Published:Updated:

க்ராஸ்ஓவர் போட்டா போட்டி !

வெல்லுமா i20 ஆக்டிவ் ?Hyundai i20 Active vs Fiat Avventura vs Toyota Elios Crossதொகுப்பு : ராஜா ராமமூர்த்தி

க்ராஸ்ஓவர் போட்டா போட்டி !

வெல்லுமா i20 ஆக்டிவ் ?Hyundai i20 Active vs Fiat Avventura vs Toyota Elios Crossதொகுப்பு : ராஜா ராமமூர்த்தி

Published:Updated:

டொயோட்டா, ஃபியட், ஹூண்டாய் ஆகிய மூன்று நிறுவனங்களிடமும், ஃபோர்டு எக்கோஸ்போர்ட் காருக்குச் சவால் விடும் வகையில், ஒரு காம்பேக்ட் எஸ்யுவி இல்லை. எனவே, தங்களுடைய ஹேட்ச்பேக் கார்களை, க்ராஸ்ஓவர் கார்களைப் போலக் கட்டமைத்துப் போட்டியிடுகின்றன. இதில் லேட்டஸ்ட் - ஹூண்டாய் i20 ஆக்டிவ்! ஃபியட் அவென்ச்சுரா, டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் ஆகிய கார்களுடன் ஒப்பிடும்போது, i20 ஆக்டிவ் எப்படி?

டிஸைன்

இந்த மூன்று கார்களுமே, அடிப்படையில் சாதாரண ஹேட்ச்பேக் கார்கள்தான். ஆனால், அவற்றை எப்படி மாற்றியமைத்திருக்கிறார்கள் என்பதில்தான் விஷயமே இருக்கிறது. i20 ஆக்டிவ் காரின் கிரவுண்ட் கிளியன்ஸ், 190 மிமீ (இது i20 ஹேட்ச்பேக் காரைவிட 20 மிமீ அதிகம்). அலுமினியம் ரூஃப் ரெயில்ஸ், மிரட்டலான பம்பர்கள், பாடி கிளாடிங்குகள், LED ரன்னிங் லைட்ஸ், ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், கார்னரிங் லைட்ஸ் என அசத்துகிறது i20 ஆக்டிவ். இந்த வசதிகள் சாதாரண i20 காரில் கிடையாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

க்ராஸ்ஓவர் போட்டா போட்டி !

ஆனால், அவென்ச்சுராதான் டிஸைனில் மிரட்டுகிறது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் புன்ட்டோவில் இருந்து 20 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூஃப் ரெயில்ஸ், கரடுமுரடான பம்பர்கள், பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ள ஸ்பேர் வீல் என பார்க்க எஸ்யுவி போலவே இருக்கிறது. பின்பக்கக் கதவு திறக்கும் விதம்தான் எளிதாக இல்லை.

டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் காரின் டிஸைன், திகட்டுகிறது. ரொம்பவும் மிரட்டலாக வடிவமைக்க முயற்சி செய்திருக்கிறது டொயோட்டா. ஆனால், அதைச் செய்தவிதம் சரியாக இல்லை; பார்க்கவும் அழகாக இல்லை; இதன் கிரவுண்ட் கிளியரன்ஸில் மாற்றமும் இல்லை.

உள்ளே

நாம் டெஸ்ட் செய்த சில்வர் கலர் i20 ஆக்டிவ் காரில், இன்டீரியர் கறுப்பு மற்றும் நீல வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கலர் காம்பினேஷன் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். டேஷ்போர்டு டிஸைன் லேட்டஸ்ட்டாகவும், ஸ்மார்ட்டாகவும் உள்ளது. தரமும் நன்றாக இருக்கிறது.

அவென்ச்சுராவின் டேஷ்போர்டு டிஸைன், ரொம்ப அழகாக இருந்தாலும் தரம் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இல்லை. டேஷ்போர்டு பிளாஸ்டிக் தொடுவதற்கு நன்றாக உள்ளது. காம்பஸ், பிட்ச், லீன் மீட்டர்கள் செம கெத்தாக இருக்கின்றன. இதன் ஸ்டீயரிங் உயரமாகவும், நெஞ்சுக்கு அருகிலும் இருப்பதாலும், டிரைவிங் பொசிஷன் வசதியாக இல்லை. முன்பக்க இருக்கைகளின் குஷன் சூப்பர்.

க்ராஸ்ஓவர் போட்டா போட்டி !

எட்டியோஸ் கிராஸ் காரின் உள்பக்கம், லிவாவைவிடப் பரவாயில்லை ரகம்தான். இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் டிஸைன் சுமார். பாகங்களின் தரம் ஹூண்டாய் அளவுக்கு இல்லை. எட்டியோஸ் கிராஸ் காரின் இருக்கைகளும் சூப்பர்தான். ஃப்ளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல் ஸ்போர்ட்டியாக உள்ளது.

இந்த மூன்று கார்களில் சொகுசான, இடவசதி அதிகம்கொண்ட கார் என்றால், அது i20 ஆக்டிவ்தான். எட்டியோஸ் கிராஸ் காரின் பின்னிருக்கை இடவசதி நன்றாக இருந்தாலும், இருக்கைகள் மிகவும் தட்டையாக இருக்கின்றன. அவென்ச்சுராவில் கால்வைக்க இடம் குறைவு. ஆனால், இருக்கைகள் சொகுசு.

க்ராஸ்ஓவர் போட்டா போட்டி !

i20 ஆக்டிவ் காரில், நான்கு கதவுகளிலும் 1 லிட்டர் பாட்டில் வைக்க இடங்கள் உள்ளன. கியர் லீவருக்குப் பின்புறம் இரு கப் ஹோல்டர்கள், ஏ.சி கன்ட்ரோலுக்குக் கீழ் இடம் என பயன்படுத்த வசதியான காராக இருக்கிறது. அவென்ச்சுராவில் ஒரு கப் ஹோல்டர், சின்ன டோர் பாக்கெட்டுகள்தான் உள்ளன. க்ளோவ் பாக்ஸும் சிறிதுதான். எட்டியோஸில் பெரிய க்ளோவ் பாக்ஸ், பெரிய கப் ஹோல்டர்கள் உள்ளன. டிக்கி கொள்ளளவு i20 ஆக்டிவ் காரில் 285 லிட்டர்; அவென்ச்சுராவில் 280 லிட்டர்; எட்டியோஸ் கிராஸில் 251 லிட்டர்.

வசதிகள்

வழக்கம்போல, இங்கும் ஹூண்டாய் காரில்தான் வசதிகள் அதிகம். ‘SX’ வேரியன்ட்டில் கீ-லெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், எலெக்ட்ரோக்ரோமிக் ரியர்வியூ மிரர் (வெளிச்சத்தைப் பொறுத்து தானாகவே Dim ஆகிக்கொள்ளும்), சிடி/AUX/ப்ளூடூத்/USB/1GB ஸ்டோரேஜ் கொண்ட மியூஸிக் சிஸ்டம், ஸ்டீயரிங் கன்ட்ரோல்ஸ், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்ஸார், ரியர் வியூ கேமரா போன்ற வசதிகள் இருக்கின்றன.

க்ராஸ்ஓவர் போட்டா போட்டி !

அவென்ச்சுராவின் எமோஷன் வேரியன்ட்டில் கீ-லெஸ் என்ட்ரி, ஆட்டோ ஹெட்லைட்ஸ், ரியர் வியூ கேமரா போன்ற வசதிகள் இல்லை. ஆனால், வாய்ஸ் ரிகெக்னிஷன், எஸ்எம்எஸ் ரீடு-அவுட் போன்ற வசதிகள் உள்ளன. ப்ளூடூத் மியூஸிக் ஸ்ட்ரீமிங் வசதி இல்லை. முக்கியமாக, அவென்ச்சுராவிலும் i20 ஆக்டிவ் காரிலும் ரியர் ஏ.சி வென்ட் உள்ளன. எட்டியோஸில் இல்லை. ஆனால், USB/aux/சிடி/ப்ளூடூத் வசதிகள்கொண்ட 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், அட்ஜஸ்டபிள் (முன்/பின்) ஹெட்ரெஸ்ட்டுகள் உள்ளன. கிளைமேட் கன்ட்ரோல் இல்லை. ஆனால், அனைத்து வேரியன்ட்டுகளிலும் 2 காற்றுப் பைகளைக் கொடுத்து ‘குட்பாய்’ இமேஜைத் தட்டிச் செல்கிறது டொயோட்டா. மற்ற இரண்டு கார்களிலும் காற்றுப் பைகளுக்கு விலை உயர்ந்த வேரியன்ட்தான் வாங்க வேண்டும்.

க்ராஸ்ஓவர் போட்டா போட்டி !

இன்ஜின், பெர்ஃபாமென்ஸ்

i20 ஆக்டிவ் காரில் 89 bhp சக்தியை அளிக்கும் ஸ்மூத்தான 1.4 லிட்டர் டீசல் இன்ஜின். டர்போ லேக்கைத் தாண்டி 2,000 ஆர்பிஎம்-க்கு மேல் நல்ல பவர் டெலிவரியைத் தருகிறது. 0-100 கி.மீ வேகத்தை 12.79 விநாடிகளில் அடைகிறது, i20 ஆக்டிவ் டீசல். நல்ல மிட்-ரேஞ்ச், ஆறாவது கியர் இருப்பதால், நெடுஞ்சாலைப் பயணங்களில் இன்ஜினை விரட்ட வேண்டியது இல்லை.

