என் ஒரு பைக் ஃப்ரீக்; புல்லட் ரசிகன்!’’ என்கிறார், தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ படத்தின் இயக்குநர் மணிகண்டன். எங்கேயும் எப்போதும் ராயல் என்ஃபீல்டு புல்லட்தான் மணிகண்டனின் நண்பன்.

‘‘சின்ன வயதில் நமக்குப் பிரமிப்பு ஏற்படுத்தும் விஷயங்களில் ஒன்று, பைக். பால்யத்தில் ஈர்த்த விஷயங்கள் வளர்ந்த பிறகு வசமாகும்போது, மறுபடியும் பால்யத்தில் மூழ்கிவிடுவோம்.

எனது சொந்த ஊரான உசிலம்பட்டியில், சிறு வயதில் கண்டு வியந்த புல்லட்டுகளின் சத்தம், இப்போது நினைத்தாலும் காதில் கேட்கிறது. ஊரில் பெரிய மனிதர்களின் வசம் மட்டுமே புல்லட் பைக் இருக்கும். பைக்கை நிறுத்தியிருக்கும்போது, தொட்டுப் பார்க்கவும்; ஏறி விளையாடவும் மட்டுமே அந்த வயதில் நம்மால் முடியும். புல்லட்டில் அவர்கள் வரும் தோரணையே செம ரகளையாக இருக்கும். ஊரே வேடிக்கை பார்க்கும் என்று சொல்வார்களே... அந்த மாதிரி பந்தாவாக இருக்கும்.

கல்லூரி படித்து முடிக்கும் வரை சொந்த பைக் இல்லை. ஆனால், நண்பர்கள் பைக்கை ஓட்டி இருக்கிறேன். புல்லட் இரவலாகக்கூடக் கிடைத்தது இல்லை. என் அண்ணன் பஜாஜ் 4S சாம்பியன் பைக் வைத்திருந்தார். அதைத்தான் ஊரில் அவ்வப்போது ஓட்டிக்கொண்டு இருந்தேன். சினிமாதான் நம் துறை என சென்னை கிளம்பியபோது, கையோடு அண்ணனின் பைக்கைக் கொண்டுவந்துவிட்டேன்.

அந்த பைக், சென்னையில் இரண்டு ஆண்டுகள் வரை தாக்குப் பிடித்தது. அதன் பிறகு, பஜாஜில் அப்போது புதிதாக வந்த டிஸ்கவர் பைக் வாங்கினேன். வழக்கமாக, ஆலப்பாக்கத்தில் சர்வீஸ் சென்டர் வைத்துள்ள சிஜு என்ற மெக்கானிக்கிடம்தான் சர்வீஸ் செய்வேன். டிஸ்கவர் பைக்கை ஒருமுறை சர்வீஸுக்காகக் கொடுக்கப்போனபோது, பைக்குக்குத் தேவையான ஸ்பேர் பார்ட்ஸை என்னை வாங்கி வரச் சொன்னார். என்னுடைய பைக்கைப் பிரித்து விட்டதால், அங்கே நின்றிருந்த ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கை எடுத்துக்கொண்டு போகச் சொன்னார். என் முதல் இரவல் புல்லட் அதுதான். அவ்வளவுதான். ஸ்பேர் பார்ட்ஸ் வாங்கிக்கொண்டு திரும்பியதுமே, ‘டிஸ்கவர் பைக்கை விற்றுவிடுங்கள்... புல்லட் விலைக்கு வந்தால் சொல்லுங்கள்’ எனச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

நான் அதுவரை பைக் ஓட்டிய அனுபவத்தையே மாற்றிய தருணம் அது. சாதாரண பைக், நம்மைக் கட்டி இழுத்துக்கொண்டு போவதுபோல ஃபீல் இருக்கும். ஆனால் புல்லட், நம்மை உட்காரவைத்து அழைத்துச் செல்வது போன்ற அனுபவத்தைத் தந்தது. இனி, பைக் என்றால், அது புல்லட்தான் என முடிவு செய்த தினம் அது.

புல்லட் ஸ்டாண்டர்டு, தண்டர்பேர்டு, மெச்சிஸ்மோ என ராயல் என்ஃபீல்டின் பைக்குகள் எல்லாவற்றையும் ஓட்டிப் பார்த்தேன். ஆனால், நான் முதன்முதலாக ஓட்டிய ராயல் என்ஃபீல்டின் எலெக்ட்ரா மாடல் அளித்த கம்ஃபர்ட்டான உணர்வை வேறு எதுவும் அளிக்கவில்லை. பழைய

பைக் மார்க்கெட்டில், நிறைய தேடுதல்களுக்குப் பிறகுதான் எனக்கான எலெக்ட்ராவை வாங்கினேன். அதன் பிறகு, புதிய தண்டர்பேர்டு பைக் ஒன்றையும் வாங்கினேன். இப்போது என்னிடம் இரண்டு ராயல் என்ஃபீல்டு பைக்குகள் உள்ளன.

இதையெல்லாம்விட முக்கியமான விஷயம், புல்லட் வாங்கிய சில தினங்களிலேயே என்னுடைய முதல் குறும்படமான ‘விண்ட்’ எடுப்பதற்காக, லொக்கேஷன் பார்க்க பைக்கிலேயே போகலாம் என முடிவுசெய்து, தனியாகக் கிளம்பினேன். அப்போதுதான் புல்லட் ஓட்டவே பழகிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும், புல்லட்டை ஓட்டும் உற்சாக உணர்வு, புதிதாக ஓட்டுகிறோம் என்ற எண்ணத்தை அளிக்கவில்லை. சென்னையில் இருந்து தேனி, திருமங்கலம், ராஜபாளையம், அருப்புக்கோட்டை என தென்மாவட்டங்கள் முழுக்க ஐந்து நாட்கள் புல்லட்டில் ரவுண்ட் அடித்து, நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு சென்னை திரும்பினேன். ரொம்பவும் அபாரமான ட்ரிப் அது.

கடந்த ஏழு ஆண்டுகளாக புல்லட் பைக்கை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்!’’ என்றவரிடம், ‘‘கார் வாங்கும் திட்டம் இல்லையா?’’ என்று கேட்டபோது, ‘‘பைக்கில் கிடைக்கும் சுதந்திரமான உணர்வு, எனக்கு காரில் கிடைக்கவில்லை. காரில் உட்கார்ந்து செல்வது, ஓர் அறைக்குள் அமர்ந்திருப்பது போன்ற உணர்வைத்தான் தருகிறது. பைக் அப்படி அல்ல, உடல் முழுக்க மோதிச் செல்லும் காற்று, எவ்வளவு மன அழுத்தம், கவலைகள் இருந்தாலும் பறந்தோடச் செய்துவிடும். ஆனால், தேவை என ஒன்று இருக்கிறது. அதுவரை கார் வாங்குவதைத் தள்ளிப்போடுவோம்!” என்று புன்னகைக்கிறார் மணிகண்டன்.