Published:Updated:

டெக் - டாக் கேட்ஜெட்ஸ்

ஆதவன்

டெக் - டாக் கேட்ஜெட்ஸ்

ஆதவன்

Published:Updated:

விலை குறைவான, அதே சமயம் அட்டகாசமான ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது லெனோவோ. A7000 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த போனை, 8,999 ரூபாய் கொடுத்து ஃப்ளிப்கார்ட்டில் வாங்கலாம்.  ஏப்ரல் 15-ல், விற்பனைக்கு வந்த 4 விநாடிகளில் 30,000 போன்கள் விற்றுத் தீர்ந்திருக்கின்றன. ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் ஆபரேட்டிங் சிஸ்டம், 5.5 இன்ச் HD ஸ்க்ரீன், 1.5 Ghz octa-core ப்ராசஸர், 2 GB ராம் மெமெரி என டெக்னிக்கலாக செம ஸ்ட்ராங்காக இருக்கிறது A7000. இதுதான் Dolby Atmos தொழில்நுட்பத்துடன் வந்திருக்கும் முதல் ஸ்மார்ட்போன். உங்களிடம் Dolby எஃபெக்ட்ஸுடன் மிக்ஸ் செய்யப்பட்ட படம் இருந்தால், தியேட்டர் சவுண்டு எஃபெக்ட்டில் இதில் படம் பார்க்கலாம். 4G கனெக்டிவிட்டிகொண்ட இந்த போனில் 8 மெகாபிக்ஸல் ரியர் கேமரா, 5 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா உள்ளது. இன்டர்னல் ஸ்டோரேஜ் மெமரி 8 GB.

டெக் - டாக் கேட்ஜெட்ஸ்

போன் தயாரிப்பில் பிரபலமான மைக்ரோமேக்ஸ் நிறுவனம், இப்போது டி.வி தயாரிப்பில் இறங்கியுள்ளது. 50,000 ரூபாய்க்கு 4k (ஹை ரெசல்யூஷன்) தொழில்நுட்பம்கொண்ட இந்த டிவி, 49 இன்ச் திரைகொண்டது. ஆண்ட்ராய்டு ஓஎஸ் இருப்பதால், யு-ட்யூப் வீடியோக்களையும் டி.வியிலேயே பார்க்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெக் - டாக் கேட்ஜெட்ஸ்

கூகுளுக்குப் போட்டியாக, ஒரு இந்திய நிறுவனம் உருவாக்கிய மீடியா டாங்கிள்தான் Teewe. அமேஸான் தளத்தில் வெறும் 1,999 ரூபாய்க்குக் கிடைக்கும் இந்த Teewe மூலம், உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து டி.வி-க்கு ஸ்ட்ரீம் செய்யலாம். போனில் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்துவிட்டு, இந்த டாங்கிளை டி.வி-யின் HDMI போர்ட்டில் இணைத்துவிட்டால் போதும்; போனில் இருக்கும் வீடியோக்கள், யு-ட்யூப் வீடியோக்களை எளிதாக டி.வி-யில் கண்டுகளிக்கலாம். ஃபுல் HD வீடியோக்கள்கூட திக்காமல் திணறாமல் ஓடும்.

டெக் - டாக் கேட்ஜெட்ஸ்

டிஜிட்டல் கேமராவில் அடிப்படைகளைக் கற்ற பின்னர், அதே பேஸிக் மாடல் DSLR கேமராவையே வைத்துக்கொண்டிருந்தால், நம் திறமைக்குத் தீனி போட முடியாது. அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்காக இருப்பவைதான் ‘Advanced Beginner’ லெவல் கேமராக்கள். இந்த செக்மென்ட்டில் ஹிட், நிக்கான் D5300 கேமரா. வழக்கமான போட்டோகிராஃபி தவிர, ஃபுல் HD வீடியோவும் இந்தக் கேமராவில் எடுக்கலாம்.

டெக் - டாக் கேட்ஜெட்ஸ்

வை-ஃபை, ஜிபிஎஸ் வசதிகளும் உள்ளன. 24.2 மெகாபிக்ஸல் கேமராவான இதில், 3.2 இன்ச் LCD ஸ்க்ரீன் இருக்கிறது. ஆனால், டச் ஸ்க்ரீன் இல்லாதது மைனஸ். இதன் போட்டி கேமராவான கேனான் REBEL T5i கேமராவுடன் ஒப்பிடும்போது, அதிக ரெசல்யூஷன், சின்ன சைஸ், அதிக ஆட்டோஃபோகஸ் பாயின்ட்ஸ், குறைந்த எடை போன்ற ப்ளஸ் பாயின்ட்களைக் கொண்டிருக்கிறது நிக்கான். இதன் விலை 44,500 ரூபாய்.

டெக் - டாக் கேட்ஜெட்ஸ்

டேஷ்போர்டு கேமராக்களைத் தான் ‘டேஷ்கேம்’ என்று அழைக்கிறார்கள். நம் காரில் பொருத்திக் கொண்டால், இது சாலையைப் பதிவு செய்துகொண்டே வரும். யாரோ ஒருவர் மோசமாக கார் ஓட்டிக்கொண்டு, நம் காரில் இடித்துவிட்டு, ‘யோவ்.. நீதான்யா குறுக்க வந்த!’ என்று கத்தினால், இந்த கேமரா எடுத்த வீடியோவைக் காட்டி அவரை மடக்கலாம். 8,999 ரூபாய் விலையில் DrivePro 100, 9,899 ரூபாய் விலையில் DrivePro 200 ஆகிய 2 டேஷ்போர்டு கேமராக்களை இப்போது அமேஸான் மற்றும் ஸ்நாப்டீல் மூலம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது ட்ரான்ஸெண்ட்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism