க்யூட்.. but ஹாட் கார்களாக நம் முன் நின்றன, மினி கூப்பர்S மற்றும் அபார்த் 595Competizione. இவை சாதாரண கார்கள் அல்ல. புகழ்பெற்ற ராலி கார்களின் வழித்தோன்றல்கள். சாதாரண தோற்றத்தில், ஸ்போர்ட்ஸ் கார் அனுபவத்தைத் தர வேண்டிய இந்த கார்கள், தன் குலப்பெயரைக் காப்பாற்றுகின்றனவா?

மினிதான் இதில் பழக்கமான டிஸைனைக் கொண்டுள்ளது. புதிய மினி, வடிவமைப்பில் புதிய அம்சங்களைக்கொண்டிருந்தாலும், காரின் தோற்றத்தில் மினியின் பாரம்பரியம் மிளிர்கிறது. பில்லர் இல்லாத கூரை மற்றும் டெயில் லைட்டுகள் சூப்பர். ஆனால், பழைய காரைவிட கொஞ்சம் நீளமாகத் தெரிவதால், சில கோணங்களில் அழகாக இல்லை.

அபார்த் 595, பக்கா இத்தாலியன் பியூட்டி. மினி காரைவிட சுமார் 30 சதவிகிதம் சின்ன காராகத் தெரிகிறது. க்ரோம் அலாய் வீல்களின் டிஸைன் காரின் தோற்றத்துடன் பக்காவாகப் பொருந்துகிறது.

மினி காரின் 2.0 லிட்டர் 189bhp டர்போ பெட்ரோல் இன்ஜின், சக்தியைத் திணறாமல் வழங்குகிறது. சாதாரண மினிகூப்பரைவிட இறுக்க மான சஸ்பென்ஷன் என்பதால், டக் டக்கென்று திரும்புகிறது. முன்பக்கம் நல்ல கிரிப் இருப்பதால், வளைவுகளில் தைரியமாகத் திருப்பி ஓட்டலாம். ஏற்ற இறக்கமான சாலைகள், மேடு பள்ளங்களில் கட்டுக்குலையாமல் செல்கிறது கூப்பர். இதன் கையாளுமை அனுபவத்துடன் ரெட்ரோ ஸ்டைல் இன்டீரியர் சேரும்போது, நல்ல அனுபவத்தைத் தருகிறது.

அபார்த் 595 காரில் ஏறி அமர்வதே கொஞ்சம் சிரமம். முன் இருக்கைகள் பார்ப்பதற்கு ரேஸ் சீட்கள்போல இருக்கின்றன. ஓட்ட ஆரம்பித்தால், காரின் சஸ்பென்ஷன் என ஒன்று இருக்கிறதா என்று கேள்வி எழுகிறது. காரணம், அவ்வளவு இறுக்கமான ஓட்டுதல் தரம். ரேஸ் கார் போல சாலையோடு ஒட்டிக்கொள்கிறது அபார்த். குட்டி காராக இருந்தாலும் இதற்குள் இருப்பது 1,368 சிசி, 158bhp இன்ஜின். முழு ஆட்டோமேட்டிக் மோடில் ஓட்டினால், இதன் ஆட்டோ-மேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் மந்தமாக இருக்கிறது. ஸ்போர்ட் மோடில்தான் சாதாரணமாகவே இந்த காரை ஓட்டத் தோன்றுகிறது. 4,000 ஆர்பிஎம்-க்கு மேல் 6,500 ஆர்பிஎம் ரெட்லைன் வரை சக்தியை வாரி வழங்குகிறது இந்த இன்ஜின். எக்ஸாஸ்ட் சத்தமும் சங்கீதம்.

சாலையில் இருக்கும் ஏற்ற இறக்கங்களில் அபார்த் குதித்து விடாமல் இருக்க, பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிருக்கிறது. இறுக்கமான சஸ்பென்ஷன் என்பதால்தான் இப்படி. ஆனால், வளைவான சாலைகளில் நல்ல க்ரிப் கொண்டிருக்கிறது அபார்த். காரின் ரிதம் உங்கள் கைக்குகள் வந்துவிட்டால், காரை எப்படி வேண்டுமானாலும் விரட்டி ஓட்டலாம்.

அபார்த் 595 காரின் கையாளுமை, மினியையே டல்லான காராகக் காட்டுகிறது. ஆனால், தினமும் ஓட்டுவதற்கு இந்த கார் சரிப்படாது. மினியிலாவது பின்னிருக்கைகளில் இட வசதி இருக்கும். இதில் அதுவும் குறைவு. எனவே, ஒட்டுமொத்த பேக்கேஜாகப் பார்க்கும்போது, மினி சிறந்த கார் போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், மினியை வாங்கச் செல்லும் முன்பு, அபார்த்தை ஒருமுறை ஓட்டிப் பாருங்கள். உங்கள் முடிவு மாறக்கூடும்!