விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் செவர்லே ட்ரெய்ல்ப்ளேஸர் எஸ்யுவி காரை, இந்தியா முழுவதும் டெஸ்ட் செய்துவருகிறது, ஜெனரல் மோட்டார்ஸ். நாமக்கல் அருகே டெஸ்ட் செய்யப்பட்டுக் கொண்டிருந்த செவர்லே ட்ரெய்ல்ப்ளேஸர் எஸ்யுவி கார்களை ஸ்பை படம் எடுத்துள்ளார், மோட்டார் விகடன் வாசகர் சபரிநாதன்.

இந்தியாவில் 2.8 லிட்டர் டீசல் இன்ஜினோடு விற்பனைக்கு வரவிருக்கிறது ட்ரெய்ல்பிளேஸர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த இன்ஜின் 200 bhp சக்தியையும், 500 Nm டார்க்கையும் அளிக்கிறது. காரில் செவர்லேவின் லேட்டஸ்ட் MyLink இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதால், இந்தியாவிலேயே CKD முறையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்ய இருக்கிறது ஜெனரல் மோட்டார்ஸ்.
அடையாளங்களை மறைத்து உங்கள் ஊரில் இப்படி ஏதாவது கார் அல்லது பைக் டெஸ்ட் செய்யப்படுகிறதா? அதை அப்படியே உங்கள் கேமராவில் பதிவுசெய்து எங்களுக்கு அனுப்புங்கள்!
அனுப்ப வேண்டிய முகவரி:
ரகசிய கேமரா, மோட்டார் விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை-600002.
email: motor@vikatan.com