ஆடி, இந்தியாவின் நம்பர் ஒன் சொகுசு கார் நிறுவனமாக இடம் பிடிக்க முக்கியக் காரணம், ஆடி Q3 காரின் வெற்றி. இப்போது அப்டேட்டான லேட்டஸ்ட் Q3 இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது.

Q3 ஃபேஸ்லிஃப்ட் மூலமாகத்தான், தன்னுடைய எஸ்யுவிகளுக்கான புதிய டிஸைனை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது ஆடி. வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் புதிய Q7 காரின் கிரில் டிஸைன், Q3 காருக்கு வந்துவிட்டது. சிங்கிள்-பீஸ் கிரில்லான இதில், க்ரோம் சரவுண்ட் கொடுக்கப்பட்டிருப்பது, காருக்குத் தனித்துவத்தைக் கொடுக்கிறது. புதிய பம்பர் டிஸைனும், இந்த கிரில்லும் இணைந்து காரை இன்னும் ஸ்மார்ட்டாகக் காட்டுகின்றன.

ஹெட்லைட்ஸ் முன்பைவிட ஷார்ப். டாப் வேரியன்ட்களில் ஃபுல் LED ஹெட்லைட்ஸ் அளிக்கப்பட்டுள்ளன. A8, R8 கார்களில் இருப்பதுபோல, இண்டிகேட்டர்கள் வெளிப்பக்கமாக வளைந்து இருக்கின்றன. பனி விளக்குகள், ஹெட்லைட் அசெம்பிளிக்கு உள்ளேயே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று புதிய கலர் ஆப்ஷன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பழைய Q3 காரைவிட கூடுதல் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. விலை உயர்ந்த வேரியன்டில் 20GB ஆன்-போர்டு ஹார்ட் டிரைவ், இரண்டு மெமரி கார்டு ஸ்லாட்கள், புதிய ஆடியோ சிஸ்டம், ரியர்வியூ கேமரா, பேனோரமிக் சன்ரூஃப் போன்றவை ஸ்டாண்டர்டாக அளிக்கப்படுகின்றன. சேட்டிலைட் நேவிகேஷன் மட்டும் ஆப்ஷனல். 35TDI மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் 174bhp சக்தியை அளிக்கிறது. இப்போது பேடில் ஷிஃப்ட் இருப்பதால், முன்பைவிட Q3 காரை அனுபவித்து ஓட்ட முடிகிறது. ஸ்டீயரிங் லைட்டாக இருந்தாலும், ஓட்டத் தூண்டும் விதத்தில் இல்லை. ஆனால், ஓட்டுதல் தரத்தில் அருமையாக இருக்கிறது.

ஆடி Q3 ஃபேஸ்லிஃப்ட்டின் ஓட்டுதல் தரமும் ஸ்மூத்னெஸும் இதன் முக்கிய ப்ளஸ் பாயின்ட்டுகள். ஸ்டீயரிங் இன்னும் இந்த காரின் மைனஸ் பாயின்ட் ஆகவே இருக்கிறது. ஆனால், முன்பைவிட சிறப்பான வசதிகளோடு களத்தில் இறங்கியிருக்கிறது புதிய Q3 ஃபேஸ்லிஃப்ட். ஆடி இந்தியா தன்னுடைய நம்பர் ஒன் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள, புதிய Q3 ஃபேஸ் லிஃப்ட் உதவும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.