கோவையில் யூஸ்டு கார்/டூ-வீலர்களுக்கு ஃபைனான்ஸி-யராக இருக்கும் சரவணசெல்வன், இந்த மாதம் தனது வால்வோ S80 காரில்தான் ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் என்று நாம் தகவல் தெரிவித்ததில் இருந்தே உற்சாகமாக இருந்ததாகச் சொன்னார், சரவணசெல்வனின் உடன்பிறந்த தம்பி சத்தியமூர்த்தி.

‘‘பொண்டாட்டி புள்ளைங்க இல்லாம நானும் தம்பியும் காரை ஸ்டார்ட் பண்ணுனதே இல்லை. இதுதானுங்க ரியல் கிரேட் எஸ்கேப்... என்றா தம்பி சத்தி?’’ என்று ரிமோட் கீ மூலம் வால்வோவை அன்லாக் செய்தார் சரவணசெல்வன். காரில் உட்கார்ந்ததுமே வால்வோவின் சொகுசு, நம்மை மெஸ்மரைஸ் செய்தது. வால்வோவில் மேனுவல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. கியர்பாக்ஸ் முதல் ஹேண்ட் பிரேக், கிளைமேட் கன்ட்ரோல் வரை எல்லாமே ஆட்டோமேட்டிக்தான். கியர் லீவரை ‘D’ மோடுக்குத் தள்ளி ஆக்ஸிலரேட்டரை மிதித்தால், 215bhp-ம் உடனே கிடைப்பது போன்ற ஃபீலிங்.

கோவை தாண்டி ஓரிடத்தில், வதம் செய்த வெயிலுக்கு இதமாக கம்பங்கூழைக் குடித்துவிட்டு, ரூட் மேப்புக்கான ஸ்கெட்ச் போட்டோம். ‘தெற்கு கூர்க் பக்கத்தில் தெரலு என்றொரு இடம்; கணவன்-மனைவி இரண்டு பேர் சேர்ந்து தனியாக ஒரு சரணாலயம் வைத்து காட்டைப் பாதுகாக்கிறார்கள்; தனியார் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியாவின் ஒரே சரணாலயம் இதுதான்’ என்று ஏற்கெனவே ஆசிரியர் மூலம் நமக்கு வாட்ஸ்அப்பில் அசைன்மென்ட் தரப்பட்டிருந்தது. ‘‘வேற வழியே இல்லைங்... சத்தி, சாம்ராஜ் நகர், நஞ்சன்கூடு, கோனிக்கொப்பல் வழியாத்தான் சவுத் கூர்க் போகோணும். ஜிபிஎஸ் செட் பண்ணிறலாமுங்ளா?’’ என்று ஆர்வமானார் தம்பி சத்தி.
வால்வோவில் எல்லோருக்கும் பிடித்தமான ஒரு விஷயம், இதன் பிக்-அப். வேகம் போகப் போகப் பறக்கிறது S80. லாரிகள், சத்தியமங்கலம் காடு, பண்ணாரி கோயில், 27 கொண்டை ஊசி வளைவுகள், திம்பம் என்று அனைத்தையும் சட் சட் என ஓவர்டேக் செய்து சாம்ராஜ் நகர் வந்திருந்தோம்.

தமிழ்நாடு நெடுஞ்சாலை வரை உத்தமனாக இருந்த வால்வோ எஸ்80, கர்நாடக எல்லையில் வில்லனாக மாறியது. காரணம் - இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் வெறும் 151 மி.மீதான் என்பதால், நொடிக்கு நொடி வந்த ஸ்பீடு பிரேக்கர்களிடம் கொஞ்சம் காரின் அடிப்பகுதி அடிவாங்க வைத்து, ஓனர்களான அண்ணன்-தம்பி வயிற்றில் புளியைக் கரைத்தது வால்வோ. கடுப்பான சத்தியிடம், ‘‘கிரவுண்ட் கிளியரன்ஸ் கம்மியானாத்தான்டா தம்பி, ஹைவேஸ்ல ஸ்டெபிளிட்டி கிடைக்கும்!’’ என்றார் சரவணன்.

