சிறு வயது முதலே, நாம் எப்போது கார் வாங்கப் போகிறோம் என்ற ஏக்கம், ஆர்வம் மனதில் இருந்துகொண்டேயிருந்தது. அதற்காகவே, அநாவசியச் செலவுகளைத் தவிர்த்து சேமிக்க ஆரம்பித்தோம். என்னைப்போலவே, என் மகனும் கார் வாங்குவதில் மிக ஆவலோடு இருந்தான். 2008-ல் எங்களுடைய 25-வது திருமண தினத்தன்று, ஹூண்டாய் ஆக்ஸென்ட் வாங்கினோம். இதுதான் என்னுடைய முதல் கார். தற்போது அதை விற்பனை செய்துவிட்டு, கோவையில் இருக்கும் என் மகனுக்கு ஹூண்டாய் எலீட் i20 காரைத் திருமணப் பரிசாகக் கொடுத்தேன். சரி, எங்களுடைய பயன்பாட்டுக்கு ஒரு கார் வேண்டுமே எனத் தேட ஆரம்பித்தோம். புதிதாக வெளிவந்த காராகவும் இருக்க வேண்டும்; பட்ஜெட் விலையில் எங்கள் தேவைகளையும் பூர்த்திசெய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, கார்களைத் தேட ஆரம்பித்தேன்.

ஏன் ஹீண்டாய் i20 ஆக்டிவ் ?

முதலில், ஹூண்டாய் ஆக்ஸென்ட் வாங்கி ஏழு ஆண்டுகளாகப் பயன் படுத்தினேன். சர்வீஸ், ஸ்பேர் பார்ட்ஸ் என எதிலும் எந்தக் குறையும் இல்லை. அந்த நம்பிக்கையில்தான் மகன் திருமணத்துக்கு ஹூண்டாய் எலீட் i20 காரை வாங்கிக் கொடுத்தோம். அவனுக்கு அது திருப்தியான காராக இருக்கிறது. கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட, பட்ஜெட் விலையில் ஆடம்பரமான தோற்றத்தைத் தரும் புதிய கார் என்ற இலக்கோடு, கோவையில் உள்ள எல்லா ஷோரூம்களிலும் தேடி அலைந்து பார்த்தோம். பார்க்க சிறிதாகவும், ஆனால் டஸ்ட்டர் கார் போன்ற அமைப்பிலும் இருந்த ஹூண்டாய் i20 ஆக்டிவ் காரைப் பார்த்தேன். அதன் கலர் என்னை ஒரு வகையில் மெஸ்மரைஸ் செய்தது. உடனே சொந்த ஊரான மதுரையில் வந்து இந்த காரை வாங்கினேன்.

ஷோரூம் அனுபவம்

மதுரையிலுள்ள சுக்ரீத் ஹூண்டாயில் தான் கார் வாங்கினேன். நான் முன்பே இந்த ஷோரூமில்தான் எனது இரு கார்களையும் வாங்கியுள்ளேன். அப்போது இருந்தே, எங்களுக்கிடையே நல்ல தொடர்பு இருந்துவருகிறது. டெஸ்ட் டிரைவ் கார் வந்த உடனேயே, என்னை அழைத்து டெஸ்ட் டிரைவ் செய்ய வைத்தார்கள். அந்தப் பயணம் i20 ஆக்டிவ் காரின் மேலும், ஷோரூமின் மேலும் உள்ள நம்பிக்கையை வலுப்படுத்தியது. மதுரையில் கார் வெளிவந்தவுடன், ஆர்டர் கொடுத்த இரண்டு நாட்களில், காரை டெலிவரி செய்தார்கள்.

ஹீண்டாய் i20ஆக்டிவ் எப்படி இருக்கிறது?

நகரச் சாலைகளில் கார் ஓட்டும்போது பெரிய அளவில் குலுங்கல்கள் தெரிவது இல்லை. ஹூண்டாய் எலீட் i20-யைவிட, இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் பக்காவாக உள்ளது. நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்லும்போது, வெளிச்சத்தம் பெரிய அளவில் கேட்பது இல்லை. அலாய் வீல்கள் நல்ல லுக்குடன் இருக்கின்றன. ஆக்ஸிலரேட்டர், பிரேக், கிளட்ச் பெடல்கள் பிரேத்யேகமான கலரில் இருப்பது, இருட்டிலும் பளீரெனத் தெரிகிறது.
நகரச் சாலைகளில் பயணிக் கும்போது லிட்டருக்கு 16 கி.மீ வரை மைலேஜ் கிடைக்கிறது. நீண்ட தூரப் பயணங்களில் செல்லும்போது பிக்-அப் நன்றாகக் கிடைக்கிறது. ஆனால், இதன் இன்ஜின் சிறிது நேரப் பயணத்திலேயே ஹீட் ஆகி விடுகிறது. காரில் முன் பக்கத்தில் 4 ஏ.சி வென்ட்களும், பின் பக்கம் 2 ஏ.சி வென்ட்களும் உள்ளன. அதை எளிதில் அட்ஜெட் செய்யும் வண்ணம் அருகிலேயே பட்டன்கள் கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பு. ஐந்து பேர் வரை தாராளமாக அமர்ந்து செல்ல முடிகிறது. நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்ற வகையில் பொருட்கள் வைக்க பூட் ஸ்பேஸ் நன்றாகவே இருக்கிறது.

ப்ளஸ்

ப்ளு அண்டு மீ ஆப்ஷன், ஆடியோ சிஸ்டத்தை ஸ்டீயரிங்கிலேயே கன்ட்ரோல் செய்யும் வகையில் பட்டன்கள் அமைந்திருப்பது பக்கா! ரிவர்ஸ் கேமரா, வண்டியின் பின் பகுதியில் மத்தியில் அமைந்திருப்பதால், தெளிவான கவரேஜ் கிடைக்கிறது. அந்தத் தெளிவான ரிவர்ஸ் கவரேஜை முன் பகுதியிலுள்ள மிரரிலேயே பார்க்கும்படி செய்தது ஓட்டுபவருக்குக் கூடுதல் வசதியைத் தருகிறது. காரினைத் திருப்பி வளைக்கும்போது, ஹெட் லைட்டுகளும் புலியின் கண்கள்போலத் திரும்பிச் சுழன்று வெளிச்சத்தைத் தருகிறது. அதற்குக் கீழே எல்.இ.டி லைட்டுகள் அமைந்திருப்பது, இரவு நேரப் பயணத்தின்போது வசதியாக இருக்கிறது. நல்ல கலர், ஆடம்பரமான வெளித்தோற்றம், பெர்ஃபாமென்ஸ் ஆகியவையும் இந்த காரில் சிறப்பாக அமைந்துள்ளன.

மைனஸ்

பின் பகுதியில் நல்ல பூட் ஸ்பேஸ் இருந்தாலும், ஒரே ஒரு ரிவர்ஸ் லைட் மட்டுமே பக்காவாகத் தெரிகிறது. மற்றொன்று தெரியாதது ஒரு மைனஸ். சீட்டின் உயரம் சற்று அதிகமாக இருப்பதுபோல் தோன்றுகிறது .

என் தீர்ப்பு

ஒரு பட்ஜெட் தொகைக்குள் நல்ல அழகான, ஆடம்பரமான கார் வாங்க வேண்டும் என்று நினைப்பர்களுக்கும், நீண்ட நெடிய பயணம் செல்பவர்களுக்கும் அதிக வசதிகள்கொண்ட போனஸான கார் இதுவாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இது நல்ல மைலேஜையும் தருகிறது. எனவே, இந்த காரை நம்பி வாங்கலாம்!