Published:Updated:

யாருக்கும் சொல்லாதீங்க!

யாருக்கும் சொல்லாதீங்க!

புதிய ஜாஸ் மற்றும் அக்கார்டு கார்களின் அறிமுகத்தைத் தள்ளிப்போட்டிருக்கிறது ஹோண்டா. புதிய திட்டத்தின்படி, ஜாஸ் ஜூன் மாதம் முதல் விற்பனைக்கு வரும். புதிய அக்கார்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின்போது விற்பனைக்கு வரும்.

யாருக்கும் சொல்லாதீங்க!

சென்னையில் தயாராகும் பிஎம்டபிள்யூ!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து பைக் தயாரிப்புப் பணிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, சென்னை கார் தொழிற்சாலையில் பைக் தயாரிப்புப் பணிகளைத் துவக்கவும் தயாராகிறது பிஎம்டபிள்யூ. நேரடியாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் பைக்குகளைவிட, இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யும் பைக்குகளுக்கான வரி குறைவு என்பதால்தான் இந்தத் திட்டம். முதல் கட்டமாக, F700 மற்றும் F800 பைக்குகளை அசெம்பிள் செய்யும் பணியை இந்த ஆண்டு இறுதியில் துவங்குகிறது பிஎம்டபிள்யூ.

யாருக்கும் சொல்லாதீங்க!

போல்ட்டில் பவர்ஃபுல் இன்ஜின்!

டாடா போல்ட் பெட்ரோல் மாடலில், பவர்ஃபுல் இன்ஜினை அறிமுகப் படுத்துகிறது டாடா. தற்போது இருக்கும் ரெவோட்ரான் பெட்ரோல் இன்ஜினின் அதிகபட்ச சக்தி 89bhp. இப்போது பவர்ஃபுல் வேரியன்ட்டாகக் களமிறங்கும் புதிய மாடலின் சக்தி 120bhp. அதிக சக்தியைச் சமாளிப்பதற்காக, இந்த இன்ஜின் மாடலில் ஃபியட்டின் C501 கியர்பாக்ஸ் பொருத்தப்பட இருக்கிறது.

சொனாட்டாவுக்கு பதில் அஸீரா!

மீண்டும் சொனாட்டாவை விற்பனையில் இருந்து நிறுத்துகிறது ஹூண்டாய். சொனாட்டா, சொனாட்டா கோல்டு, சொனாட்டா எம்பெரா, சொனாட்டா ட்ரான்ஸ்ஃபார்ம், ஃப்ளூயிடிக் சொனாட்டா எனப் பல மாடல்களைக் கொண்டுவந்து எவ்வளவோ முயற்சித்தும், ஹூண்டாயால் இந்த காரை அதிக அளவில் விற்க முடியவில்லை. கடந்த ஆறு மாதங்களில், 10 சொனாட்டா கார்கள்கூட விற்பனையாகவில்லை. இதனால், இதன் தயாரிப்பை நிறுத்திவிட்டது ஹூண்டாய். சொனாட்டாவுக்குப் பதிலாக, அஸீரா எனும் பிரீமியம் செடான் காரை இந்தியாவுக்குள் கொண்டுவரும் திட்டத்தில் இருக்கிறது ஹூண்டாய்.