நான் தற்போது பஜாஜ் பல்ஸர் 150 பைக் பயன்படுத்தி வருகிறேன். புதிதாக ஸ்போர்ட்ஸ் பைக் ஸ்டைலில், அதேசமயம் 1 லட்ச ரூபாய் விலையில் பைக் வாங்கலாம் எனத் திட்டமிட்டிருக்கிறேன். யமஹா R15 வாங்கலாமா அல்லது ஹோண்டா CBR 150R வாங்கலாமா எனக் குழப்பமாக இருக்கிறது.

- சுந்தர்ராஜ், திருப்பூர்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு பைக்குகளுமே 1 லட்ச ரூபாய்க்குள் கிடைக்காது. இரண்டு பைக்குகளில் குறைந்த விலை, நல்ல பெர்ஃபாமென்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் பைக்குக்கான ஸ்டைல், கையாளுமை மற்றும் ஓட்டுதல் தரம் கொண்ட பைக், யமஹா R15தான். இதன் சென்னை ஆன் ரோடு விலை 1.33 லட்சம் ரூபாய். ஹோண்டா CBR150R பைக்கைவிட 10 ஆயிரம் ரூபாய் விலை குறைவு. அதனால், இரண்டில் நல்ல சாய்ஸ், யமஹா R15 வெர்ஷன் 2.0 பைக்தான்.

நான் தற்போது டாடா சஃபாரி காரைப் பயன்படுத்தி வருகிறேன். நான் கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறேன். அதனால், என்னால் தாழ்வான இருக்கைகள் கொண்ட காரில் உட்கார்ந்து பயணிக்க முடியாது. என்னுடைய பட்ஜெட் 10-12 லட்சம் ரூபாய். எனக்கு எந்த கார் நல்ல சாய்ஸாக இருக்கும்?

- ராஜன், நாகர்கோவில்.

ரெனோ டஸ்ட்டர் அல்லது நிஸான் டெரானோ உங்களுக்கு நல்ல சாய்ஸாக இருக்கும். இரண்டு கார்களுமே உயரமான சீட்டிங் பொசிஷனைக் கொண்டவை என்பதோடு, ஓட்டுதல் தரமும் சிறப்பாக இருக்கும். மேடு-பள்ளங்களில் பயணிக்கும்போது, காருக்குள் அலுங்கல் குலுங்கல்கள் அதிகமாக இருக்காது. உங்கள் ஊரில் நிஸான் அல்லது ரெனோ ஆகியவற்றில் எந்த டீலர் அருகில் இருக்கிறார் என்பதைப் பொறுத்து, இரண்டு கார்களில் எதை வாங்கலாம் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்.

என்னுடைய பட்ஜெட் 10 லட்ச ரூபாய். ஸ்டைல், பெர்ஃபாமென்ஸ் பற்றி எல்லாம் நான் யோசிக்கவில்லை. என்னுடைய ஒரே தேவை, கார் மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். சின்ன விபத்தில்கூட நொறுங்கிவிடும் கார் வேண்டாம். எந்த கார் வாங்கலாம்?

- மதுமகேஸ்வரன், தஞ்சாவூர்.

10 லட்சம் ரூபாய்க்குள் பாதுகாப்பான, ஏபிஎஸ் மற்றும் காற்றுப் பைகள் கொண்ட, பில்டு குவாலிட்டியிலும் சிறந்த கார் என்றால், ஹோண்டா சிட்டி நல்ல சாய்ஸ்.

நான் தற்போது துபாயில் வசித்து வருகிறேன். என்னுடைய பெற்றோர், திருவண்ணாமலை அருகே ஒரு சின்னக் கிராமத்தில் வசிக்கிறார்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்குச் சென்று வரவும், உறவினர் வீடுகளுக்குச் செல்லவும் அவர்களுக்கு 5 லட்சம் பட்ஜெட்டில் கார் வாங்கித் தர வேண்டும் எனத் திட்டமிட்டிருக்கிறேன். எங்கள் கிராமத்தில் தார்ச் சாலைகள் கிடையாது; ஒரே ஒரு மணல் சாலை மட்டும்தான். அதுவும் குறுகலாகத்தான் இருக்கும். அதனால், சின்ன கார் இருந்தால் போதுமானது. காரை அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றால், அருகில் எதுவும் இல்லை. அதனால், பரவலாக சர்வீஸ் சென்டர்கள் கொண்ட கம்பெனியின் காராக இருந்தால் நலம். எந்த கார் வாங்கலாம்?

- C.நரேஷ் குமார், துபாய்.

5 லட்சம் ரூபாய்க்குள், வயதானவர்கள் வசதியாகப் பயணிக்கக்கூடிய கார் வேண்டும் என்றால், மாருதி வேகன்-ஆர் வாங்கலாம். இதன் இருக்கைகள் உயரமாக இருக்கும் என்பதோடு, ஃப்ளோரிங்கும் தாழ்வாக இருக்கும் என்பதால், வேகன்-ஆர் வயதானவர்களுக்கு நல்ல சாய்ஸ். கிராமத்துச் சாலைகளில் இது வளைத்துத் திருப்பி ஓட்டுவதற்கு வசதியாக இருக்கும் என்பதோடு, மைலேஜும் சிறப்பாக இருக்கும். மாருதி என்பதால், சர்வீஸ் சென்டர் பிரச்னை இருக்காது.

நான் இப்போதுதான் 1 லட்சம் ரூபாய் கொடுத்து யமஹா ஃபேஸர் பைக் வாங்கியிருக்கிறேன். இந்த பைக்கை, பல ஆண்டுகளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாத பைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பது என்னுடைய திட்டம். பைக்கைப் பிரச்னை இல்லாமல் மெயின்டெய்ன் செய்ய, என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

- அருள்தாஸ், ராமேஸ்வரம்.

பைக்கை நன்றாக மெயின்டெய்ன் செய்ய வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்துக்கு எங்களுடைய வாழ்த்துகள். பைக்கை நன்றாகப் பராமரிக்க நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் - பைக்குக்கும் உங்களுக்கும் இடையே ஓர் உறவை வளர்த்துக்கொள்வதுதான். உங்கள் வீட்டில் ஒரு செல்லப் பிராணியை வளர்க்கிறீர்கள் என்றால், அதைத் தினமும் வாக்கிங் அழைத்துச் செல்வது, உணவு கொடுப்பது என எப்படிப் பராமரிப்பீர்களோ, அதுபோல பைக்குடனும் ஒரு உறவையும், அக்கறையையும் வளர்த்துக்கொள்வது அவசியம். குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒருமுறையாவது பைக்கை வாட்டர் வாஷ் செய்வது, டயர்களில் உள்ள காற்றின் அளவை செக் செய்வது போன்ற மிகவும் அடிப்படையான விஷயங்களைச் செய்ய வேண்டும். உங்களுடைய ஃபேஸர் பைக் ட்யூப்லெஸ் டயர்களைக் கொண்டது. ஆணியோ, முள்ளோ குத்தி உங்கள் பைக்கின் டயர் பஞ்சராகியிருந்தாலும்கூட, அது உங்களுக்கு உடனடியாகத் தெரியாது. சில நேரங்களில் டயரில் உள்ள காற்று முழுவதும் குறைந்து பஞ்சர் எனத் தெரியவர, இரண்டு மூன்று நாட்கள்கூட ஆகும். அதனால், தினமும் காலையில் பைக்கை எடுக்கும்போது இண்டிகேட்டர், ஹெட்லைட் ஒளிர்கிறதா என்றும்; டயர்களில் ஏதும் குத்தியிருக்கிறதா என்றும் செக் செய்து கொள்ளுங்கள். குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இன்ஜின் ஆயிலை மாற்றிவிடுவது நல்லது. சிந்தெட்டிக் ஆயில்களைப் பயன்படுத்துங்கள். இது பைக்கின் பெர்ஃபாமென்ஸை அதிகரிக்கும். ஒவ்வொரு முறை சர்வீஸ் விடும்போதும் கார்புரேட்டர், பேட்டரி மற்றும் செயின் ஸ்ப்ராக்கெட்டைச் சரிபார்க்கச் சொல்லுங்கள். இவைதான் பைக்கின் மிக முக்கியமான அம்சங்கள். இதை எல்லாம் சரியான இடைவெளிகளில் செய்து வந்தால் போதும்; பைக் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் தராது.

நான் கோவையில் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிகிறேன். பஜாஜ் பல்ஸர் 220CC பைக் வாங்கலாம் என இருக்கிறேன். கோவையில் இதன் விலை 1 லட்சம் ரூபாய். கடனுதவி வாங்க வேண்டும் என்றால், முன் பணம் கட்ட வேண்டும். ஆனால், என்னிடம் முன்பணம் இல்லை. அதனால் தனியாக வங்கியில் பர்சனல் லோன் வாங்கி, அதன்மூலம் பைக் வாங்கலாம் எனத் திட்டமிட்டிருக்கிறேன். பர்சனல் லோனில் பைக் வாங்குவது நல்லதா? வெஹிக்கிள் லோன் மூலம் வாங்குவது நல்லதா?

- சையது அகமது, நாகப்பட்டினம்.

வெஹிக்கிள் லோனில் நீங்கள் பஜாஜ் பல்ஸர் 220CC பைக் வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம்; நீங்கள் முன்பணமாக 15 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். மீதித் தொகையான 85,000 ரூபாய்க்கு நீங்கள் மூன்று ஆண்டுகளுக்கு மாதத் தவணை 3,289 ரூபாய் கட்ட வேண்டும். இதன்படி பார்த்தால், நீங்கள் மூன்று ஆண்டு களுக்குத் தவணை மட்டும் 1.18 லட்சம் ரூபாய் கட்டியிருப்பீர்கள். முன் பணத்தையும் சேர்த்தால், 1 லட்சம் ரூபாய் பைக்குக்கு நீங்கள் கூடுதலாக 33 ஆயிரம் ரூபாய் கட்டியிருப்பீர்கள். இதையே நீங்கள் பர்சனல் லோன் மூலம் வாங்குகிறீர்கள் என்றால், பர்சனல் லோனுக்கு 16 சதவிகிதம் வட்டியை வங்கிகள் வசூலிக்கின்றன. பர்சனல் லோனுக்கும், வெஹிக்கிள் லோனுக்கும் இடையே ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. வெஹிக்கிள் லோனைப் பொறுத்தவரை ஃப்ளாட்டான வட்டி வசூலிப்பார்கள். ஆனால், பர்சனல் லோனில் பிரின்சிபல் தொகை குறையக் குறைய, வட்டி விகிதமும் குறையும். இப்போது நீங்கள் 1 லட்சம் ரூபாய் பர்சனல் லோன் எடுத்தால், 3 ஆண்டுகளுக்கு மாதத் தவணை 3,516 ரூபாய் கட்டுவீர்கள். மொத்தமாக 1 லட்சம் ரூபாய் கடனுக்கு 26,576 ரூபாய் கூடுதலாகக் கட்டுவீர்கள். இந்த வகையில் பார்க்கும்போது, பர்சனல் லோன்தான் சிறந்தது. மேலும், வெஹிக்கிள் லோன் வாங்கும்போது வாகனம் வங்கியின் பெயரில் அடகு வைக்கப்பட்டிருக்கும். மூன்று ஆண்டுகள் தவணை முடிந்ததும் அதற்கு நோ டியூ சர்ட்டிஃபிகேட் வாங்கி, அதை ஆர்டிஓ அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று ஆர்சி பேப்பரில் அடமானத்தை ரத்து செய்ய வேண்டும். விவரங்களை நீக்க வேண்டும். ஆனால், பர்சனல் லோன் மூலம் பைக் வாங்கும்போது இந்தப் பிரச்னைகள் இருக்காது என்பதோடு, முழுப்பணம் கொடுத்து பைக் வாங்குவதால், வாகனத்தின் ஆன் ரோடு விலையில், நீங்கள் கூடுதல் டிஸ்கவுன்ட்டும் கேட்க முடியும்.