செம ஸ்டைல் க்ரூஸ் அறிமுகம்!

இரண்டாவது தலைமுறை க்ரூஸ் செடான் காரை அறிமுகப்படுத்திவிட்டது செவர்லே. ஜெனரல் மோட்டார்ஸின் புதிய D2 ஃப்ரன்ட் வீல் டிரைவ் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது லேட்டஸ்ட் க்ரூஸ். பழைய க்ரூஸ் காரைவிட வளைவு நெளிவுகள் நிறைந்த டிஸைனைக் கொண்டிருக்கிறது. 15 மிமீ வீல்பேஸ் அதிகம். உள்ளே கால்களுக்கான இடவசதி 51 மிமீ அதிகரித்திருக்கிறது. பழைய காரைவிட 27 சதவிகிதம் இறுக்கமான கட்டுமானத்தைக் கொண்டிருக்கிறதாம் புதிய கார். இந்தியாவில் 2017-ம் ஆண்டு விற்பனைக்கு வரும்போது, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் அளிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். அனைத்து வேரியன்ட்களிலும் 10 காற்றுப் பைகள், ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு வசதிகளைக்கொண்டிருக்கிறது புதிய க்ரூஸ்.

ஆண்டுக்கு ஒரு பைக்!

2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை ஆண்டுக்கு ஒரு பைக்கை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனைக்குக் கொண்டுவர இருப்பதாக, அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் இயக்குனர் சித்தார்த்த லால் தெரிவித்துள்ளார். இதற்காக சுமார் 500 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறதாம் ராயல் என்ஃபீல்டு. மேலும், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் லைன்-அப் 250சிசி-யில் இருந்து 750சிசி வரை இருக்குமாம். அப்படியென்றால், 300சிசி செக்மென்ட்டில் ஒரு பைக் வரும் என எதிர்பார்க்கலாம். ராயல் என்ஃபீல்டு பைக்குக்கு சுமார் 5 மாதங்களாக இருக்கும் வெயிட்டிங் பீரியட், அடுத்த ஆண்டுக்குப் பிறகு குறைந்துவிடும் என்கிறார்கள். காரணம், இப்போது மாதம் 30,000 பைக்குகளைத் தயாரித்து வரும் ராயல் என்ஃபீல்டு, அடுத்த ஆண்டு முதல் மாதம் 50,000 பைக்குகளைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாம்.

மஹிந்திராவின் ஜீட்டோ!

தெலுங்கானா மாநிலம் ஜஹீராபாத்தில், சுமார் 350 ஏக்கர் பரப்பளவுகொண்ட வளாகத்தில் மஹிந்திராவின் தொழிற்சாலை அமைந்துள்ளது. அதில், இலகு ரக வாகனங்களைத் தயாரிப்பதற்குப் புதிய யூனிட்டைத் துவங்கியுள்ளது மஹிந்திரா. இங்கு தயாராகும் புத்தம் புதிய மினி ட்ரக், ஜீட்டோ. இது, மொத்தம் 8 விதமான வேரியன்ட்களில், ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது. 5.5 அடி, 6.0 அடி, 6.5 அடி என மூன்று விதமான சரக்கு ஏற்றும் பிளாட்ஃபார்ம்

அளவுகளிலும், 600 கிலோ, 700 கிலோ என இரண்டு விதமான எடை ஏற்றும் வகையிலும், 11hp மற்றும் 16hp சக்தியை அளிக்கக்கூடிய இருவகையான இன்ஜின் வேரியன்ட்டுகளுமாக, தேவைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கும் வகையில் ஜீட்டோவை உருவாக்கியுள்ளது மஹிந்திரா.

ஜீட்டோவில் உள்ள புத்தம் புதிய M-DURA DI எனும் சிங்கிள் சிலிண்டர், வாட்டர் கூல்டு இன்ஜின், 625 சிசி திறன்கொண்டது. 3,000 ஆர்பிஎம்-ல் 11hp சக்தியை அளிக்கும் வகையில் ஓர் இன்ஜினும் 3,600 ஆர்பிஎம்-ல் 16hp சக்தியை அளிக்கும் வகையில் ஓர் இன்ஜினும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இன்ஜின்கள், லிட்டருக்கு 27.8 மற்றும் 37.6 கி.மீ மைலேஜ் அளிக்கும் என்கிறது மஹிந்திரா. மேனுவல் ஸ்டீயரிங், 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ள ஜீட்டோவில், முன்பக்கம் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

ஃபோக்ஸ்வாகன் டிஸைன் ‘தல’ இப்போது ஹூண்டாய் நிறுவனத்தில்!

ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் கீழ் டிஸைன் தலைவராக இருந்த Luc Donckerwalke, ஹூண்டாய் நிறுவனத்தின் டிஸைன் தலைவராகப் பதவியேற்க இருக்கிறார். ஆடி TT காரை வடிவமைத்தவர்களில் இவர் முக்கியமானவர். முக்கியமாக லம்போகினி கலார்டோ காரின் டிஸைனிலும் இவருடைய கைவண்ணம் இருக்கிறது. ஹூண்டாயில் இவருடைய கலைத்திறன் எப்படி இருக்கும் என்பதை இன்னும் 4 முதல் 5 ஆண்டுகள் கழித்து வரும் ஹூண்டாய் கார்களில் பார்க்கலாம்!

கம்ப்யூட்டர் கேம்ஸ் to ரேஸ் டிராக்

கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் கார் ரேஸ் விளையாடுபவர்கள், நிஜ ரேஸில் கலந்துகொள்ள முடியுமா? ‘முடியும்’ என்று உரக்கச் சொல்லுகிறது GT அகாடமி. ‘ப்ளே ஸ்டேஷன்’ என்ற கம்ப்யூட்டர் கேம்ஸ் கம்பெனியும், ரேஸ் உலகின் முக்கிய சக்தியாக விளங்கும் நிஸானும் இணைந்து உருவாக்கியிருக்கும் GT அகாடமியின் சீஸன்-2 இது.

மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை ஆகிய நான்கு நகரங்களிலும் ப்ளே ஸ்டேஷன் ரேஸில் வெளுத்துக் கட்டும் பத்து ரேஸ் வீரர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது நிஸான். அதேபோல, நாடு முழுதும் நடைபெற்ற ஆன் லைன் போட்டிகளில் வெற்றி பெற்ற வேறு பத்து பேரும் இவர்களோடு சேர்ந்து, நிஜமான ரேஸ் டிராக்கில் மோதுவார்கள். இவர்களில் இருந்து மிகச் சிறந்த ஆறு பேரைத் தேர்ந்தெடுத்து இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மைதானத்தில் நடைபெறும் Nissan GT-R LM Nismo ரேஸில் பங்குகொள்ள அனுப்புகிறது நிஸான். இதில் வெற்றி பெறுபவர்கள் துபாயில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
கம்ப்யூட்டரில் இருந்து நேரடியாக ரேஸ் மைதானத்துக்கு ஒருவரைக் கடத்தினால், அந்தப் புதிய சூழ்நிலைக்கு அவர் பழக வேண்டும் என்பதால், தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கான அனைத்துப் பயிற்சிகளையும் ரேஸ் வீரர் கருண் சந்தோக்கை வைத்து வழங்குகிறது நிஸான்.

இந்தியாவின் டாப் 5 கார் நிறுவனங்கள்!

2015 நிதியாண்டில் அதிக கார்களை விற்பனை செய்த டாப் 5 கார் நிறுவனங்களின் பட்டியல் இப்போது வெளியாகி உள்ளது. எதிர்பார்த்தபடியே மாருதி சுஸூகி முதல் இடத்தில் ராஜாவாக இருக்கிறது. ஹூண்டாய் இரண்டாவது இடத்திலும், மஹிந்திரா, ஹோண்டா, டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் முறையே 3-வது முதல் 5-வது இடம் வரை பிடித்துள்ளன. 2014 நிதியாண்டில் 4-வது இடத்தில் இருந்த டாடா மோட்டார்ஸ், இப்போது 6-வது இடத்தில்!

இந்தியாவுக்கு வருகிறது யமஹா R25

யமஹா YZF - R3 பைக்கை இந்தியாவில் டெஸ்ட் செய்துவருகிறது யமஹா. இந்த பைக்குக்கும் YZF-R25 பைக்குக்கும் வித்தியாசங்கள் குறைவுதான். யமஹா, இதில் எந்த பைக்கை இங்கு விற்பனைக்குக் கொண்டுவருகிறது என்பதை ரகசியமாகவே வைத்திருக்கிறது. இந்த நிலையில், இந்த 2 பைக்குகளையுமே இங்கு விற்பனைக்குக் கொண்டுவர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. R25 பைக் ஏற்கெனவே இந்தோனேஷியாவில் விற்பனையில் உள்ளது. இதன் 250 சிசி, 4 ஸ்ட்ரோக், லிக்விட் கூல்டு, பேரலல் ட்வின் சிலிண்டர் இன்ஜின் 35.5 bhp சக்தியை அளிக்கிறது. இதன் எடை 166 கிலோ. R3 பைக்கில் இருப்பது 320 சிசி, 4 ஸ்ட்ரோக், 2-சிலிண்டர் இன்ஜின். இது, 41.4bhp சக்தியை அளிக்கிறது. ஆனால், பைக்கின் எடை வெறும் 169 கிலோ மட்டுமே. இரண்டு பைக்குகளுமே இங்கு விற்பனைக்கு வந்தால், ஜாலிதான்!