இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காரான ஹோண்டா ஜாஸ், ஜூலை முதல் வாரத்தில் விற்பனைக்கு வருகிறது. மறுபிறவி எடுத்திருக்கும் ஹோண்டா ஜாஸ் காரை கோவாவில் டெஸ்ட் செய்தோம்.

2009-ம் ஆண்டு முதன்முதலாக இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஜாஸ். 2013-ல் இதன் விற்பனை நிறுத்தப்பட்டது. ‘ஏற்கெனவே மார்க்கெட்டுக்கு வந்து தோல்வியடைந்த கார்’ என ஜாஸை ஒதுக்கிவிட முடியாது. காரணம், பில்டு குவாலிட்டி, இடவசதி, இன்ஜின் தரம் ஆகியவற்றில் இந்த செக்மென்ட்டின் பெஞ்ச் மார்க் கார், ஜாஸ். இந்த காரை அடிப்படையாக வைத்துதான் போட்டியாளர்கள் தங்கள் கார்களை விற்பனைக்குக் கொண்டுவந்தார்கள். ஆனால், அப்போது 30 சதவிகித பாகங்களை நேரடியாக இறக்குமதி செய்து தயாரித்ததால், ஜாஸை சுமார் 8 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தது ஹோண்டா. ஆனால், போட்டி கார்களோ 5 - 6 லட்ச ரூபாய்க்கு விற்பனையானது. ஜாஸின் தோல்விக்கு இந்த விலை வித்தியாசம்தான் முக்கியக் காரணம்.

இப்போது 100 சதவிகித உள்நாட்டுத் தயாரிப்பு மட்டும் அல்ல, டீசல் இன்ஜினுடனும் விற்பனைக்கு வருகிறது ஜாஸ். ஆனால், இந்த முறை ஒரு மாற்றம். ஜாஸுக்கு பெஞ்ச் மார்க் காராக இப்போது இருப்பது ஹூண்டாய் எலீட் i20. மாதத்துக்கு 10 ஆயிரம் கார்கள் வரை விற்பனையாகும் அளவுக்கு விஸ்வரூப வெற்றி பெற்றுவிட்டது i20.

இரண்டு கார்களையும் இங்கே மோத விட்டிருக்கிறோம். ஜப்பானின் ஜாஸ் வெல்லுமா அல்லது கொரியாவின் i20 வெற்றியைத் தக்க வைக்குமா?
டீசல் இன்ஜின்தான் இரண்டு கார்களிலுமே ஹாட் செல்லர்ஸ் என்பதால், இன்ஜினில் இருந்தே ஆரம்பிப்போம்!

இன்ஜின்

ஹூண்டாயில் என்ன டீசல் இன்ஜின் இருக்கிறது என்பது எல்லோருக்குமே மனப்பாடம் ஆகியிருக்கும். 1.4 லிட்டர், காமென் ரெயில் டீசல் இன்ஜின் ஹூண்டாய் எலீட் i20 காரில் இடம் பெற்றுள்ளது. இது, அதிகபட்சமாக 89bhp சக்தியை 4,000 ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்துகிறது. அதிகபட்சமாக 1,500-2,750ஆர்பிஎம்-ல் 22.4kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது.

ஹோண்டா அமேஸில் 1.5 லிட்டர் இன்ஜினுடன் டீசல் கணக்கைத் துவக்கிய ஹோண்டா, அதே இன்ஜினை சிட்டி, மொபிலியோவை அடுத்து ஜாஸ் காரிலும் பொருத்தியிருக்கிறது. ஹோண்டாவின் இந்த காமென் ரெயில் டீசல் இன்ஜின், 98.6bhp சக்தியை 3,600 ஆர்பிஎம்மிலேயே வெளிப்படுத்துகிறது. டார்க், ஹூண்டாயைவிட 2kgm குறைவாக, 20.4 kgm டார்க்கை 1750 ஆர்பிஎம்-ல் வெளிப் படுத்துகிறது. இரண்டு கார்களிலுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இடம் பிடித்துள்ளன.

ஹோண்டாவின் இந்த டீசல் இன்ஜின், சத்தம் போடும் இன்ஜினாக இருப்பதுதான் மிகப் பெரிய பலவீனம். ஆனால், ஹோண்டா சிட்டி காரில் எழும் சத்தத்தைவிடவும் ஜாஸில் குறைவாகக் கேட்பது ஆறுதல். கார் வேகமாகச் செல்லச் செல்ல, சத்தம் குறைவாகக் கேட்பதுபோல இருக்கிறது. டர்போ லேக் இல்லாமல், ஓட்டுவதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதுதான் ஜாஸின் பலம். 1,500-2,500 ஆர்பிஎம் வரை பவர் டெலிவரி மிகவும் சீராக இருப்பதால், நகருக்குள் ஒரு பெட்ரோல் காரை ஓட்டுவதுபோன்றே ஈஸியாக இருக்கிறது. கிளட்ச் ஹெவியாக இல்லை என்பதோடு, கியர் லீவரும் ஸ்போர்ட்டியாக இருப்பதால், டிரைவிங் அனுபவம் ஜாஸில் குதூகலம்தான். நெடுஞ்சாலைப் பயணம் ஈஸியாக இருந்தாலும், ஓட்டுதல் அனுபவம் அவ்வளவு ஜாலியாக இல்லை. காரணம், 4,000ஆர்பிஎம்-க்கு மேல் இன்ஜினில் பவர் இல்லை.

ஜாஸை ஓட்டிவிட்டு ஹூண்டாய் எலீட் i20 காருக்குள் உட்கார்ந்தால், அமைதியாகிறது மனம். ஜாஸில் இருப்பதுபோல சத்தம் இல்லாத இன்ஜினாக இருக்கிறது ஹூண்டாயின் டீசல் இன்ஜின். காரை ஓட்ட ஆரம்பித்ததும் டீசல் இன்ஜினுக்கே உண்டான தடதட சத்தம் கேட்டாலும், இது ஜாஸ் அளவுக்கு உறுத்தலாக இல்லை. ஹோண்டாவைவிட மேம்படுத்தப்பட்ட டீசல் இன்ஜினாக இருந்தாலும், ஹூண்டாயின் இன்ஜினில் டர்போ லேக் அதிகம். இன்ஜினில் இருந்து பவர்

கிடைக்க 1,800 ஆர்பிஎம் வரை காத்திருக்க வேண்டியிருப்பதால், நகருக்குள் ஓட்டுவது அவ்வளவு எளிதாக இல்லை. அடிக்கடி கியர்களை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டியிருப்பது, ஒரு கட்டத்தில் சோர்வடைய வைக்கிறது. ஆனால், 4,900 ஆர்பிஎம் வரை பவர் இருப்பதால், நெடுஞ்சாலையில் வேகமாக இருக்கிறது i20. இந்த செக்மென்ட்டில் பெர்ஃபாமென்ஸில் பட்டையைக் கிளப்பும் ஃபோக்ஸ்வாகன் போலோ 1.5 லிட்டர் இன்ஜின் அளவுக்கு பெர்ஃபாமென்ஸ் இல்லை என்றாலும், i20 இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறது. டர்போ லேக் பிரச்னையால் 0-100 கி.மீ வேகத்தில் ஜாஸைவிடவும் மெதுவாக இருக்கிறது i20. 0-100 கி.மீ வேகத்தை ஜாஸ் 12.33 விநாடிகளில் கடக்க, இதே வேகத்தைக் கடக்க, 12.85 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது i20.

ஓட்டுதல் தரம்

ஹேட்ச்பேக் கார்களை 2 லட்ச ரூபாய்க்கும் வாங்க முடியும்; 9 லட்ச ரூபாய்க்கும் வாங்க முடியும். ப்ரீமியம் ஹேட்ச்பேக் என வகைப்படுத்தப்படும் இந்த 6 முதல் 9 லட்ச ரூபாய் ஹேட்ச் பேக் கார்களில் ஓட்டுதல் தரம் என்பது மிகவும் முக்கியம். கார் பார்ப்பதற்கு ஸ்டைலாக, பெர்ஃபாமென்ஸில் கில்லியாக மட்டும் இருந்தால் போதாது. ஓட்டுதல் தரம் மிகவும் முக்கியம்.

மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது, அலுங்கல் குலுங்கல் இல்லாத காராகவும், திருப்பங்களில் வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு கையாளுமையில் சிறந்த காராகவும் வேண்டும். இந்த வகையில் ஜாஸ், எலீட் i20 ஆகிய இரு கார்களையும் ஒப்பிடும்போது, ஹோண்டா ஜாஸ் முன் நிற்கிறது. நகருக்குள் குறைந்த வேகத்தில் ஓட்டும்போது, i20 காரின் ஓட்டுதல் தரம் சிறப்பாக இருந்தாலும், நெடுஞ்சாலையில் வேகமாகப் பயணிக்கும்போது, ஹோண்டா ஜாஸ்தான் ஸ்டெபிளிட்டியில் சிறந்தது. அதேபோல், ஸ்டீயரிங் ஃபீட்பேக்கிலும் ஜாஸே சிறப்பாக இருக்கிறது. அதாவது, ஸ்டீயரிங்கை வளைக்கும்போது முன் வீல்களில் அதன் திருப்பம் உடனடியாகத் தெரிய வேண்டும். அதில் ஜாஸ்தான் கச்சிதம். i20 காரில் திருப்பங்களில் வளைத்துத் திருப்பி ஓட்டும்போது, இன்னும் எந்த அளவுக்கு ஸ்டீயரிங்கைத் திருப்ப வேண்டும் எனும் கணிப்பு மாறிக்கொண்டே இருக்கிறது.

i20 காரில் ஓட்டுநரின் வசதிக்கு ஏற்ப ஸ்டீயரிங்கை மேலும் கீழுமாகவும், முன்னும் பின்னும் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும். ஆனால், ஜாஸில் மேலும் கீழும் மட்டுமே அட்ஜஸ்ட் செய்ய முடியும். ஜாஸின் மிகப் பெரிய மைனஸ் என்பது, இதன் உயரமான டேஷ்போர்டும், A-பில்லரும்தான். A-பில்லர் மிகவும் தடிமனாக இருப்பதால், வளைவுகளில் பார்வையை மறைக்கிறது. விபத்துகளுக்கு இது வித்திடும் என்பதால், கவனம் தேவை. i20 காரில் இருக்கைகள் சொகுசாகவும், டேஷ்போர்டு சரியான உயரத்திலும் இருக்கின்றன.

உள்ளே...

எல்லா ஹூண்டாய் கார்களுக்குமே உள்ள பலம்தான் எலீட் i20 காரின் பலமும். ஹூண்டாய் ஒரு செக்மென்ட்டில் காரை விற்பனைக்குக் கொண்டுவரும்போது, அந்த செக்மென்ட்டில் இல்லாத வசதிகளைக் கொண்டுவந்து ஆச்சரியப்படுத்தும். அந்த வகையில் சிறப்பம்சங்களில் ‘தி பெஸ்ட்’ கார் ஹூண்டாய் i20. டேஷ்போர்டு ஹை கிளாஸ் ரகம். செடான் சொகுசு கார்களுக்கு இணையாக, இதில் பல வசதிகளை அள்ளிக் கொடுத்திருக்கிறது ஹூண்டாய். அதை அப்படியே காப்பி பேஸ்ட் அடித்து இன்னும் கொஞ்சம் வசதிகளுடன் ஜாஸைக் கொண்டுவந்திருக்கிறது ஹோண்டா. விலை உயர்ந்த வேரியன்ட்டில் 6 இன்ச் ஸ்கிரீனும், விலை குறைவான வேரியன்ட்களில் 5 இன்ச் டச் ஸ்கிரீனும் இடம் பிடித்திருக்கிறது. ஆனால், i20 காரில் இருக்கும் கீ-லெஸ் என்ட்ரி வசதி, ஜாஸில் இல்லை. ஆனால், அதற்கான ஆப்ஷன் காரில் இருக்கிறது. சில மாதங்கள் கழித்து இந்த வசதி ஜாஸில் அறிமுகப்படுத்தப்படலாம். இரண்டு கார்களிலுமே பாதுகாப்புக்கு ஏபிஎஸ் பிரேக்குகளும், 2 காற்றுப் பைகளும் உள்ளன.

ஜாஸில் கூடுதலாக, கிளைமேட் கன்ட்ரோல் டச் ஸ்கிரீனிலேயே சேர்க்கப்பட்டிருக்கிறது. ஹோண்டா ஜாஸில் பின் பக்க ஏ.சி வென்ட் இல்லை. எலீட் i20 காரில் பின் சீட்டில் உட்காருபவர்களையும் குளிர்விக்க, ஏ.சி வென்ட் உண்டு.

பின் பக்க இடவசதியைப் பொறுத்த வரை ஹோண்டா ஜாஸ்தான் நம்பர் ஒன். கால்களை நீட்டி மடக்கி உட்கார்ந்து பயணிக்க தாராளமான இடவசதி உள்ளது. ஜாஸின் விலை உயர்ந்த வேரியன்டில் மேஜிக் சீட் வசதி உள்ளது. இதன்படி டிரைவர் சீட்டைத் தவிர, எல்லா இருக்கைகளையுமே மடக்கிக் கொள்ளலாம். இதனால், வீட்டைக் காலி செய்யும் அளவுக்கு இந்த காரில் பொருட்கள் எடுத்துச்செல்ல இடவசதி இருக்கிறது. ஹோண்டா ஜாஸில் பெட்ரோல் டேங்க், முன் இருக்கைகளுக்குக் கீழே வைக்கப்பட்டிருப்பதால், பின் இருக்கைகளின் கீழ் பைகள் உள்ளிட்ட பொருட்களை வைக்கவும் இடம் இருக்கிறது.

ஸ்டைல்

பீரிமியம் ஹேட்ச்பேக் கார்களின் டிஸைனை உண்மையிலேயே பிரீமியம் ஆக்கியது ஹூண்டாய்தான். எலீட் i20 மூலம் மிக மிக ஸ்டைலான காரை வடிவமைத்துவிட்டது ஹூண்டாய். ஜாஸ், ஒரு எம்பிவி கார் போன்ற தோற்றத்துடன் இருக்கிறது. ஜாஸ் காரின் டிஸைன் அதிரடியாக இல்லை என்றாலும், பழசாக இல்லை.

மைலேஜ்

ஹோண்டா ஜாஸின் மைலேஜை முழுமையாக இன்னும் சோதிக்கவில்லை. ஆனால், அராய் சான்றிதழ்படி, ஜாஸ் லிட்டருக்கு 27 கி.மீ மைலேஜ் தருவதாகச் சொல்கிறது ஹோண்டா. எலீட் i20

டீசலின் அராய் மைலேஜ், லிட்டருக்கு 22.54 கி.மீ.

இந்த இரண்டு கார்களில், எது சிறந்த கார் என்று கேட்பது... உங்களுக்கு ரஜினி படம் பிடிக்குமா, கமல் படம் பிடிக்குமா என்று கேட்பது போலத்தான். எலீட் i20, ரஜினி போல செம ஸ்டைல் பெர்ஃபாமெர். அதேசமயம், நீங்கள் ஒரு காரில் எதிர்பார்க்கும் அத்தனை விஷயங்களையும் கொண்டு எனர்ஜெட்டிக்காக உங்களை வைத்திருக்கும் கார். ஹோண்டா ஜாஸ், கமல் படம் மாதிரி. கவர்ந்திழுக்கும் கவர்ச்சி அம்சங்கள், ஸ்டைல் விஷயங்கள் இல்லை என்றாலும் தரமான, அதிக இடவசதிகொண்ட, மைலேஜிலும் சிறந்த காராக இருக்கிறது ஜாஸ். ஆனால், இவை அனைத்தும் சேர்ந்தாலும் ஹூண்டாய் எலீட் i20 காரை வீழ்த்தும் அளவுக்கு இல்லை. ஸ்டைலான, பெர்ஃபாமென்ஸிலும் சிறந்த, நம்பகத்தன்மை மிகுந்த, அதிக சர்வீஸ் நெட்வொர்க்கையும் கொண்ட ஹூண்டாய் எலீட் i20 கார், போட்டியில் வெல்கிறது.