பெங்களூருவில் டெஸ்ட் செய்யப் பட்ட ‘டாடா கைட்’ காரைப் படம் பிடித்திருக்கிறார் மோட்டார் விகடன் வாசகர் ராஜ்குமார். ஆகஸ்ட் - செப்டம்பர் மாதவாக்கில் விற்பனைக்கு வரவிருக்கும் கைட் கார்தான், டாடாவின் புதிய இண்டிகா என்பது குறிப்பிடத்தக்கது. டாடாவின் ஐரோப்பிய டெக்னிக்கல் சென்டரில் டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது கைட். கிளாம்ஷெல் போன்று முன் பக்க பானெட் டிஸைன். பின் பக்கம் ஹூண்டாய் i10 கிராண்ட் கார் போல் டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது. ரியர் வியூ கண்ணாடிகள் ஃபோக்ஸ்வாகன் போலோவில் இருப்பதுபோல இருக்கிறது.

போட்டியாளர்களைவிட தரத்தில் மிகவும் உயர்ந்ததாகத் தெரிகிறது டாடா கைட். ஜெஸ்ட் மற்றும்

போல்ட்டின் டேஷ்போர்டு மற்றும் ஸ்டீயரிங் இந்த காரிலும் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கலாம். டாடா கார் என்பதால், காருக்குள் அதிக இட வசதி இருக்கும்.

கைட் காரில் புதிய டீசல் இன்ஜினை அறிமுகப்படுத்துகிறது டாடா. இதில் 1.05 லிட்டர், 3 சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 70bhp சக்தியை வெளிப்படுத்தும். பெட்ரோல் மாடலில் இருப்பது, 1.2 லிட்டர் ரெவோட்ரான் இன்ஜின். இது அதிகபட்சமாக 75bhp சக்தியை வெளிப்படுத்தும். 4 லட்சம் ரூபாய்க்குள் விற்பனைக்கு வரவிருக்கிறது டாடா கைட்.