க்ராஸ்ஓவர் போட்டா போட்டி !

அவென்ச்சுராவின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் இன்ஜின் 92 bhp சக்தியையும், 21.3 kgm டார்க்கையும் அளிக்கிறது. டர்போ லேக் மிக அதிகம். 2,500 ஆர்பிஎம்-க்கு மேல் பவர் டெலிவரி ஸ்ட்ராங்காக இருப்பது செம கிக். 0-100 கி.மீ வேகத்தை 15.10 விநாடிகளில் அடைகிறது அவென்ச்சுரா.

க்ராஸ்ஓவர் போட்டா போட்டி !

டொயோட்டாவின் 1.4 லிட்டர் இன்ஜின் 67  bhp சக்தியை அளிக்கிறது. இந்த செக்மென்ட்டிலேயே வீக்கான இன்ஜின் இதுதான். ஆனால், டர்போ லேக் இல்லை. இதனால், சிட்டி டிராஃபிக்கில் ஓட்ட எளிதாக இருக்கிறது. அதிகமாக ரெவ் செய்தால், சத்தம் மட்டுமே வருவது இந்த இன்ஜினின் மைனஸ்.

ஓட்டுதல் தரம், கையாளுமை

ஹூண்டாய் i20 ஆக்டிவ் காரின் ஸ்டீயரிங், எதிர்பார்த்ததுபோலவே லைட்டாகத்தான் இருக்கிறது. மோசமான சாலைகளில் கொஞ்சம் குலுங்கியபடிதான் செல்கிறது ஆக்டிவ். வளைக்கும்போது பாடி ரோல் இருப்பதை உணர முடிகிறது. காரணம், சாதாரண i20 காரைவிட, அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதுதான்.

ஃபியட் அவென்ச்சுராவிலும் பாடி ரோல் இருக்கிறது. மோசமான சாலைகளில் ஸ்டேபிளாகச் செல்வது அவென்ச்சுராதான்.

இந்த மூன்று கார்களில், எட்டியோஸ் கிராஸின் ஸ்டீயரிங் ரொம்பவே எடை குறைவாக இருக்கிறது.  ஸ்டீயரிங்கை முழுவதும் வலது பக்கத்தில் இருந்து இடதுபக்கம் கொண்டு செல்ல அதிகமாகச் சுற்ற வேண்டும் என்பது மைனஸ். ஓட்டுதல் தரத்தில் முன்னணியில் இருப்பது, எட்டியோஸ் கிராஸ். பாடி ரோல் கொஞ்சம் இருந்தாலும், ஸ்டெபிளிட்டி சூப்பர்.

டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் VD வேரியன்ட்டின் சென்னை ஆன்ரோடு விலை 9.10 லட்சம்.

க்ராஸ்ஓவர் போட்டா போட்டி !

இதுதான் இந்த மூன்று கார்களில், விலை குறைந்த கார். ஹூண்டாய் i20 ஆக்டிவ் SX மாடலின் விலை 10.36 லட்சம். ஃபியட் அவென்ச்சுரா எமோஷன் மாடலின் விலை 10.10 லட்சம்.

இங்குதான் சிக்கல். எட்டியோஸ் - i20 காருக்கோ, அவென்ச்சுராவுக்கோ போட்டி கிடையாது. ஒருபடி செக்மென்ட் குறைவான கார் எட்டியோஸ். இதன் சுமாரான இன்ஜின்தான் பெரிய மைனஸ்.
அவென்ச்சுராதான் ஸ்டைலிங்கில் சிக்ஸர் அடித்திருக்கிறது. ஸ்டீயரிங் எடை அதிகமாக இருப்பது, பெரிய சைஸ், இறுக்கமான சஸ்பென்ஷன் செட்-அப், சோம்பலான திராட்டில் ரெஸ்பான்ஸ் ஆகியவை சிட்டி டிராஃபிக்கில் அவென்ச்சுராவை ஓட்ட வசதியாக இல்லை.

லைட் ஸ்டீயரிங், ஸ்ட்ராங் இன்ஜின், பேலன்ஸாக இருக்கும் ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை, எண்ணற்ற வசதிகள், ஸ்மார்ட்டான டிஸைன் என சரியான காராக இருக்கிறது ஹூண்டாய் i20 ஆக்டிவ். 10.26 லட்சம் ரூபாய் விலை அதிகம்தான். ஆனால், நம்பி காசைக் கொடுக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism