Published:Updated:

அசத்தல் அவென்ச்சுரா !

FIAT AVVENTURA DIESEL ம.மாரிமுத்து, படங்கள்: நா.ராஜமுருகன்

அசத்தல் அவென்ச்சுரா !

FIAT AVVENTURA DIESEL ம.மாரிமுத்து, படங்கள்: நா.ராஜமுருகன்

Published:Updated:

சிறு வயதில் இருந்தே கார் வாங்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது. தொழில் தொடர்பாக, வெளியூர்களுக்குச் செல்லும் போது, நண்பர்களின் கார்களை ஓட்டிப் பார்ப்பேன். அதனால், காரின் மீது உள்ள ஈர்ப்பு மேலும்் அதிகமாக... புதிய கார் வாங்கிவிடலாம் எனத் தீர்மானித்து, வீட்டில் அனுமதி கேட்டேன். என்னுடைய கார் ஆசை அவர்கள் அறிந்ததுதான். உடனே ஓகே சொன்னாலும், குடும்பத்தோடு பயணிக்க வசதியான காரைத்தான் வாங்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டார்கள். பிறகென்ன? குடும்பத்தோடு பயணிக்க ஏற்ற கார் எது என்று தேடத் துவங்கினேன்.

ஏன் ஃபியட் அவென்ச்சுரா?

முதலில் ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட்டையும், மாருதி எர்டிகா-வையும் ஓட்டிப் பார்த்தேன். ஆனால், இவற்றின் டிஸைன், வசதிகள் எனக்குத் திருப்தியைத் தரவில்லை. வேறு ஆப்ஷன் இருக்குமா என நண்பர்களிடம் விசாரித்தபோது, ஃபியட் அவென்ச்சுராவைப் பற்றிச் சொன்னார்கள். ஃபியட் இன்ஜின் மற்றும் கட்டுமானத் தரம் குறித்து ஏற்கெனவே நான் கேள்விப்பட்டிருந்ததால், அவென்ச்சுராவைப் பார்க்கத் தீர்மானித்தேன். அவென்ச்சுராவின் லுக், செம ஸ்டைலிஷ் ஆக இருந்தது. நிறைய கலர் ஆப்ஷன் இருந்தாலும், வெண்மை நிறம் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே புக் செய்துவிட்டேன் .

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அசத்தல் அவென்ச்சுரா !

ஷோரூம் அனுபவம்?

மதுரையில் ஃபியட் டீலரான ‘ஃபோர்ஸா இட்டாலியா’ (Forza Italia) ஷோரூமுக்குச் சென்று காரைப் பற்றி விசாரித்தேன். காரின் சிறப்புகளைச் சொன்ன சேல்ஸ்மேன், என்னை ஷோரூம் அமைந்திருந்த அழகப்பா நகரில் இருந்து திருப்பரங்குன்றம் வரை காரில் உட்கார வைத்து அழைத்துச் சென்றார். பின்பு, அங்கிருந்து ஷோரூம் வரை, என்னை டெஸ்ட் டிரைவ் செய்யச் சொன்னார்கள். காரில் உட்கார்ந்து பயணித்தபோதும் சரி; டெஸ்ட் டிரைவ் செய்தபோதும் சரி; இரண்டுமே நல்ல அனுபவமாகவும் திருப்தியாகவும் இருந்தது. காரை புக் செய்த ஒரு வாரத்தில் தருவதாகச் சொன்னவர்கள், மூன்றே நாட்களில் டெலிவரி கொடுத்தனர். அது மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. வாடிக்கையாளராக எனக்கும் ஷோரூமுக்கும் நல்ல நட்பு தொடர்கிறது.

அசத்தல் அவென்ச்சுரா !

எப்படி இருக்கிறது அவென்ச்சுரா?

