குஜராத் மாநிலம் சனந்தில் உள்ள ஃபோர்டின் புதிய தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் கார், ஆஸ்பயர். 4 மீட்டருக்குள் அடங்கும் செடான் காரான ஆஸ்பயர் - மாருதி டிசையர், ஹூண்டாய் எக்ஸென்ட், ஹோண்டா அமேஸ், டாடா ஜெஸ்ட் ஆகிய கார்களுடன் போட்டி போட இருக்கிறது.

டிஸைன்

ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் எக்ஸென்ட் அளவுக்கு இது முழுமையான செடான் காராக இல்லை. ஃபிகோ ஹேட்ச்பேக் காருக்குப் பின்னால், டிக்கியை மட்டும் தனியாக எடுத்துப் பொருத்தியதுபோல, பொருந்தாமலேயே இருக்கிறது.

எக்கோஸ்போர்ட் மற்றும் ஃபியஸ்டாவில் இருக்கும் அதே டேஷ்போர்டுதான் ஆஸ்பயர் காரிலும் இருக்கிறது. V வடிவ சென்டர் கன்ஸோலில் ஏகப்பட்ட பட்டன்கள் இருப்பது, எந்த பட்டன் எதற்கு என அடிக்கடி குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எக்கோஸ்போர்ட், ஃபியஸ்டாவில் இருக்கும் டயல்கள் இதில் இல்லை. மிகவும் சிம்பிளான டயல்கள்தான் ஆஸ்பயரில் வைக்கப்பட்டுள்ளன.

சிறப்பம்சங்கள்

இந்த செக்மென்ட்டில் ஏராளமான வசதிகளை அள்ளித் தெளித்து, முதல் இடத்தில் இருக்கிறது ஹூண்டாய் எக்ஸென்ட். இதை வீழ்த்தக்கூடிய அளவுக்கு இல்லை என்றாலும், ஆஸ்பயரிலும் சிறப்பம்சங்கள் அதிகம் தான். ஆட்டோமேட்டிக் ஏ.சி, லெதர் இருக்கைகள், ப்ளூடூத், ஆக்ஸ்-இன், யுஎஸ்பி போர்ட் வசதி, எலெக்ட்ரிக் மிரர் அட்ஜஸ்ட் மற்றும் பாதுகாப்புக்கு 6 காற்றுப் பைகள் என விலை உயர்ந்த வேரியன்ட்டில் இந்த வசதிகள் அனைத்தையும் கொடுக்க இருக்கிறது ஃபோர்டு. வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம் இருப்பதோடு, ஸ்மார்ட்போனில் மெசேஜ் படித்துக் காட்டும் வசதியும் இதில் உள்ளது. கூடுதலாக, விபத்து நடந்தால் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு, தானாகவே அழைக்கும் எமெர்ஜென்ஸி அசிஸ்ட் வசதியும் இதில் உண்டு.

இன்ஜின்

1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் விற்பனைக்கு வருகிறது ஆஸ்பயர். இது அதிகபட்சமாக 80bhp சக்தியை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இது தற்போதைய ஃபிகோவைவிட 10bhp சக்தி அதிகம். அதேபோல், ஃபியஸ்டா, எக்கோஸ்போர்ட்டில் இருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்தான் ஆஸ்பயரிலும் என்றாலும், ஹோண்டா அமேஸ் போல இதன் சக்தியை 100bhp ஆகக் கூட்டியிருக்கிறது ஃபோர்டு. இதுவும் தற்போதைய ஃபியஸ்டாவின் சக்தியைவிட 10bhp அதிகம்.

பெட்ரோல், டீசல் இரண்டிலுமே 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான். ஆனால், அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலையும் அறிமுகப்படுத்துகிறது ஃபோர்டு. இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம் பிடித்திருக்கும். இதன் சக்தி 110bhp ஆக இருக்கும். 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் என்பதால், இது மத்திய அரசின் சின்ன கார் வரிவிதிப்புக்குள் வராது. அதனால், இந்த மாடலின் விலை மட்டும் அதிகமாக இருக்கும்.

5 ஸ்டார்

*ஆஸ்பயர் விற்பனைக்கு வருவதால் ஃபியஸ்டா கிளாஸிக் இனி தயாரிக்கப்படாது.

*ஃபியஸ்டா, எக்கோஸ்போர்ட்டின் அதே சேஸிதான் ஆஸ்பயரிலும்!

*பெட்ரோல் இன்ஜின் புதுசு. எக்கோஸ்போர்ட்டின் 1.5லி டீசல் இன்ஜின்தான் இதிலும்.

*6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் பெட்ரோல் மாடல் 2016-ம் ஆண்டு விற்பனைக்கு வரும்.

*இதன் ஹேட்ச்பேக் காரான ஃபிகோ, இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும்.