சென்னை பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில், கார் அசெம்பிளிக்காகப் பயன்படுத்தப்படும் உள்நாட்டுப் பாகங்களின் பங்களிப்பு 50 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் உள்ள ஒப்பந்தத்தின்படி, இப்போது இன்ஜின்களையும், கியர்பாக்ஸ்களையும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் மூலம் பெறுகிறது பிஎம்டபிள்யூ இந்தியா. மேலும், Tenneco ஆட்டோமோட்டிவ் இந்தியா நிறுவனத்திடம் இருந்து எக்ஸாஸ்ட்டுகள், Lear இந்தியா நிறுவனத்திடம் இருந்து இருக்கைகள், Valeo India, Mahle Behr நிறுவனங்களிடம் இருந்து ஏ.சி சிஸ்டம், ZF Hero சேஸி நிறுவனத்திடம் இருந்து ஆக்ஸில்கள், Draexlmaier நிறுவனத்திடம் இருந்து வொயரிங், டோர் பேனல்கள் போன்றவற்றை வாங்குகிறது பிஎம்டபிள்யூ இந்தியா. Make In India கொள்கையின்படி, Localization அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிஎம்டபிள்யூ சொல்கிறது. இந்தத் தருணத்தைக் கொண்டாடுவதற்காக, சச்சின் டெண்டுல்கரை அழைத்து வந்திருந்தது பிஎம்டபிள்யூ. சச்சின் 5 சீரிஸ் 520d மாடல் கார் ஒன்றை, தன் கையால் அசெம்பிள் செய்து அசத்தினார்.

படம்: பா.ஜெயவேல்

நானோவில் 1 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைப் பொருத்த இருக்கிறது டாடா. மூன்று சிலிண்டர்களைக் கொண்ட இந்த இன்ஜின், அதிகபட்சமாக 60bhp சக்தியை வெளிப்படுத்துமாம்!

படம்: வீ.நாகமணி

தமிழகத்தில் உள்ள பென்ஸ் வாடிக்கை யாளர்களுக்காக, தன்னுடைய கார்களை சென்னை இருங்காட்டுக்கோட்டை ரேஸ் டிராக்குக்கு எடுத்து வந்திருந்தது மெர்சிடீஸ் பென்ஸ். கடந்த மே 2, 3 தேதிகளில் நடந்த மெர்சிடீஸ் பென்ஸ் Luxe Drive நிகழ்வில், ஏராளமான கார் ஆர்வலர்கள் கலந்துகொண்டு பென்ஸ் கார்களை அனுபவித்து ஓட்டி மகிழ்ந்தனர்.

GL எஸ்யுவி காரை ஆக்ஸில் ட்விஸ்டர், ராம்ப்களில் ஏற்றிப் பார்த்து 4 வீல் டிரைவ் சிஸ்டத்தையும், ஆஃப் ரோடிங் செய்யும்போது, இறக்கங்களில் பாதுகாப்பாக காரை இறக்க உதவும் DSR (downhill speed regulator) சிஸ்டத்தையும் டெஸ்ட் செய்து பார்த்தோம். அதன் பிறகு, புதிய C கிளாஸ், CLA, GLA கார்களில் Slalom கோர்ஸ் மூலம் காரின் ஸ்டீயரிங்கையும், கையாளுமையையும டெஸ்ட் செய்தோம். இறுதியாக, எக்ஸ்பர்ட் டிரைவர்கள் CLA45 AMG பெர்ஃபாமென்ஸ் காரை செம வேகமாக விரட்டிக் காட்டினார்கள். வாடிக்கையாளர்களுக்கு தங்களுடைய காரையும், பென்ஸ் கார்களையும் முழுமையாகப் புரிந்துகொள்ள இந்த Luxe Drive நல்ல சான்ஸ்.

சென்னையில் உள்ள ஃபோர்டு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில், மேலும் 5 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது ஃபோர்டு. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும். தமிழக அரசுடனான ஒப்பந்தமும் விரைவில் கையெழுத்தாக இருக்கிறது.

ரெனோ க்விட் தயாராகும் CMF பிளாட்ஃபார்மில்தான் டட்ஸனின் ரெடி-கோ தயாராக இருக்கிறது. ரெடி-கோ 2016 பிப்ரவரியில் விற்பனைக்கு வரும்!

