Published:Updated:

செம கெத்து !

பா.சிதம்பர பிரியா, படங்கள்: ரா.ராம்குமார்

செம கெத்து !

பா.சிதம்பர பிரியா, படங்கள்: ரா.ராம்குமார்

Published:Updated:

ன்னதான் புதுப் புது மாடல் பைக்குகள் வந்தாலும் இந்தியாவின் அடையாளம், ராயல் என்ஃபீல்டு புல்லட்தான். சின்ன வயதில் புல்லட் பைக்கின் பின்னால் ஓட ஆரம்பித்த காலத்தில் இருந்து என்னுடைய கனவு, ஒரு புல்லட் பைக் வாங்குவது மட்டுமே! அதன் கம்பீரமும் சத்தமும் என்னை மயக்க்கிக்கொண்டே இருக்கிறது. சின்ன வயதில் உருவான வெறியும் ஆசையும் இப்போதுவரை கொஞ்சம்கூட குறையவே இல்லை. 
 
ஏன் புல்லட் 500?

இதற்கு முன்பு பழைய புல்லட், கிளாஸிக் 350, பல்ஸர் என மாற்றிக் கொண்டே இருந்திருக்கிறேன். கிளாஸிக் 350 மாடலில் இன்ஜின் சத்தமும், அதிர்வும் எனக்குப் பிடிக்கவில்லை. மேலும் 10,000 கி.மீ வாரன்டி காலத்திலேயே ஆயில் லீக்கேஜ், டிஸ்க் பிரேக் ஃபெய்லியர் என சர்வீஸ் சென்டருக்குப் போய்வந்துகொண்டே இருந்தேன். திருப்தியாகவும் இல்லை; என்னுடைய எதிர்பார்ப்புகளும் நிறைவேறவில்லை. புல்லட் 500 பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தேன். புல்லட் பீட், அதிக அதிர்வுகள் இல்லாதது, ரோடு கிரிப் என என்னைத் திருப்திப்படுத்துகிற எல்லா விஷயங்களும் கிடைத்தன. பழைய புல்லட்போன்ற லுக், ஓட்டுதல் அனுபவம் எல்லாமே சிறப்பாக இருந்ததால், புல்லட் 500 மாடலைத் தேர்வு செய்தேன்.

செம கெத்து !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷோரூம் அனுபவம்

திருநெல்வேலியில் உள்ள DG மோட்டார்ஸில் புக் செய்து மூன்று மாதங்களுக்குப் பிறகு கிடைத்தது எனது புல்லட் 500. ஆர்டர் செய்யும்போது இருந்த விலையைவிட, டெலிவரி எடுக்கும்போது 10,000 ரூபாய் விலை அதிகமாகிவிட்டது.

எப்படி இருக்கிறது புல்லட் 500?

இன்ஜின் 500 சிசி என்பதால், நெடுஞ்சாலையில் இதை ஓட்டும் அனுபவமே தனி. கிளாஸிக் 500, ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் டைப். ஆனால், ஸ்டாண்டர்டு புல்லட் 500 கார்புரேட்டர் இன்ஜின். எனவே, மைலேஜ் அதிகம்; பராமரிப்பு குறைவு. இதில் மணிக்கு 110 கி.மீ வேகம் வரை பயணம் செய்திருக்கிறேன். இன்ஜின் சூடாவதோ, அதிர்வதோ இல்லை. கிளாஸிக் 350 பைக்கில் டிஸ்க் பிரேக் 2,000 கி.மீ-யிலேயே பழுதடைந்துவிட்டது. ஆயில் லீக் பிரச்னை வேறு. ஆனால், புல்லட் 500 மாடலில் அது போன்ற எந்தப் பிரச்னையும் இல்லை. இதுவரை என் பயணம் மிக ஸ்மூத்தாகச் சென்றுகொண்டிருக்கிறது.

ப்ளஸ்

கிளாஸிக் 350 போல, டபுள் சீட் இல்லாமல் சிங்கிள் சீட் என்பதால், உட்கார்ந்து செல்ல மிக வசதியாக இருப்பதோடு, எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் அலுப்பு தெரிவது இல்லை. சீட் கிழியவோ, துருப்பிடிக்கவோ இதில் வாய்ப்பு இல்லை. பழைய புல்லட் மாதிரியே சீட் நல்ல கிரிப்புடன் இருக்கிறது. இன்ஜின், கியர் ஷிஃப்ட்டிங் 350 மாடலைவிட நன்றாக இருக்கிறது. பின்பக்க டயர் பெரிதாக இருப்பதால், ரோட் கிரிப் அருமையாக இருக்கிறது.

செம கெத்து !

மைனஸ்

டெக்னாலஜி வளர்ந்துகொண்டே இருக்கிறது. புல்லட்டிலும் டிஜிட்டல் ஸ்பீடா, ஓடோ மீட்டர்கள் கொடுத்திருக்கலாம். மேலும், பைக்கை லாக் செய்ய தனித் தனியாக இருப்பதற்்குப் பதிலாக, சென்டர் லாக் இருந்திருக்கலாம். தண்டர்பேர்டில் உள்ள புரொஜெக்ட்டர் ஹெட்லைட் இருந்தால், இன்னும் சூப்பராக இருந்திருக்கும். ஹார்ன் சத்தம் குறைவு. முன் பக்க வீலுக்கு டிஸ்க் பிரேக்; ஆனால், பின்பக்க வீலுக்கு டிரம் பிரேக் - இது ஒரு குறை.

என் தீர்ப்பு

பழைய புல்லட்டின் பல நல்ல அம்சங்கள், புதிய புல்லட் 500 மாடலில் கிடைப்பதால், எல்லா குறைகளையும் தாண்டி இந்த பைக்கை வாங்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism