புதிய தலைமுறை அக்கார்டு செடான், 2016ம் ஆண்டு இந்தியாவுக்கு விற்பனைக்கு வருவதை, ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் கட்சுஷி இனோ உறுதிப்படுத்தியுள்ளார். சர்ப்ரைஸாக, ''அக்கார்டு ஹைபிரிட் காரும் இந்தியாவில் விற்பனைக்கு வரும்!'' என்கிறார் கட்சுஷி இனோ.

பழைய அக்கார்டு காரைவிட, புதிய மாடல் ரொம்பவே ஷார்ப்பான டிஸைன். கிரில்லைச் சுற்றி இருக்கும் க்ரோம், காருக்கு கார்ப்பரேட் லுக்கைக் கொடுக்கிறது. பின் பக்க டிஸைன் கொஞ்சம் தட்டையாக இருந்தாலும், காரின் ஒட்டுமொத்த தோற்றம் நன்றாகவே உள்ளது. 18இன்ச் அலாய் வீல்கள் காரின் டிஸைனுடன் அழகாகப் பொருந்துகின்றன. பழைய காரைவிட 40 மடங்கு இறுக்கமான கட்டமைப்பைக்கொண்டுள்ள புதிய மாடலில், எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங்கும் புத்தம் புதியதுதான்.

2.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜினின் பவர் டெலிவரி அருமை. ஆனால், 5ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ரொம்பவே மந்தமாக இயங்குகிறது. புதிய அக்கார்டு காரின் இருக்கைகள் மிக சொகுசாக உள்ளன. வசதிகளுக்கும் குறைவில்லை.

புதிய ஹோண்டா அக்கார்டு கார், இங்கு விற்பனைக்கு வரும் அதே சமயம் புதிய ஸ்கோடா சூப்பர்ப், ஃபோக்ஸ்வாகன் பஸாத் கார்கள் இங்கு விற்பனைக்கு வரவிருக்கின்றன. 'இந்த விளையாட்டுக்கு நான் வரலை’ என்ற ரீதியில், ஹூண்டாய் தன்னுடைய சொனாட்டா காரின் விற்பனையை இங்கு நிறுத்திவிட்டது. எனவே, ஹோண்டா அக்கார்டு கார் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு பிராண்டுகள், தங்களின் கார்களை அக்கார்டு காரின் விலைக்கு அருகே விற்பனைக்குக் கொண்டுவருவது டேஞ்சர்தான்!