மாருதி செலெரியோ, புதிய கார் அல்ல; ஆனால், செலெரியோவுக்கு டீசல் இன்ஜின் புது அறிமுகம். மாருதிக்கும் இந்த டீசல் இன்ஜின் புதிதுதான். இதுவரை ஃபியட்டின் மல்ட்டிஜெட் இன்ஜின்களைத் தனது காரில் பொருத்திக்கொண்டிருந்த மாருதி, முதல்முறையாக தனக்குச் சொந்தமான டீசல் இன்ஜினை செலெரியோவில் பொருத்தியிருக்கிறது. மேலும், செலெரியோ டீசல் கார்தான் இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் கார் (லிட்டருக்கு 27.62 கி.மீ) என்கிறது மாருதி. உண்மைதானா?

டிஸைன், இன்ஜினீயரிங்

செலெரியோ பெட்ரோல் மாடலுக்கும் டீசல் மாடலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. காரின் ஒட்டுமொத்த டிஸைனில் ‘அப்பீல்’ இல்லாவிட்டாலும், ‘டல்’லாகவும் இல்லை. அலாய் வீல்களும், பக்கவாட்டுக் கோடுகளும் காரின் டிஸைனைக் கொஞ்சம் உயிர்ப்போடு வைத்துள்ளன.

செலெரியோவின் முன் பக்கம் மெக்ஃபர்ஸன் ஸ்ட்ரட் சஸ்பென்ஷனும், பின்பக்கம் நான்-இண்டிபெண்டன்ட் டார்ஷன் பீம் சஸ்பென்ஷனும் உள்ளன. காரின் எடை மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அனைத்து வசதிகளையும்கொண்ட ZDi வேரியன்ட்டில்கூட, செலெரியோ டீசல் மாடலின் எடை வெறும் 900 கிலோதான். இது, பெட்ரோல் ZXi வேரியன்ட்டைவிட 70 கிலோதான் அதிகம். திடமான இன்ஜின், பாடி ஷெல், முன் பக்க சஸ்பென்ஷன் ஆகியவற்றால்தான் இந்த 70 கிலோ அதிகமாகியுள்ளது.

காரின் உள்பக்கமும் சாதாரணமாகத்தான் இருக்கிறது. டயல்கள் படிக்க எளிதாக இருந்தாலும், பார்க்க அழகாக இல்லை. பிளாஸ்டிக் தரம் ஓகே ரகம். பின் பக்க டோர் பாக்கெட்டுகளில் தண்ணீர் பாட்டில்களை வைக்க முடியும். 235 லிட்டர் டிக்கி இடவசதி உண்டு. பின்னிருக்கையை மடித்துக்கொண்டால், இன்னும் இடம் கிடைக்கிறது.

பின்னிருக்கையில் மூன்று பேர் சொகுசாக உட்காருவது கடினம். இருக்கைகள் தாழ்வாக இருந்தாலும், சொகுசாக உள்ளன. விலை உயர்ந்த வேரியன்ட்டில் ப்ளூ-டூத், டிரைவர் இருக்கைக்கு உயர அட்ஜஸ்ட்மென்ட், ஸ்டீயரிங் ஆடியோ கன்ட்ரோல்ஸ், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் கண்ணாடிகள், ஏபிஎஸ், 2 காற்றுப் பைகள் என விலைக்கேற்ற வசதிகளை அளிக்கிறது செலெரியோ டீசல்.

இன்ஜின்

புத்தம்புதிய டீசல் இன்ஜின்தான் இந்த காரின் சிறப்பம்சம். 793 சிசி, ஆல்-அலுமினியம், 2 சிலிண்டர் இன்ஜின் 47bhp சக்தியை 3,500 ஆர்பிஎம்-லும், 12.7kgm டார்க்கை 2,000 ஆர்பிஎம்-லும் அளிக்கிறது. மைலேஜை மட்டுமே குறிக்கோளாக வைத்து உருவாக்கப்பட்டு ட்யூன் செய்யப்பட்ட இன்ஜின் இது. அதே சமயம் ஸ்மூத்னெஸ், அதிர்வுகள் போன்றவற்றிலும் கவனம் செலுத்தியிருக்கிறது மாருதி.

இக்னீஷனை ஆன் செய்தால், இலகு ரக கமர்ஷியல் வாகனம்போலச் சத்தம் கேட்கிறது. ஆனால், இன்ஜின் சூடேறியதும் ஸ்மூத்தாக இயங்குகிறது. முதல் கியரில் ஆக்ஸிலரேட்டரை கொஞ்சம் மிதித்து நகர்த்தினால்தான் பிக்-அப் கிடைக்கிறது. 2,200 ஆர்பிஎம் முதல் 3,200 ஆர்பிஎம் வரை நல்ல பவர் டெலிவரி இருக்கிறது. அதனால் டிராஃபிக் நெருக்கடிகளில் இந்த காரை ஓட்டுவது சிரமம். 3,200 ஆர்பிஎம்-க்கு மேலும் பவர் இல்லை என்பதால், நெடுஞ்சாலைகளில் வேகமாக ஓட்டும்போது சத்தம்தான் அதிகமாகக் கேட்கிறதே தவிர, பவர் இல்லை.

செவர்லே பீட், 3 சிலிண்டர் டீசல் காரைவிட கொஞ்சம் அதிகமாக அதிர்கிறது செலெரியோ டீசல். 0-100 கி.மீ வேகத்தைத் தொட 22.66 விநாடிகள் எடுக்கிறது.

ஓட்டுதல் தரத்தில் செலெரியோ டீசல் குறை வைக்கவில்லை. அதிக வேகங்களிலும் ஸ்டேபிளாகச் செல்கிறது.

மாருதி லிட்டருக்கு 27.2 கிமீ மைலேஜ் என்று சொன்னாலும், நம்முடைய மைலேஜ் டெஸ்ட்டின்படி செலரியோ டீசலின் ஒட்டுமொத்த மைலேஜ் லிட்டருக்கு 18.8 கி.மீ. சிட்டியில் லிட்டருக்கு 16.7 கி.மீ, நெடுஞ்சாலையில் 20.9 கி.மீ மைலேஜ் தருகிறது.

இப்போது பெட்ரோல் கார் களுக்கும் டீசல் கார்களுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைந்துவருகிறது. விலை குறைந்த செக்மென்ட்டில் டீசல் கார்கள் வெற்றி பெற்றது இல்லை. காரணம், டீசல் இன்ஜின்களை ஓரளவுக்கு மேல் விலை குறைவாக, ஆனால் அதிகத் தரத்தில் உருவாக்க முடியாமல் இருந்ததுதான். ஆனாலும், விடாப்பிடியாக மாருதி, புத்தம் புதிய டீசல் இன்ஜினை இந்த செக்மென்ட்டில் களமிறக்கிவிட்டது.
ஆனால், செலெரியோ டீசல் மாடலின் விலை ஸ்விஃப்ட்டின் விலையை நெருங்குகிறது. ஏஎம்டி கியர்பாக்ஸ், பெட்ரோல் மாடலில் மட்டுமே உள்ளது. பார்க்கவும் அவ்வளவு அழகாக இல்லை. வசதிகளில் ஓகே. எனவே, இதன் மைலேஜ் மட்டும்தான் ஒரே வின்னிங் பாயின்ட்!