எங்களுக்கு இதுதான் முதல் கார் என்பதால், ஃபியட் அவென்ச்சுரா என் குடும்பத்துக்கு ரொம்ப ஸ்பெஷல். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 205 mm இருப்பதால், ஸ்பீடு பிரேக்கர்களைப் பற்றிக் கவலையில்லாமல் ஸ்மூத்தாகச் செல்கிறேன். மேலும் குண்டும் குழியுமான சாலைகளில் செல்லும்போது, சஸ்பென்ஷன் ரொம்ப ஸ்மூத்தாக இருப்பதால், அலுங்கல் குலுங்கல்கள் தெரியவில்லை. கார் வாங்கிய சில நாட்களில் நால்வழிச் சாலையில் பயணம் செய்து திரும்பினேன். மிரர் விசிபிளிட்டி நன்றாக இருக்கிறது. இன்ஜின் சிறப்பாகச் செயல்படுகிறது. பின் சீட்டில் உள்ள ரியர் ஏ.சியை உபயோகிக்க ஸ்விட்ச் அங்கேயே இருப்பது நல்ல வசதி. மலைப் பாதையில் செல்லும்போது, ஏற்ற இறக்கங்களைச் சுட்டிக் காட்டும் ‘இன்க்ளைன்’ மீட்டர் மிக உதவியாக இருக்கிறது.

என் ஓட்டுதல் முறைக்கு மைலேஜ், நகரச் சாலைகளில் லிட்டருக்கு 16 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 20 கி.மீ-யும் அளிக்கிறது. இதில், 5 பேர் வரை வசதியாக அமர்ந்து செல்ல முடியும். அதனால், நீண்ட தூரப் பயணத்துக்கும் ஏற்றதாக இருக்கிறது அவென்ச்சுரா. ஏபிஎஸ் பிரேக், இரண்டு காற்றுப் பைகள் பாதுகாப்புக்கு நம்பிக்கை அளிக்கின்றன. ‘ப்ளூ அண்டு மீ’ ஆடியோ சிஸ்டம் ஆப்ஷன் இருப்பது, கார் ஓட்டுவதற்கு இடைஞ்சல் இல்லாமல் செல்போனைக் கையாள முடிகிறது.

அசத்தல் அவென்ச்சுரா !

ப்ளஸ்

மற்ற ஃபியட் கார்களைப்போல இல்லாமல், இதன் வெளிப்புறத் தோற்றம் செம ஸ்டைலிஷ். சொகுசான இருக்கைகள், காதுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தாத ஆடியோ சிஸ்டம். பவர் ஸ்டீயரிங், டேஷ் போர்டு டிஸைன் ஆகியவை பயணத்தை ரசிக்கவைக்கின்றன. பொருட்கள் வைக்கத் தேவையான பூட் ஸ்பேஸ் இருப்பது திருப்தியாக இருக்கிறது. நீண்ட தூரம் பயணித்தாலும் அலுப்பு தெரிவது இல்லை.

மைனஸ்

காரின் பின்பக்கம் ஸ்டெப்னி டயர் இருப்பது பஞ்சர் ஏற்படும்போது கைகொடுக்கும். ஆனால், ரிவர்ஸ் கேமரா செட் செய்வதில் பிரச்னையைத் தருகிறது. ரிவர்ஸ் கேமரா பொருத்தினாலும், காரை ரிவர்ஸ் எடுக்கும்போது ஓரளவுக்குத்தான் கவரேஜ் கிடைக்கிறது. ஃபியட்டில்  சொல்லிக்கொள்ளும் அளவுக்குக் கூடுதல் சர்வீஸ் சென்டர்கள் இல்லை என்பது என் கருத்து. காரில் பிடிக்காதது என்று, இப்போதைய நிலையில் வேறு எதுவும் இல்லை.

என் தீர்ப்பு

குடும்பத்துக்கு ஏற்ற கார் வாங்க வேண்டும் என விரும்புபவர்களுக்கும், கொடுக்கும் பணத்துக்கேற்ற, அதிக வசதிகள் கொண்ட கார் வேண்டும் என்பவர்களுக்கும் ஃபியட் அவென்ச்சுரா நல்ல சாய்ஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism