டஸ்ட்டருடன் போட்டி போடப் போகும் ஹூண்டாயின் மினி எஸ்யுவி இதுதான். காம்பேக்ட் எஸ்யுவிகளுக்கான மார்க்கெட் அதிகரித்திருப்பதால், i20 ப்ளாட்ஃபார்மில் ஆக்டிவ் எனும் மினி எம்பிவி காரைக்கொண்டு வந்தது ஹூண்டாய். இதன் அடுத்த கட்டமாக டஸ்ட்டர், டெரானோ, எக்கோஸ்போர்ட் ஆகிய கார்களுடன் போட்டி போடுவதற்காக, IX25 காரை விற்பனைக்குக் கொண்டு வருகிறது. ஆனால், இது விற்பனைக்கு வரும்போது வேறு பெயரில் அழைக்கப்படும்.

ஷார்ப்பான வளைவு நெளிவுகள், நீளமான பானெட் என ஒரு எஸ்யுவிக்கான கம்பீரத்துடன் இருக்கிறது. எக்கோஸ்போர்ட்போல இது நான்கு மீட்டருக்குள் அடங்கும் கார் இல்லை. நீளமான காராகவே இருக்கிறது.

காருக்கு உள்ளே, எப்போதும் போல அதிக சிறப்பம்சங்கள்கொண்ட ஹூண்டாய் காராக இருக்கிறது இந்த மினி எஸ்யுவி. சென்டர் கன்ஸோலில் சின்ன டச் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டிருக்கிறது. பட்டன் ஸ்டார்ட், ப்ளூடூத், இரண்டு காற்றுப் பைகள் மற்றும் ஏபிஎஸ் வசதிகள் உள்ளன. டஸ்ட்டரைப் போலவே, டிக்கியில் பொருட்கள் வைக்கப் போதுமான இடம் இருக்கிறது. 2,590 மிமீ வீல்பேஸ் கொண்ட கார் என்பதால், காருக்குள் இடவசதியும் அதிகம்.
எஸ்யுவி என்பதை உறுதிப்படுத்த, 200 மிமீ மேல் கிரவுண்ட் கிளியரன்ஸை உயர்த்திருக்கிறது ஹூண்டாய். 17 அல்லது 18 இன்ச் டயர்களும் அகலமான 215 செக்ஷன் டயர்களும் இதில் பொருத்தப்படும்.

இன்ஜின்

1.6 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் இன்ஜினுடன் விற்பனைக்கு வரவிருக்கிறது ஹூண்டாயின் மினி எஸ்யுவி. 1.6 லிட்டர் டீசல் இன்ஜின், வெர்னாவில் இருப்பதுபோல அதிகபட்சமாக 126bhp சக்தியை வெளிப்படுத்தும். இது டஸ்ட்டரைவிட கிட்டத்தட்ட 17bhp சக்தி அதிகம். 88bhp சக்தியை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் உண்டு. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இது விற்பனைக்கு வரும்.

இதன் விலை 9 லட்சம் ரூபாயில் இருந்து துவங்கும். மினி எஸ்யுவி வாங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இருப்பவர்கள், ஆகஸ்ட் மாதம் வரை காத்திருக்கலாம்!

5 ஸ்டார்

வெர்னாவின் பவர்ஃபுல் டீசல் இன்ஜின் இந்த காருக்குள் இடம் பிடிக்க இருக்கிறது.

ரெனோ டஸ்ட்டருக்கும் ஹூண்டாய் மினி எஸ்யுவிக்கும் விலை வித்தியாசம் பெரிய அளவில் இருக்காது.

i20 பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் கார். ஆனால் நீளமும், உயரமும் அதிகம்.

ஹேட்ச்பேக்கில் இருந்து முளைத்த எஸ்யுவிபோல் இல்லாமல், முழுமையாக இருக்கிறது.

இடவசதி, தரம் மற்றும் சிறப்பம்சங்களில் கிளாஸ் லீடராக இருக்கும் என எதிர்பார்க்கலாம்!