசி செக்மென்ட் பைக் ஒன்றை வாங்க விரும்புகிறேன். பஜாஜ் பல்ஸர் 150, ஹோண்டா சிபி யூனிகார்ன் 160, யமஹா FZ-S V2.0, சுஸூகி ஜிக்ஸர்  என இத்தனை பைக்குகளில், எனக்கு எது பெஸ்ட் என்பது புரியவில்லை. எனக்கு 20 வயது ஆகிறது. உயரம் 5.2 அடி. லிட்டருக்கு 40 முதல் 50 கி.மீ மைலேஜ் இருந்தால் ஓகே. இந்த பைக்குகளில் எது எனக்கு பெஸ்ட்?

- வீரசேகர் (மெயில்)

மோட்டார் கிளினிக்

 இந்த பைக்குகளில் யூனிகார்ன் 160 தவிர, மற்ற அனைத்து பைக்குகளும் ஸ்போர்ட்டியான அப்பீல் கொண்டவை. நிம்மதியான ஓனர்ஷிப்தான் வேண்டும் என்றால், ஹோண்டா சிபி யூனிகார்ன் 160 வாங்கலாம். ஆனால், உங்கள் வயதைப் பார்க்கும்போது ‘ஸ்போர்ட்டி’ பைக்கைத்தான் விரும்புவீர்கள் என்றுபடுகிறது. எனவே, உங்களுக்கு யமஹா FZ-S V2.0 மற்றும் சுஸூகி ஜிக்ஸர் பைக்குகளைப் பரிந்துரைக்கலாம். இதில், யமஹா பைக் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பம் கொண்டது. ஆனால், ஜிக்ஸரில் கார்புரேட்டர்தான் இருக்கிறது. அதிகம் செலவு செய்ய முடியும் என்றால், 93,326 ரூபாய் கொடுத்து யமஹா FZ-S V2.0 வாங்கலாம். இல்லையென்றால், 82,460 ரூபாய் கொடுத்து ஜிக்ஸர் வாங்கலாம்.