Published:Updated:

லிட்டருக்கு 100 கி.மீ. மைலேஜ் !

VOLKSWAGEN XL 1ர.ராஜா ராமமூர்த்தி

லிட்டருக்கு 100 கி.மீ. மைலேஜ் !

VOLKSWAGEN XL 1ர.ராஜா ராமமூர்த்தி

Published:Updated:

லகிலேயே, ஒரு லிட்டர் டீசலில், 100 கி.மீ மைலேஜ் தரும் ஒரே கார், ஃபோக்ஸ்வாகன் XL 1. அதனால்தான் இந்த காருக்கு, ‘1 லிட்டர் கார்’ எனப் பெயர். ஃபெர்ஃபாமென்ஸின் உச்சமான புகாட்டி வெய்ரான் காரை உருவாக்கிய ஃபோக்ஸ்வாகன் குழுமம்தான், மைலேஜின் மணிமகுடமாக இருக்கும் XL 1 காரையும் உருவாக்கியுள்ளது. ‘மிக அதிக மைலேஜ், மிகக் குறைவான மாசு’ என்பதை மட்டுமே இலக்காக வைத்து, இந்த காரை உருவாக்கியுள்ளது ஃபோக்ஸ்வாகன்.

இது ஒரு டீசல் ஹைபிரிட் கார். லிட்டருக்கு 100 கி.மீ்் மைலேஜ் தந்தாலும், போட்ட காசை எடுக்க நீங்கள் ஐந்து லட்சம் கி.மீ தூரம் ஓட்ட வேண்டும். ஏனென்றால், வரிகள் சேர்த்து இதன் விலை, சுமார் 1.5 கோடி ரூபாய். வரிகள் இல்லாமல் சுமார் 74 லட்ச ரூபாய். 

புகைப்படங்களில் பெரிதாகத் தெரியும் XL 1 - லம்போகினி காரைவிட தாழ்வாக, டாடா நானோ காரைவிட குறுகலாக, போலோ காரைவிட நீளம் குறைவாக இருக்கிறது. ஆனால், ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தில் வரும் ஸ்டார் ஷிப் போல ‘ஏலியன்’ லுக்கில் இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லிட்டருக்கு 100 கி.மீ. மைலேஜ் !

காரின் வடிவம் காற்றை எளிதாகக் கிழித்துக்கொண்டு செல்ல வேண்டும் என்பதால், பார்த்துப் பார்த்து ஏரோடைனமிக்காக வடிவமைத்திருக்கிறார்கள். நீர்த்துளியின் வடிவம்போல பின்பக்கம் மெலிதாக இருக்கிறது.

XL 1 காரின் எடை வெறும் 795 கிலோ மட்டுமே என்பதும் இதன் அதிக மைலேஜுக்கு ஒரு காரணம். எடை குறைந்த கார்பன் - ஃபைபர் மோனோகாக் மற்றும் அலுமினியம் கொண்ட இதன் கட்டமைப்பில், 60 கிலோ லித்தியம் - ஐயான் பேட்டரி பேக், ஏ.சி, கிராஷ் சேஃப்டி பாகங்கள் ஆகியவற்றைச் சேர்த்தே வெறும் 795 கிலோ என்பது சாதனைதான். முன்பக்கம் 115/80 செக்‌ஷன், பின்பக்கம் 145/55 செக்‌ஷன் கொண்ட சின்ன டயர்கள்தான் உள்ளன. ரியர்வியூ மிரர்களுக்குப் பதில் கேமராக்கள். இதன் டீசல் டேங்க் கொள்ளளவு 10 லிட்டர் மட்டுமே!

ஸ்டைலான முன்பக்கக் கதவுகளைத் திறந்து உள்ளே அமர்ந்தால், தரையோடு தரையாக இருப்பதுபோல இருக்கிறது. அந்த அளவுக்குத் தாழ்வாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. 2 சீட்டர் கார்தான். ஆனால், காரின் அகலம் குறைவு என்பதால் டிரைவர் இருக்கை, பயணியின் இருக்கையைவிட சற்று முன்னே தள்ளி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இருவரும் தோள்பட்டையை இடித்துக்கொள்ளாமல் பயணிக்கலாம். போலோவில் பயன்படுத்தப்பட்டுள்ள சுவிட்ச்சுகள் XL 1 காரில் உள்ளன. டேஷ்போர்டு டிஸைன் ரொம்ப சிம்பிள்.

லிட்டருக்கு 100 கி.மீ. மைலேஜ் !

பழைய போலோவில் இருந்த 1.6 லிட்டர் TDI டீசல் இன்ஜினை பாதியாக வெட்டி, காரின் நடுவே மிட்- இன்ஜின் லே-அவுட் முறையில் வைத்துவிட்டது ஃபோக்ஸ்வாகன். இந்த 830 சிசி ட்வின் சிலிண்டர் டீசல் இன்ஜின் 47 bhp சக்தியை அளிக்க, 27 bhp சக்தியை அளிக்கிறது எலெக்ட்ரிக் மோட்டார். மொத்தம் 74 bhp சக்தியுடன், 795 கிலோ எடைகொண்ட XL 1, 0-100 கி.மீ வேகத்தை வெறும் 12.7 விநாடிகளில் தொடுகிறது.

ஆரம்ப வேகம் முழுக்கவே எலெக்ட்ரிக் சக்தியில்தான். 40 கி.மீ தூரத்துக்கு மின்சாரம் மூலம் ஓட்ட முடியும். அதன்பிறகு, டீசல் இன்ஜின் ஆன் ஆகிவிடும். கார் பார்ப்பதற்கு மிகவும் ஹைடெக்காக இருந்தாலும், இந்த 2 சிலிண்டர் டீசல் இன்ஜின் அதிகம் சத்தம் போடுகிறது. எடை குறைவாக இருக்க வேண்டும் என்பதால், சத்தத்தைக் குறைப்பதற்கான இன்சுலேஷன் குறைவுதான். ஒரு சாதாரண கார் போல டயர், சஸ்பென்ஷன், டிரான்ஸ்மிஷன் போன்ற பாகங்களில் இருந்து சத்தங்கள் கேட்கின்றன.

எலெக்ட்ரிக் மோட்டார், டீசல் இன்ஜின் என 2 சக்திகளையும் இணைத்து ஓட்டினால், பெர்ஃபாமென்ஸ் நன்றாகவே இருக்கிறது. பிரேக் பூஸ்ட்டர் இல்லாததால், பிரேக் போடும்போது நம்பிக்கையான உணர்வு இல்லை. ரிவர்ஸ் எடுக்கும்போது ஸ்க்ரீனைப் பார்த்துக்கொண்டு ரிவர்ஸ் எடுப்பதும் அப்படித்தான் இருக்கிறது.

லிட்டருக்கு 100 கி.மீ. மைலேஜ் !

 சாதாரண ஹேட்ச்பேக்கைவிட சிறப்பான ஸ்டெபிளிட்டியைக் கொண்டுள்ளது XL 1. டயர்கள் சிறிதாக இருந்தாலும் பாடி ரோலும், க்ரிப்பும் சிறப்பாக இருக்கின்றன. அதேபோல், எடையைக் குறைப்பதற்காக, மேனுவல் ஸ்டீயரிங்கையே கொண்டிருக்கிறது. ஆனால், காரின் முன்பக்க எடை குறைவாக இருப்பதால், திருப்ப கடினமாக இல்லை.

வருங்காலத்தில் வெளியாகும் ஃபோக்ஸ்வாகன் கார்களில், XL 1 கார்களில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் இருக்கும். அப்படியென்றால், அடுத்த போலோ காரும் பார்க்க XL 1 போலவே இருக்குமோ இல்லையோ, நிச்சயம் மைலேஜ் அதிகமாக இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism