பழைய பைக்காக இருந்தாலும், கிளாஸிக் அந்தஸ்து பெற்றுவிட்ட பைக்குகளுக்கு எப்போதுமே மதிப்பு உண்டு. தனித்தன்மை, ஹேண்ட்லிங், பிக்-அப், பராமரிப்பு ஆகிய விஷயங்களுக்காக இன்றைக்கும் போற்றப்படும் - சந்தையில் டிமாண்டாக இருக்கும் பைக்குகளில், யமஹாவுக்குத் தனி இடம் இருக்கிறது. யமஹாவின் RX 100, RX 135, வரிசையில், RX-Z 135 மாடல் முக்கியமானது. காரணம், முழுக்க முழுக்க உதிரி பாகங்களாக இறக்குமதியாகி, அசெம்பிள் செய்து இங்கே விற்பனைக்கு வந்தது இந்த பைக். 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த RX-Z 135, வித்தியாசமான பாடி ஸ்டைலுடன் அப்போது இருந்தது.

RX135 மாடலில் இருந்த இன்ஜின்தான் RX-Z 135 பைக்கிலும் என்றாலும், இதில் அதிக பிக்-அப் அளிப்பதற்காக வேறுவிதமாக ட்யூனிங் செய்திருந்தது யமஹா. ஆனால், ஃப்ரேம், பாடி பார்ட்ஸ் முழுக்க வேறு என்பதுதான் இதன் தனித்தன்மை. அதேபோல், முதன்முறையாக இந்த செக்மென்டில் ஆர்பிஎம் மீட்டருடனும் ட்வின் பார்ட் கன்ஸோலுடனும் வந்த முதல் பைக் RX-Z 135.

1996-ல் அறிமுகமானபோது, 4 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வந்த இந்த பைக், பின்பு 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், முன்பக்கம் டிஸ்க் பிரேக்குடனும் விற்பனைக்கு வந்தது. ஆனால், RX 135 மாடலைவிட விலை கூடுதலாக இருந்ததால், அதிகம் விற்பனையாகவில்லை. பாடி பார்ட்ஸ் முழுக்க பிளாஸ்டிக்கால் இருந்ததுடன், இன்ஜின் ஸ்கூப் வைக்கப்பட்டிருந்தது. இதன் ஃப்ரேமும், பின்னாளில் யமஹா வெளியிட்ட 4 ஸ்ட்ரோக் மாடலான YBX பைக்கின் ஃப்ரேமும் ஒன்றேதான்.

வித்தியாசமான ஸ்டைல், அதிக பிக்-அப், டிஸ்க் பிரேக், ஆர்பிஎம் மீட்டர் போன்ற தனித்துவங்களுடன் விற்பனைக்கு வந்தாலும், மைலேஜ் மிகக் குறைவாக இருந்ததும், விலை அதிகமாக இருந்ததும் இதன் விற்பனைச் சரிவுக்குக் காரணங்கள்.

இந்த பைக்கை கடந்த 11 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ராம் தரனிடம் பேசினோம். “யமஹாவின் RX, RD 350 சீரியல் பைக்குகளின் ரசிகன் நான். RX-Z 135 மாடல், எனக்கு மிகவும் பிடித்தமானது. காரணம், அதிக விலை, குறைந்த மைலேஜ் காரணமாக அதிகமாக விற்பனையாகவில்லை என்றாலும், பெர்ஃபாமென்ஸ், பிக்-அப்பில் இந்த பைக்கை மிஞ்ச முடியாது. பைக்கின் செயல்பாடுடன் நாம் இணைந்துவிடுகிறோமா அல்லது நம்முடைய செயல்பாட்டுடன் பைக் இணைந்துவிடுகிறதா என்பது தெரியாது. அப்படி ஒரு கெமிஸ்ட்ரி பைக்குடன் ஏற்பட்டுவிடுகிறது. எங்கே ஆக்ஸிலரேட்டரைக் கூட்ட வேண்டும்; எங்கே கியரைக் குறைக்க வேண்டும் என்பதெல்லாம், இன்ஜின் நம்முடன் பேசுவதுபோல அதன் மொழியில் சொல்லும். அதனால், இந்த பைக் எனக்கு மிகவும் பிடிக்கும்.

1996-ல் இந்த பைக் விற்பனைக்கு வந்தபோது, இதன் விலை 52,500 ரூபாய். நான் செகண்ட் ஹேண்டில் 11 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கும்போது 22,500 ரூபாய் கொடுத்தேன். இன்ஜின் பார்ட்ஸைப் பொறுத்தவரை 135 பைக்கின் இன்ஜின் என்பதால், பிரச்னை இல்லை. ஆனால், பாடி பார்ட்ஸ்தான் கிடைப்பது இல்லை. பெரும்பாலும் ஆர்டர் செய்து வெளிநாடுகளில் இருந்துகூட வரவழைக்கிறார்கள். தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியாவில் இதற்கான உதிரி பாகங்கள் இன்றும் கிடைக்கின்றன. இது மட்டும்தான் இதில் இருக்கும் பெரிய பிரச்னை. மற்றபடி, முறையாக ரெகுலர் சர்வீஸ் செய்துவந்தால், எந்தப் பிரச்னையும் தருவது இல்லை.

இப்போது சரியாகப் பராமரிக்காத இந்த மாடல் பைக், 50,000 ரூபாய் வரை விலை போகிறது. ஓரளவு நல்ல பராமரிப்புடன் இருக்கும் பைக், 1 லட்ச ரூபாய் வரை விலை போகிறது!” என்கிறார்.
அம்மாடி!