ஜிக்ஸர் ஒன் - மேக் சாம்பியன்ஷிப் போட்டிகளை அறிவித்துள்ளது சுஸூகி. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை நடக்க இருக்கின்றன, சுஸூகி ஜிக்ஸர் கப் ரேஸ். ஏற்கெனவே ஹோண்டா சிபிஆர் 250R பைக்குடன் ஒன் - மேக் ரேஸ் போட்டிகளை நடத்தி வர, யமஹா தன்னுடைய R15 ரேஸ்களை நிறுத்திவிட்டது.

சுஸூகியின் ஜிக்ஸர் சாம்பியன்ஷிப்பில் 5 ரவுண்டுகள் உள்ளன. சுஸூகி நிறுவனமே ஜிக்ஸர் SF பைக்குகளை ரேஸ்களுக்குத் தயார் செய்து தரும். ஒரு ரேஸ் பைக்குக்கு 2,000 ரூபாய் கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம். 23 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், 23 வயதுக்கு மேல் உள்ளவர்கள் என 2 பிரிவுகளாக ரேஸ்களை நடத்த இருக்கிறது சுஸூகி. முக்கியமாக, சுஸூகியின் ஒன்-மேக் ரேஸில் பங்கேற்றால், வேறு எந்த ஒன் - மேக் ரேஸிலும் பங்கேற்கக் கூடாது என்கிறது சுஸூகி.

ரவுண்டு 1 கோவை கரி ரேஸ் ட்ராக் - ஜூன் 6 முதல் 7 வரை

ரவுண்டு 2 சென்னை ரேஸ் ட்ராக் - ஜூலை 10 முதல் 12 வரை

ரவுண்டு 3 சென்னை ரேஸ் ட்ராக் - ஆகஸ்டு 7 முதல் 9 வரை

ரவுண்டு 4 சென்னை ரேஸ் ட்ராக் - செப்டம்பர் 4 முதல் 6 வரை

ரவுண்டு 5 சென்னை ரேஸ் ட்ராக் அல்லது டெல்லி புத் ரேஸ் டிராக் - தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

ஹோண்டா சிட்டிக்குப் போட்டியாக, புதிய செடான் காரை அறிமுகப்படுத்துகிறது ஃபோர்டு. இது, 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படும்!

- கு.நெல்சன் மேத்யூ மதுரம்

படம்: ச.சந்திரமெளலி

யமஹா நிறுவனம், இந்தியாவில் முக்கியமான, தொழில்நுட்பப் பயிற்சிக் கல்லூரிகளில் அதிநவீன வசதிகள்கொண்ட யமஹா தொழில்நுட்ப பயிற்சி மையங்களை நிறுவி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வடசென்னையில் அமைந்துள்ள டான் பாஸ்கோ தொழில்நுட்பப் பயிற்சி கல்லூரியில், யமஹா தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தை கடந்த மாதம் துவங்கியது. யமஹா தொழில்நுட்ப வளாகத்தில் உள்ள அத்தனை நவீன கருவிகளும் இங்கே மாணவர்களின் செயல்முறைக் கல்விக்காக அளிக்கப்பட்டுள்ளன. ஒரு பைக்கின் மொத்த உதிரி பாகங்களையும் தனித்தனியாக அகற்றி வைத்து, புரிதலுக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நவீன கருவிகள், டூல்ஸ், நூலகம், இன்ஜின் சர்வீஸ், வாஷிங் பே என ஒரு சர்வீஸ் சென்டரில் என்னென்ன விஷயங்கள் இருக்குமோ, அவை அத்தனையையும் இந்தக் கல்லூரிக்கு அளித்துள்ளது யமஹா.

யமஹா தொழில்நுட்பப் பயிற்சி மையத்தை துவக்கி வைத்த யமஹா மோட்டார்ஸ் இந்தியா விற்பனைப் பிரிவு நிர்வாக இயக்குனர், மஸாகி ஆஸானோ, ‘‘எங்களின் இந்தத் திட்டம் சமூகத்தில் பொருளாதார ரீதியில் நலிவடைந்த, வேலை வாய்ப்பு இல்லாமல் திண்டாடும் இளைய தலைமுறைக்கு திறமையுடன் கூடிய வேலை வாய்ப்பைத் தர நல்ல தளமாக அமையும். இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு, யமஹா டெக்னிக்கல் அகாடமி சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்படும். அது, இந்தத் துறையில் அவர்களுக்கேற்ற வேலை வாய்ப்புகளைப் பெற்று தர உதவும்” என்றார்.

ஆகஸ்ட் மாதம் பிஎம்டபிள்யு - டிவிஎஸ் கூட்டணியின் முதல் பைக் விற்பனைக்கு வருகிறது.
பைக்கின் பெயர் ட்ராக்கன்!