ரேஸில் கலந்துகொள்ள ஆர்வம் இருந்தால் மட்டும் போதும்; ரேஸ் பின்புலமோ, பணமோ தேவை இல்லை’’ - இதைப் படிக்கும்போதெல்லாம், ‘இதெல்லாம் சாத்தியமா’ என்ற சந்தேகமே பலருக்கும் வரக்கூடும். அந்தச் சந்தேகத்தை உடைத்து சாதித்திருக்கிறார்கள், சென்னையைச் சேர்ந்த பிரஷாந்த் - கார்த்திக் சகோதரர்கள். இவர்கள் இருவருமே ரேஸுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாதவர்கள். இவர்களின் பெற்றோர் அரசு ஊழியர்கள்.

‘‘பிறந்து வளர்ந்தது சென்னை தாம்பரம். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் விலங்கியல் படிக்கச் சேர்ந்தேன். ஒரு வருஷம் படிச்சுட்டு இருக்கும்போது, பைலட் ஆகிற மாதிரி கனவு வர, அமெரிக்காவுக்கு பைலட் பயிற்சி பெறப் போனேன். கமர்ஷியல் பைலட்டாகி மீண்டும் சென்னை கிறிஸ்துவக் கல்லூரிக்குத் திரும்பி, டிகிரியை முடித்தேன். அப்போதுதான் திடீர்னு ஒரு நாள் கார் ரேஸராகணும்னு ஆசை கிளம்புச்சு. இன்டர்நெட்ல பார்த்தேன்; சில நண்பர்கள்கிட்ட பேசினேன்; சென்னையில் நடந்த தேசிய ஜூனியர் டூரிங் கார்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துக்க பெயர் கொடுத்துட்டேன். தட்டுத் தடுமாறி ரேஸ் டிராக்ல கார் ஓட்டுறது எப்படின்னு கத்துக்கிட்டேன். ஜெயிக்கலைனாலும் நமக்குள்ளும் ஒரு ரேஸர் இருக்கான்னு புரிஞ்சது. அடுத்த வருஷமே ஃபோக்ஸ்வாகன் கார் நிறுவனம் நடத்திய போலோ கப் ரேஸ் செலக்ஷனில் கலந்துக்கிட்டேன்; தேர்வானேன். நான் போலோ கப்பில் சேர, சென்னை எம்ஐடி-ல் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படிச்சுட்டு இருந்த என் தம்பி கார்த்திக்கையும் ரேஸுக்குள் கொண்டுவந்தேன். அவன் ஜூனியர் டூரிங் ரேஸில் கார் ஓட்ட, நான் போலோ கப்பில் கலந்துக்கிட்டேன்!’’ என்றார் அண்ணன் பிரஷாந்த்.

‘‘அப்போ எனக்கு டிரைவிங் லைசென்ஸே கிடையாது. ஆனா, அண்ணன் சொன்னானேன்னு ரேஸ் லைசென்ஸ் வாங்கி, நானும் ரேஸில் கலந்துக்கிட்டேன். முதல் ரேஸ் கோயம்புத்தூர்ல நடந்தது. டூரிங் கார்ஸ் ரேஸில், நான் மாருதி எஸ்டீம் காரை ஓட்டினேன். ஜெயிக்கணும்னு வெறி மட்டும்தான் இருந்ததே தவிர, டெக்னிக்கல் எதுவும் தெரியாது. செம ஸ்பீடா போய் கார் கன்ட்ரோலை இழந்து, எட்டு தடவை பல்ட்டி அடிச்சு கார் உருண்டது. உடம்பில் அடி எதுவும் பெருசா படலைனாலும், கார் மொத்தமா சிதைஞ்சிடுச்சு! ஆனால், ரேஸின் மீது இருந்த பயம் போயிடுச்சு!’’ என்று, தான் ஜஸ்ட் லைக் தட் ரேஸ் வீரரான கதை பற்றிப் பேசுகிறார் தம்பி கார்த்திக். இவர்தான் தற்போது ஃபோக்ஸ்வாகன் போலோ கப் சாம்பியன்.

‘‘2013-ம் ஆண்டு நாங்கள் இருவருமே போலோ கப் ரேஸில் கலந்துகொள்ளத் தேர்வானோம். முதல் ரேஸில் இருந்து இறுதி ரேஸ் வரை நான் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தேன். ஆனால், என்னால் கடைசியில் சாம்பியனாக முடியவில்லை!” என்று சஸ்பென்ஸ் வைத்தார் பிரஷாந்த்.

‘‘கார்த்திக்கும் நானும் சேர்ந்து ஒரு சஸ்பென்ஷனைப் புதிதாக உருவாக்கி இருந்தோம். அதை டெஸ்ட் செய்து பார்ப்பதற்காக நானும், அவனும் 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் டூரிங் கார்ஸ் போட்டியில், ஒரே ஒரு ரேஸில் கலந்துகொண்டோம். இந்த ரேஸில் கலந்துகொள்ள ஃபோக்ஸ்வாகன் ரேஸிங் நிர்வாகத்தின் அனுமதி வாங்கினேன். 2013-ம் ஆண்டின் சாம்பியனாகப் போகிறேன்; சீஸன் முடிய இன்னும் இரண்டு சுற்றுகளே இருக்கிற நிலையில், டெல்லியில் உள்ள புத் ரேஸ் ட்ராக்குக்கு ரேஸ் ஓட்டச் சென்றேன். திடீரென சாம்பியன்ஷிப்பில் எனக்கு அடுத்து இருந்தவர்கள், நான் டூரிங் கார்ஸ் ரேஸில் ஓட்டியதைப் பிரச்னை ஆக்கினார்கள். ஃபோக்ஸ்வாகன் போலோ கப் ரேஸில் கலந்துகொள்பவர்கள், மற்ற எந்த ரேஸிலும் கலந்துகொள்ளக் கூடாது என்றார்கள். நாங்கள் ஃபோக்ஸ்வாகனிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் ஓட்டினேன் என்று சொன்னோம். ஆனால், எழுத்துப்பூர்வமாக இருந்தால்தான் ஒப்புக்கொள்வோம் என்று சொல்லி என்னையும், கார்த்திக்கையும் அந்த ரவுண்டில் கலந்துகொள்ளத் தடை விதித்தார்கள். நான் அப்போது சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்திலும், கார்த்திக் இரண்டாவது இடத்திலும் இருந்தான்.

அந்த ரவுண்டில் நாங்கள் ரேஸ் ஓட்டாததால், எங்களுடைய போட்டியாளர்களுக்குப் புள்ளிகள் கிடைத்தன. சாம்பியன்ஷிப் பட்டியலில் எங்களை நெருங்கினார்கள். இருந்தாலும் கடைசிச் சுற்றுவரை நான் முதல் இடத்தில் இருந்தேன். கடைசிச் சுற்றில் வெற்றி பெறவில்லை என்றாலும், நான்காவது இடத்துக்குள் முடித்தால் போதும்; சாம்பியன் பட்டம் கிடைத்துவிடும் என்கிற சூழலில், கடைசி ரேஸை ஓட்டினேன். கடைசிச் சுற்று ரேஸ் முடிய இன்னும் சில விநாடிகளே இருந்தன. நான் சரியாக 4-வது இடத்தில் இருக்கிறேன். அந்த நேரத்தில் என் பின்னால் இருந்து வந்த ஒரு கார், என் காரை இடித்தது. நான் ரேஸ் ட்ராக்கைவிட்டு வெளியே போய் விழுந்தேன். சாம்பியன் பட்டம் இன்னொரு வீரருக்குக் கிடைத்தது. எனக்கு இரண்டாவது இடமும், கார்த்திக்குக்கு நான்காவது இடமும் கிடைத்தன.

இந்தத் தோல்விதான் ‘போலோ கப் சாம்பியன் ஆகியே தீர வேண்டும்’ என்ற மிகப் பெரிய வெறியை எனக்குள் கிளப்பியது. ஆனால், இதற்குச் சில வியூகங்களைப் பின்பற்ற வேண்டும் என்பது புரிந்தது. 2014-ம் ஆண்டு நான் பயிற்சியாளராக மாறி, என் தம்பியை மட்டும் ரேஸ் ஓட்ட வைத்தேன். 358 புள்ளிகள் எடுத்து சாம்பியன் ஆனான் கார்த்திக்!’’ என்று வெற்றிக் கதையைச் சொன்னார் பிரஷாந்த்.

‘‘எந்த ரேஸ் ட்ராக்கில் எட்டு முறை பல்டி அடித்து காரோடு வெளியே போய் விழுந்தேனோ, அந்த ரேஸ் ட்ராக்கில் குறைந்த விநாடிகளில் ஒரு சுற்றை முடித்தவன் என லேப் ரெக்கார்டு வைத்திருக்கிறேன். இந்த லேப் ரெக்கார்டை என் அண்ணனிடம் இருந்துதான் பறித்தேன். கோவையில் மட்டும் அல்ல, டெல்லி புத் ரேஸ் ட்ராக்கிலும் லேப் ரெக்கார்டு என்னிடம்தான்!’’ என்றார் கார்த்திக். 2014-ம் ஆண்டு ஃபோக்ஸ்வாகன் சாம்பியனான கார்த்திக், இந்த முறை போலந்தில் நடைபெறும் ஃபோக்ஸ்வாகன் கோல்ஃப் கப்பில் கலந்துகொள்ள இருக்கிறார். அதேபோல், ஜேகே பிஎம்டபிள்யூ ரேஸிலும் கலந்துகொள்கிறார். அண்ணன் பிரஷாந்த், கடந்த மாதம் நெதர்லாந்தில் நடைபெற்ற 12 மணி நேர ரெனோ கிளியோ ரேஸ் போட்டியில் கலந்துகொண்டு திரும்பியிருக்கிறார்.

‘‘எங்கள் இருவருக்குமே உலக டூரிங் கார்ஸ் சாம்பியஷிப் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான் கனவு. அதை நோக்கித்தான் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். உலக டூரிங் கார்ஸ் ரேஸ் போட்டியில் கலந்துகொண்டால், அதில் முதல் இந்தியர்கள் நாங்களாகத்தான் இருப்போம். அதற்காகத்தான் இப்போது தீவிரமான ஸ்பான்ஸர்ஷிப் வேட்டையில் இருக்கிறோம். விரைவில் நல்ல செய்தி சொல்கிறோம்’’ என்று கைகுலுக்கிறார்கள், ரேஸிங் பிரதர்ஸ்!