Published:Updated:

TUV 3OO ப்ளஸ்... மஹிந்திராவின் புதிய எஸ்யூவி! #Mahindra #TUV300Plus

TUV 3OO ப்ளஸ்... மஹிந்திராவின் புதிய எஸ்யூவி! #Mahindra #TUV300Plus
TUV 3OO ப்ளஸ்... மஹிந்திராவின் புதிய எஸ்யூவி! #Mahindra #TUV300Plus

TUV 3OO ப்ளஸ்... மஹிந்திராவின் புதிய எஸ்யூவி! #Mahindra #TUV300Plus

தாங்கள் விற்பனை செய்யும் 4 மீட்டர் நீளத்துக்குட்பட்ட காம்பேக்ட் எஸ்யூவியான TUV 3OO காரின் நீளமான மாடலை, விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது மஹிந்திரா. TUV 5OO என்ற புனைப்பெயரில் டெஸ்ட் செய்யப்பட்டு வந்த இந்த கார், TUV 3OO ப்ளஸ் என அதிகாரபூர்வமாகப் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த காரின் ஸ்பை படங்கள், இணையத்தில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன. இதில் காம்பேக்ட் எஸ்யூவியான TUV 3OO-வைவிட, TUV 3OO ப்ளஸ் பார்ப்பதற்கு கச்சிதமாக இருக்கிறது.

TUV 3OO உடன் ஒப்பிடும்போது, TUV 3OO ப்ளஸ்ஸின் பின்பக்கம், புதிய டெயில் லைட்களுடன் காட்சியளிக்கிறது. தவிர D-பில்லரில் இருக்கும் Quarter Glass, முன்பைவிட அளவில் பெரிதாக இருக்கிறது. மற்றபடி, TUV 3OO ப்ளஸ்ஸின் முன்பக்கம் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகள், காம்பேக்ட் எஸ்யூவியான TUV 3OO-ன் ஜெராக்ஸ்தான்! ஆனால், ஸ்பை படங்களில் இருப்பது ஆரம்ப மாடல் என்பதால், கறுப்பு நிற B மற்றும் C பில்லர்கள் - ரூஃப் ரெயில் போன்றவை இல்லை எனத் தெரிகிறது. 

நாம் முன்பே சொன்னது போல, TUV 3OO ப்ளஸ்ஸின் பானெட்டுக்கு அடியே மிக முக்கியமான மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. காம்பேக்ட் எஸ்யூவியான TUV 3OO-ல், 85bhp/100bhp பவர் மற்றும் 23kgm/24kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர், 3 சிலிண்டர், mHawk டர்போ டீசல் இன்ஜின் - 5 ஸ்பீடு MT/AMT கியர்பாக்ஸ் அமைப்பு இருக்கிறது. ஆனால் TUV 3OO ப்ளஸ்ஸில் இருப்பதோ, 1.99 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணி! 2,000 சிசிக்கும் அதிகமான டீசல் இன்ஜின்களின் மீது தடை விதிக்கப்பட்டுள்ளதால், டெல்லியில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் ஸ்கார்ப்பியோவில் இருக்கும் அதே இன்ஜின்தான்;

அதாவது ஸ்கார்ப்பியோ, XUV 5OO, ஸைலோ ஆகிய கார்களில் இருக்கும் 2.2 லிட்டர் mHawk டர்போ டீசல் இன்ஜினின் ஷார்ட் ஸ்ட்ரோக் வெர்ஷன்தான் இது! 120bhp பவர் மற்றும் 28kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது என்பது, காரின் ரியர்வியூ மிரருக்கு அருகே இருக்கும் mHawk 120 பேட்ஜ் உறுதிபடுத்திவிடுகிறது. TUV 3OO ப்ளஸ் காருக்குள்ளே நுழைந்தால், TUV 3OO-ன் தாக்கத்தை இங்கும் உணர முடிகிறது. டூயல் டோன் டேஷ்போர்டு, ஸ்டீயரிங் வீல், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், முன்பக்க சீட் ஆகியவை, இதற்கான சிறந்த உதாரணங்கள். 

TUV 3OO-யைவிட அதிக நீளம் இருப்பதால், 3 வரிசை இருக்கைகள் மற்றும் பலவிதமான சீட்டிங் ஆப்ஷன்களில் TUV 3OO ப்ளஸ் வெளிவரும் எனத் தெரியவந்துள்ளது. எஸ்யூவிகளுக்குப் பெயர்பெற்ற மஹிந்திராவின் எம்பிவியான ஸைனோவுக்கு மாற்றாக, TUV 3OO ப்ளஸ் பொசிஷன் செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. ஏனெனில், கடந்த 2009-ல் செவர்லே டவேரா - டொயோட்டா இனோவா - டாடா சுமோ கிராண்டே ஆகிய எம்பிவிகளுக்குப் விற்பனைக்கு வந்த ஸைலோ, குறைவான விலை காரணமாக அதிரடியான வரவேற்பைப் பெற்றது.

ஆனால், மாருதி சுஸூகி எர்டிகா, செவர்லே என்ஜாய், நிஸான் எவாலியா, ரெனோ லாஜி எனப் புதிய போட்டியாளர்கள் வந்ததால், நாளடைவில் விற்பனையில் தேக்கநிலையைச் சந்தித்தது ஸைலோ. இதன் விற்பனையை உயர்த்தும் வகையில், 2012 மற்றும் 2014-ல் இரு ஃபேஸ்லிஃப்ட்களை மஹிந்திரா செய்தாலும், அது அந்நிறுவனத்துக்குப் பெரியளவில் கைகொடுக்கவில்லை என்பதே நிதர்சனம். முன்னே சொன்ன 7 சீட் எம்பிவிகள்தான், TUV 3OO ப்ளஸ்ஸுக்கும் போட்டியாளர்களாக இருக்கிறார்கள். எனவே அவையனைத்தும் எடை குறைவான மோனோகாக் சேஸியைக் கொண்டிருக்கும் நிலையில்,  TUV 3OO ப்ளஸ்ஸோ எடை அதிகமான லேடர் ஃப்ரேம் சேஸியைக் கொண்டிருக்கிறது.

இதைச் சரிகட்டும் விதமாகவே, போட்டியாளர்களைவிட பெரிய இன்ஜினை, TUV 3OO ப்ளஸ்ஸில் மஹிந்திரா பொருத்தியுள்ளது. என்றாலும், அது பெர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜில் எந்தளவுக்கு முன்னேற்றத்தைத் தரும் என்பது, போகப் போகத்தான் தெரியும். மேலும், TUV 3OO-ல் இருந்த கடைசி வரிசை Jump Seat-களுக்குப் பதிலாக, மூன்று பேர் உட்காரக்கூடிய பெஞ்ச் சீட்டை இந்த கார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக எஸ்யூவி போன்ற டிஸைனுடன், ஒரு எம்பிவியின் பிராக்டிக்காலிட்டியுடன் கூடிய காராக,  TUV 3OO ப்ளஸ்ஸை மஹிந்திரா பிரகடனப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு