இந்தியாவில் லேட்டஸ்ட் ஃபேரிங் பைக்குகளாக அறிமுகமாகியிருக்கின்றன, பல்ஸர் AS150 மற்றும் சுஸூகி ஜிக்ஸர் SF. அட்வென்ச்சர் பைக்குகளுக்கான மார்க்கெட் பெருசாக, பல்ஸர் பைக்குகளையே கொஞ்சம் மாற்றியமைத்து, ‘அட்வென்ச்சர் ஸ்போர்ட்’ பல்ஸர்களாக அறிமுகப்படுத்திவிட்டது பஜாஜ். ஜிக்ஸர் SF பைக்கும் அடிப்படையில் சாதாரண ஜிக்ஸர்தான். இப்போது ஃபுல் ஃபேரிங் பொருத்தி, ஜிக்ஸர் SF ஸ்போர்ட் பைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டிஸைன்

பல்ஸர் AS150 பைக்கின் குவார்ட்டர்-ஃபேரிங் டிஸைன், பைக்கை மிகவும் உயரமாகக் காட்டுகிறது. வேகமாகச் செல்லும்போது காற்று முகத்தில் அறையாமல் இருக்க வைஸர் உதவுகிறது. ப்ரொஜெக்டர் ஹெட்லைட் இரவில் நல்ல வெளிச்சத்தைத் தருகிறது. LED பைலட் லைட்டு கள், பழைய பல்ஸரைவிட மாடர்னாகக் காட்டுகிறது.

பல்ஸர் AS150 பைக்கின் டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோலில் நேரம், ஷிஃப்ட் இண்டிகேட்டர், சைடு ஸ்டாண்ட் வார்னிங், டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், அனலாக் டேக்கோ மீட்டர் போன்றவை உள்ளன. ரியர் வியூ மிரர்கள் சாலையைத் தெளிவாகக் காட்டுகின்றன. சுவிட்ச் கியர்கள் தொடுவதற்கு சாஃப்ட்டாக இருக்கின்றன. டெயில் லைட்டுகள் பல்ஸர் 200NS பைக்கில் இருப்பவைதான்.

ஜிக்ஸர் SF பைக்கின் ஹெட்லைட், பேட்டரியுடன் நேரடியாக இணைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இரண்டு வீல்களிலும் ஸ்டைலான ரிஃப்ளெக்டிவ் டேப்கள் உள்ளன. இந்த பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் முழுவதுமே டிஜிட்டல்தான். கியர் ஷிஃப்ட்-வார்னிங் லைட் சரியான நேரத்தில் ஒளிர்கிறது. ரியர் வியூ மிரர்கள் ஃபேரிங்கில் பொருத்தப்பட்டுள்ளதால், டிராஃபிக் நெரிசலில் வளைத்துத் திருப்ப வசதியாக இல்லை.

SF பைக்கில் இருக்கும் டெயில் லைட், ரியர் பேனல் ஆகியவை சாதாரண ஜிக்ஸரில் இருப்பவைதான். கிராப் ஹேண்டில்கள் அழகாக ரியர் பேனலுடன் பொருந்துகின்றன. இதன் சைடு மவுன்ட்டட், ஹீட் ரெஸிஸ்டன்ட், ட்வின் - போர்ட் எக்ஸாஸ்ட் டைட்டானியம் பெயின்ட் கோட்டிங் கொண்டுள்ளது.

பல்ஸர் AS150 பைக்கின் ஒட்டுமொத்தத் தரம் நன்றாகவே இருக்கிறது. ஜிக்ஸர் SF பைக்கின் தரம் இன்னும் சூப்பர். ஃபேரிங் அதிராமல், ஸ்ட்ராங்காக இருக்கிறது.

இன்ஜின்

பஜாஜின் 149.5 சிசி, சிங்கிள் சிலிண்டர், கார்புரேட்டர் இன்ஜின் 16.8 bhp சக்தியையும், 1.3kgm டார்க்கையும் அளிக்கிறது. ட்வின் ஸ்பார்க் தொழில்நுட்பம் இருப்பதால், இன்ஜின் மிக வேகமாக ரெவ் ஆகிறது. 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்மூத்தாக இருக்கிறது.

சுஸூகியின் 155சிசி, கார்புரேட்டர், சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் 14.6 bhp சக்தியையும், 1.4kgm டார்க்கையும் அளிக்கிறது. அதிக ஆர்பிஎம்-ல் சத்தம் ரொம்பவே இருந்தாலும், அதிர்வுகள் இல்லை. பவர் டெலிவரி மிகவும் சீராக இருக்கிறது. கிளட்ச் ஃபீட்பேக் சூப்பர். 90 கி.மீ வேகத்தில் க்ரூஸ் செய்ய நன்றாக இருக்கிறது. 0-60 கி.மீ வேகத்தைக் கடக்க ஜிக்ஸர் 5.35 விநாடிகளை எடுத்துக்கொண்டது.

பஜாஜ் பல்ஸர் AS 150, சிட்டியில் லிட்டருக்கு 40.2 கி.மீ மைலேஜ் அளிக்கிறது. நெடுஞ்சாலையில் 44.4 கி.மீ மைலேஜ் அளிக்கிறது. 0-60 கி.மீ வேகத்தை 5.11 விநாடிகளில் கடக்கிறது பல்ஸர்.
சுஸூகி ஜிக்ஸர் SF, சிட்டி டிராஃபிக்கில் லிட்டருக்கு 42.5 கி.மீ மைலேஜும், நெடுஞ்சாலையில் 45 கி.மீ மைலேஜும் அளிக்கிறது. இரண்டிலுமே 12 லிட்டர் ஃப்யூல் டேங்க்தான்.

ஓட்டுதல் தரம், கையாளுமை

ஓட்டுதல் தரம், கையாளுமையில் இரண்டு பைக்குகளுமே முற்றிலும் வித்தியாசமானவை. பல்ஸர் AS150 பைக்கின் சீட்டிங் பொசிஷன் மிக வசதியாக உள்ளது. இதனால், தினசரி ஓட்டுவதற்கு ஏற்றதாகவும், நெடுஞ்சாலை டூரிங் பைக்காகவும் இருக்கிறது. பல்ஸர் AS 150 மேடு பள்ளங்களைச் சிறப்பாகச் சமாளிக்கிறது. முன் பக்கம் வழக்கமான ஃபோர்க்குகளும், பின்பக்கம் 6-ஸ்டெப் அட்ஜஸ்ட்டபிள் கேஸ் நிரப்பப்பட்ட மோனோ ஷாக் சஸ்பென்ஷனும் உள்ளன.

சுஸூகி ஜிக்ஸர் SF-ன் சீட்டிங் பொசிஷன் கொஞ்சம் ஸ்போர்ட்டியாக இருக்கிறது. ஃபுல் ஃபேரிங் இருந்தாலும், பைக்கின் எடை குறைவு என்பதால், ஓட்டுவதற்கு எளிதாக இருக்கிறது. நகரச் சாலைகளில் ஓட்டுதல் தரம் நன்றாக இருக்கிறது. முன் பக்கம் பெரிய 41 மிமீ ஃபோர்க்குகளும், பின்பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்ஷனும் சிறப்பாக இயங்குகின்றன.

கையாளுமையில் ஜிக்ஸர் SF சிறந்த பைக்காக இருக்கிறது. டயர்கள் அகலமாகவும், சஸ்பென்ஷன் சிறப்பாகவும் இருப்பதால், திருப்பங்களில் வளைத்துத் திருப்பி ஓட்ட, ஜிக்ஸர் மிக நன்றாக இருக்கிறது. இந்த செக்மென்ட்டிலேயே ஜிக்ஸர்தான் ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையில் பெஞ்ச் மார்க் பைக்.

இரண்டு பைக்குகளிலுமே Bybre பிரேக்ஸ் உள்ளன. பல்ஸரில் முன்பக்கம் சிங்கிள் 240 மிமீ பெட்டல் டிஸ்க் உள்ளது. பின்பக்கம் 130 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. மணிக்கு 60 கி.மீ வேகத்தில் இருந்து முழுவதும் நிற்க, 17.56 மீட்டர்களை எடுத்துக்கொள்கிறது பல்ஸர். ஜிக்ஸரின் முன்பக்கம் 266 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக் உள்ளது. மணிக்கு 60 கி.மீ வேகத்தில் சென்று சடர்ன் பிரேக் அடித்தால், 15.24 மீட்டர் தூரத்தில் நின்றுவிடுகிறது ஜிக்ஸர். சடர்ன் பிரேக் அடிக்கும்போது, சுஸூகியில் இருக்கும் அகலமான பின்பக்க ரேடியல் டயர் நல்ல ஸ்டெபிளிட்டியைத் தருகிறது.

பஜாஜ் பல்ஸர், பார்ப்பதற்கு அட்வென்ச்சர் பைக் போல இருந்தாலும், பயன்பாட்டில் அட்வென்ச்சரஸாக இல்லை. ஆனால், ஒரு பைக்காக புதிய பல்ஸர் AS150 நன்றாகவே இருக்கிறது.

சிட்டியிலும், நெடுஞ்சாலையிலும் வசதியாக இருப்பதால், ஒரு நல்ல டூரிங் பைக்காக இருக்கிறது பல்ஸர்.

ஜிக்ஸர், பெர்ஃபாமென்ஸில் பட்டையைக் கிளப்புகிறது. கையாளுமையும் மிக அருமை. பைக்கின் எடை குறைவாக இருப்பதால், சிட்டியில் ஓட்டுவதற்கும் வசதியாக இருக்கிறது. தனியாகப் பார்த்தால், பல்ஸர் AS150 நன்றாக இருக்கிறது. ஆனால், ஜிக்ஸர் SF-உடன் ஒப்பிடும்போது பின் தங்கிவிடுகிறது பல்ஸர். ஜிக்ஸர்தான் வின்னர்!