‘சாய் சரணாலயம்’ அமைந்துள்ள தெரலு எனும் இடம், அடர்ந்த காட்டுப் பகுதி. இருட்டுவதற்கு மேல் போனால் தங்குவதற்குச் சிக்கல் என்று நமக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்ததால், கோனிக்கொப்பல் எனும் இடத்தில் தங்குவதுதான் பெஸ்ட் என்று திட்டம் தீட்டியிருந்தோம். நஞ்சன்கூடுவில் இருந்து கோனிக்கொப்பலுக்கு இரண்டு வழிகள். மைசூர் ஓரமாகவே போய் ஹுன்ஸூர் வழியாகச் செல்வது ஒரு வழி; நாகர்ஹொலே வழியாகச் செல்வது மற்றொரு வழி. நாகர்ஹொலே, பயங்கரமான காட்டுப் பகுதி என்பதால், வால்வோவுக்கு நல்லது அல்ல என்று ஹுன்ஸூர் வழியைத் தேர்ந்தெடுத்தோம். நெடுஞ்சாலையில் பறபறவென்று பறந்து, இருளத் தொடங்குவதற்குள் கோனிக்கொப்பல் வந்திருந்தோம். நம் ஊர் திருவல்லிக்கேணி மாதிரி பரபரப்பான நகரம் கோனிக்கொப்பல். ஆனால், எட்டு மணிக்கெல்லாம் ஊர் அடங்கத் தயாராக இருந்தது.

இங்கு 700-ல் இருந்து 1,000 வரை பட்ஜெட் ரூம்கள் ரகவாரியாகக் கிடைத்தன. ‘நந்தனவனா’ எனும் ஓட்டலில் தங்கிவிட்டு, மறுநாள் சாய் சரணாலாயத்துக்குக் கிளம்பினோம். ஒன்றரை மணி நேரப் பயணம் என்றார் கைடு ஒருவர். பொன்னம்பேட்டை தாண்டி வலதுபுறம் திரும்பினால், வந்த வழியே தெரியவில்லை; அந்தளவு காடு! யாருமே இல்லாத காட்டில், ‘‘வெல்கம் டூ அவர் சாங்ச்சுவரி!’’ என்று நம்மை வரவேற்றனர் மல்ஹோத்ராவும் அவரது மனைவி பமீலாவும். இவர்கள் - இந்தியாவின் முதல் தனியார் சரணாலயமான ‘சாய்’ சரணாலயத்தின் உரிமையாளர்கள். மல்ஹோத்ரா மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்; பமீலா, நியூயார்க்கைச் சேர்ந்த பெண்மணி; அமெரிக்காவில் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட தம்பதியர் இவர்கள்.

மல்ஹோத்ராவுக்கு பமீலா மீது காதல்; பமீலாவுக்கு மல்ஹோத்ரா மீது காதல்; ஆனால், இருவரையும் காடுகளும், விலங்குகளும், இயற்கையும் காதலித்துக்கொண்டிருந்தன. காலில் அப்பி ரத்தம் உறிஞ்சி உப்பிப் பெருகும் அட்டைப் பூச்சிகளைக்கூட, ‘இட்ஸ் அவர் நேச்சர்ஸ் கிஃப்ட்’ என்று மென்மையாகக் கையிலெடுத்து காட்டில் விடும் இயற்கை மனம் படைத்தவர்கள். அமெரிக்காவில் ஹோட்டல் மற்றும் தங்களுக்குச் சொந்தமான பல இடங்களை விற்றுவிட்டு, கர்நாடகாவில் 300 ஏக்கர் காட்டுப் பகுதியை 23 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கிய பெருமைக்குரியவர்கள். Save Animals Initiatiive என்ற வார்த்தைகளின் முதல் எழுத்தை வைத்து ‘சாய் சரணாலயம்’ ஆரம்பித்திருக்கிறார்கள்.

‘‘எங்கள் வாழ்க்கை லட்சியமே இயற்கையோடு இயைந்து இருக்க வேண்டும் என்பதுதான். இவரை அமெரிக்காவில்தான் முதன்முறை சந்தித்தேன். என்னைப் போலவே இவரும் இயற்கை மீது தீராத அன்பு கொண்டிருந்தார். இந்தியாவில்தான் காடுகள் அதிகம்; மத்தியப் பிரதேசம், கர்நாடக காடுகள் பற்றிப் பலமுறை படித்திருக்கிறோம். எனவேதான் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தோம். 23 ஆண்டுகளுக்கு முன்பு இதை நாங்கள் வாங்கும்போது, எங்களைக் கேலி செய்தார்கள். போக்குவரத்து இல்லாத, கரன்ட் இல்லாத, மனித நடமாட்டம் இல்லாத இந்தப் பகுதியை வாங்குவது முட்டாள்தனம் என்றார்கள். பணம் சம்பாதிப்பவர்களுக்கு வேண்டுமானால், இவர்கள் சொல்வது மைனஸ் ஆக இருக்கலாம். எங்களுக்கு இயற்கையோடு ஒன்றி வாழ்வது போதும்!’’ என்றனர்.

காட்டின் நடுவே இவர்களின் வீடு இருக்கிறது. மரங்கள், செடிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் முழுக்க முழுக்க கற்களால் கட்டப்பட்ட வீடு, மினி விண்ட் மில், சோலார் பேனல்கள், எலெக்ட்ரோ ஹைட்ராலிக் பம்ப், வீட்டைச் சுற்றி சில சதுர மீட்டர்களுக்கு விலங்குகளைத் தானாகப் படம் பிடிக்கும் கேமரா ட்ராப் (Camera trap) என்று காட்டுக்குள் செல்லமாக மல்லுக் கட்டி வசிக்கிறது மல்ஹோத்ரா - பமீலா ஜோடி. கேமரா ட்ராப்பில் பதிவான விலங்குகளின் நடமாட்டத்தை கம்ப்யூட்டரில் காட்டி நம்மைப் பரவசப்படுத்தினார் பமீலா. ‘‘விலங்குகளுக்கு மனிதர்கள் எதிரி இல்லை; அவற்றின் இரையும் நாம் அல்ல; இதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். விலங்குகளை எதிர்கொள்ள மூன்று விஷயங்கள் முக்கியம். ஒன்று - பயத்தை எதிர்கொள்ளப் பழகி இருக்க வேண்டும்; இரண்டு - அவற்றுக்கு மரியாதை தர வேண்டும்; மூன்று - அவற்றை மனதாரக் காதலிக்க வேண்டும்! ஏனென்றால், விலங்குகளுக்கு உள்ளுணர்வு அதிகம்!’’ என்று காட்டுப் பகுதியில் தனியாக விலங்குகளைச் சந்திக்க நேர்பவர்களுக்கு டிப்ஸ் கொடுத்தார் பமீலா.

தனது வீட்டைச் சுற்றி பாம்புகளுக்கு உணவாக தவளைகள் வளர்க்கிறார்கள் இவர்கள். மேலும், ஆமை, பூனைகள், கிளிகள் என்று பல்வேறு உயிரினங்களையும் வளர்த்து, ஒரு கட்டத்தில் திரும்பவும் காட்டிலேயே விட்டுவிடுகிறார்கள். இந்தியாவில் மிகப் பெரிய வகை கிளிகள் இவர்களிடம் இருக்கின்றன. கர்நாடக அரசே இதை இவர்களிடம் வளர்க்கக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். ‘‘நாளை இதற்கு விடுதலை. மீண்டும் காட்டில் விடப் போகிறோம்!’’ என்றார் பமீலா.

விடை பெறும்போது, ‘‘வி லவ் கார்ஸ் அண்டு பைக்ஸ் அஸ் வெல்...’’ என்றவர்களிடம், டொயோட்டா குவாலிஸ் மற்றும் மஹிந்திரா பொலேரோ இருப்பதாகச் சொன்னார்கள். கூர்க் பகுதியில் உலா வருவதற்கென்று ஃபோர்டு எண்டேவர் வாங்க விரும்பியவர்களிடம், ‘டொயோட்டா குவாலிஸ் இன்ஜின்போல வேறு எந்த காருக்கும் தரமான இன்ஜின் கிடையாது’ என்று சில கார் எக்ஸ்பர்ட் நண்பர்கள் ஐடியா தர... இப்போது தெற்கு கூர்க் விலங்குகள் மத்தியில் மல்ஹோத்ராவின் குவாலிஸ் இன்ஜின் ஃபெமிலியராம்.

கவலைகளை மறக்கக் கற்றுக் கொடுக் கிறதோ இல்லையோ, மகிழ்ச்சியாக வாழக் கற்றுக் கொடுக்கிறது சாய் சரணாலயம்!