Published:Updated:

அன்பு வணக்கம் !

அன்பு வணக்கம் !

அன்பு வணக்கம் !

அன்பு வணக்கம் !

Published:Updated:
அன்பு வணக்கம் !

றவும் நட்பும் உற்சாகமாகப் புறப்பட்டு விழாக்கள், விசேஷங்கள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா, ஷாப்பிங் எனப் போய்வர இருப்பவைதான், விறிக்ஷி எனப்படும் மல்டி பர்ப்பஸ் வெஹிக்கிள்ஸ். சில ஆண்டுகளுக்கு முன்பு, இனோவாவை விட்டால் வேறு சாய்ஸே இல்லை எனும் அளவுக்கு, அது மட்டும்தான் கோலோச்சிக்கொண்டிருந்தது. ஆனால், இப்போது மார்க்கெட்டில் எட்டு எம்பிவி கார்கள் இருக்கின்றன. 

'மிகவும் பெரிதாக இருக்கிறது; ஸ்டைலான டிஸைன் இல்லை; டாக்ஸிக்காரர்கள் ஓட்டும் கார் போல இருக்கிறது’ என்று எம்பிவி கார்களைப் பற்றி ஏராளமான விமர்சனங்கள் இருந்தாலும், குடும்பத்தோடு பயணம் செய்ய இதில் கிடைக்கும் வசதி, வேறு எதிலும் இல்லை. அதனால், இவற்றின் டிமாண்ட் எப்போதும் ஏறுமுகம்தான். காம்பேக்ட் காரை ஓட்டுகிற அதே செளகரியம், ஸ்மூத்தான இன்ஜின் என கார் நிறுவனங்கள் நிறைய மெனக்கெட்டதும், வாடிக்கையாளர்களுக்கு சாய்ஸ் அதிகமானதற்குக் காரணம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏறக்குறைய, எஸ்யுவி கார் போல பிரமாண்டமான தோற்றம்கொண்ட டாடா ஆர்யா மற்றும் மஹிந்திரா ஸைலோ ஒருபுறம்... கவர்ச்சிக்கும் கச்சிதத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட  ஹோண்டா மொபிலியோ, மாருதி எர்டிகா, செவர்லே என்ஜாய் ஆகியவை இன்னொரு புறம்... 'வெளிப்புறத்தோற்றம் முக்கியம் இல்லை. காருக்குள் இடம் தாராளமாக இருக்க வேண்டும்’ என்ற குறிக்கோளோடு டிஸைன் செய்யப்பட்டிருக்கும் நிஸான் எவாலியா மறுபுறம்  இப்படி கடும் போட்டிகளால் சூடாக இருக்கும் இந்தக் களத்துக்கு, புதிதாக ரெனோவின் லாஜியும் வந்து இறங்கியிருக்கிறது. 

எம்பிவி வாங்க நினைக்கும் ஒரு வாடிக்கையாளர், இந்த எட்டு கார்களில் தனது தேவைக்கு ஏற்ற காரை சுலபமாகத் தேர்ந்தெடுக்க உதவும் வகையில், இந்த எட்டு கார்களையும் ஒரே சமயத்தில் ஓட்டிப் பார்த்து ரிசல்ட்டை வெளியிட்டிருக்கிறோம். 

க்ராஸ்ஓவர் மார்க்கெட்டும் இப்போது திரும்பிப் பார்க்கவைக்கும் அளவுக்குக் கவனம் ஈர்க்கிறது. எட்டியோஸ் கிராஸ், ஃபியட் அவென்ச்சுராவை அடுத்து  ஹூண்டாய் வீ20 ஆக்டிவ் மார்க்கெட்டுக்கு வந்திருக்கிறது. 'நல்ல பிள்ளை’ தோற்றம்கொண்ட காம்பேக்ட் கார்கள்கூட, படு கவர்ச்சியான க்ராஸ்ஓவர் கார்களாக மாறியிருக்கின்றன. ஆனால், இந்த மாற்றங்கள் எல்லாம் வெளித்தோற்றத்தில் மட்டும்தானா அல்லது கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் இன்ஜின் ஆகியவற்றிலுமா என்பதை வாடிக்கையாளர்களுக்குச் சொல்ல, மேலும் ஒரு கம்பாரிஸன் டெஸ்ட் இந்த இதழில் இடம் பெற்றிருக்கிறது. 

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, இளைஞர்களின் பல்ஸை எகிறவைக்கும் பல்ஸர், கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட தொய்வைச் சரிசெய்ய, பல்ஸர் 200 பைக்குக்குப் புதிய தோற்றமும் புதிய பரிமாணமும் கொடுத்துக் களம் இறக்கியிருக்கிறது. பார்க்கும்போதே இளைஞர்களின் இதயங்களை எகிறவைக்கும் பல்ஸர், சாலைகளில் ஓட்டுவதற்கு எப்படி இருக்கிறது என்பதையும் ஓட்டிப் பார்த்துச் சொல்லியிருக்கிறோம்.

என்றும் உங்களுக்காக

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism