‘புது கார் வாங்கலாமா அல்லது புது காருக்குக் கொடுக்கும் பாதி விலையில், பழைய கார் வாங்கலாமா?’ - இந்தக் கேள்வி பலருக்கும் இருக்கிறது. அதனால்தான் புது கார் மார்க்கெட் எத்தனை பெரிதோ, ஏறக்குறைய அதே அளவுக்கு பழைய கார் மார்க்கெட்டும் பெரிதாக இருக்கிறது. மாருதிக்கு ‘ட்ரூ வேல்யூ’, மஹிந்திராவுக்கு ‘ஃபர்ஸ்ட் சாய்ஸ்’ என்பதுபோல, ஒவ்வொரு கார் நிறுவனமும் பழைய கார்களை விற்பனை செய்ய, யூஸ்டு கார் நிறுவனத்தை ஆரம்பித்துவிட்டன. எல்லா பிராண்ட் கார்களையும் வாங்கி விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கையும் ஏராளம். யூஸ்டு கார் விளம்பரங்களைத் தாங்கிவரும் வலைதளங்கள், செய்தித்தாள்கள் என அனைத்தும் பரபரப்பாக இயங்குகின்றன.

பழைய கார் வாங்குவதில் எந்த அளவுக்கு ஆதாயம் இருக்கிறதோ, அதே அளவுக்கு ரிஸ்க்கும் இருக்கிறது. இந்த ரிஸ்க்குகள் என்னென்ன என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டால், எந்த மாதிரி காரை, எந்த அளவுக்குப் பேரம் பேசி வாங்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். பழைய காரை வாங்கும்போது, எதையெல்லாம் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்பது முக்கியம். எல்லாவற்றுக்கும் மேலாக, எந்த மாதிரி கார்களை வாங்கவே கூடாது என்று தெரிந்திருப்பதும் அவசியம்.

டிரைவர் வைத்துத்தான் காரைப் பயன்படுத்தப்போகிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு சில கார்கள்தான் பொருத்தமாக இருக்கும். காரை நீங்களேதான் ஓட்டப்போகிறீர்கள் என்றால், உங்களுக்கு வேறு கார்கள் பொருத்தமானதாக இருக்கும். உங்கள் பயன்பாட்டுக்கு டீசல் கார் சரிப்பட்டு வருமா அல்லது பெட்ரோல் கார் சரியாக இருக்குமா? நெடுஞ்சாலையில் நிறைய பயணிப்பவர்கள், எந்த காரைத் தேர்ந்தெடுக்கலாம். சிட்டிக்குள் மட்டும் சென்று வருகிறவர்கள், எந்த காரை வாங்கலாம்? இப்படி உங்கள் தேவைகள் அனைத்தையும் ஸ்கேன் செய்து, டாப் 25 பாதி விலை கார்களைப் அலசி ஆராய்ந்திருக்கிறோம்.

‘கார் இத்தனை ஆயிரம் கி.மீ-தான் ஓடியிருக்கிறது’ என்று ஸ்பீடோமீட்டர் பொய் சொன்னாலும், உண்மையில் கார் எத்தனை கி.மீ ஓடியிருக்கிறது என்பதை, டயர்களின் தேய்மானத்தை வைத்தே கணக்கிட்டு விடுவீர்கள்தானே? அதேபோல, காரின் உள் மற்றும் வெளித்தோற்றத்தில் நாம் காட்டுகிற கவனத்தை, கார் தொடர்பான ஆவணங்களைப் பார்ப்பதிலும் காட்ட வேண்டும். கார் யார் பெயரில் பதிவாகி இருக்கிறது; எத்தனை முறை கை மாறி இருக்கிறது; கார் வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை எல்லாம், அசல் ஆவணங்களைப் பார்த்து ஊர்ஜிதம் செய்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, காருக்கு எந்தத் தேதி வரை இன்ஷூரன்ஸ் இருக்கிறது; ஏற்கெனவே இன்ஷூரன்ஸில் க்ளைம் ஏதும் பெற்றிருக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இது, காரின் உண்மையான மதிப்பைக் கணக்கிடக் கைகொடுக்கும்.

இரண்டில் ஒன்றைப் பார்த்துவிடலாம் இப்போதே!

என்றும் உங்களுக்காக

ஆசிரியர்