ஃபிகோ மூலம் சின்ன கார் மார்க்கெட்டுக்குள் அதிரடி கிளப்பிய ஃபோர்டு, நாள் ஆக ஆக மார்க்கெட்டை இழந்தது. காரணம், ஃபிகோவை வீழ்த்தக்கூடிய கார்கள் ஒன்றன் பின் ஒன்றாகப் படையெடுக்க... ஃபிகோ காணாமல் போனது. அடுத்த தலைமுறை ஃபிகோவைத் தயார் செய்துவிட்ட ஃபோர்டு, அதே பிளாட்ஃபார்மில் ஒரு மிட் சைஸ் காரையும் தயாரித்துவிட்டது. புதிய ஃபிகோ ஹேட்ச்பேக், அடுத்த ஆண்டுத் துவக்கத்தில் விற்பனைக்கு வரவிருக்கும் நிலையில், ஃபிகோ செடான் காரை ‘ஆஸ்பயர்’ என்ற பெயரில் விற்பனைக்குக் கொண்டு வருகிறது ஃபோர்டு.

கொஞ்சம் வரலாறு!

செடான் கார்கள்தான் எப்போதுமே ஃபோர்டின் மேட்ச் வின்னர்ஸ். 1995-ல் சென்னையில் தொழிற்சாலை அமைத்த ஃபோர்டு, முதன்முதலில் விற்பனைக்குக் கொண்டுவந்த கார், எஸ்கார்ட் செடான். அதனைத் தொடர்ந்து ஐகான், ஃபியஸ்டா என தொடர்ந்து செடான் கார்களையே விற்பனைக்குக் கொண்டுவந்தது. 2006-ல் 4 மீட்டர் கார்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டபோது, அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் இருந்தது. பின்பு, 2010-ல் ஃபிகோவை விற்பனைக்குக் கொண்டுவந்தது. அதனைத் தொடர்ந்து, 2013-ல் எக்கோஸ்போர்ட் எனும் 4 மீட்டர் எஸ்யுவியை அறிமுகப்படுத்தியது.

ஆனால் டிசையர், இண்டிகோ, அமேஸ், எக்ஸென்ட் என 4 மீட்டர் மிட் சைஸ் கார்கள் வரிசையாக விற்பனைக்கு வந்தபோதும், ஃபோர்டில் எந்தச் சலனமும் இல்லை. வரிச் சலுகை நடைமுறைக்கு வந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து, இப்போது 4 மீட்டர் செடானை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது.

காம்பேக்ட் செடான் எனப்படும் 4 மீட்டர் செடான் கார்கள், ஆண்டுக்கு சுமார் 2.5 லட்சம் கார்கள் வரை விற்பனையாகின்றன. இதில் வழக்கம்போல மார்க்கெட் லீடர், மாருதிதான். ஹூண்டாய், ஹோண்டா, டாடா என அத்தனை பேரும் போட்டி போடும் நிலையில், கடைசியாகக் களம் இறங்கியிருக்கிறது ஃபோர்டு. மார்க்கெட்டைப் பிடிக்க வேண்டும் என்றால் விலையில் ஆரம்பித்து, வசதிகள், இன்ஜின் பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் என அனைத்திலுமே மிகச் சிறந்த காராக இருந்தால்தான், ஆஸ்பயர் வெற்றி பெற முடியும். வெற்றி பெறுமா ஆஸ்பயர்?

டிஸைன்

ஆஸ்ட்டன் மார்ட்டின் கார்களில் இருக்கும் கிரில்லை, அப்படியே இந்த ஆஸ்பயரின் முன் பக்கத்தில் சொருகியிருக்கிறது ஃபோர்டு. ஹெட்லைட்ஸ் நீளமாக இருப்பதோடு, பானெட்டில் இருக்கும் கோடுகள் காருக்குப் புதிய தோற்றத்தைக் கொடுக்கின்றன. ஆனால், பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது, ஏற்கெனவே பார்த்துப் பழகிய பழைய செடான் கார் போலவே இருக்கிறது ஆஸ்பயர். காருக்குள் அதிக இடவசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, ரூஃப் உயரமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது, காரைப் பின்பக்கத்தில் இருந்து பார்க்கும்போது நல்ல டிஸைனாக இல்லை. ஹோண்டா அமேஸ் போல, அழகிய டிஸைன் கொண்ட காராக ஆஸ்பயர் இல்லை. மேலும், 14 இன்ச் வீல்கள், காரை மிகச் சின்னதாகக் காட்டுகின்றன.

ஃபோர்டு புதியதாகத் தொடங்கியுள்ள குஜராத் தொழிற்சாலையில்தான் ஆஸ்பயர் தயாரிக்கப்படுகிறது. புதிய தொழிற்சாலைதானே தவிர, புதிய பிளாட்ஃபார்ம் இல்லை. B2E என்று அழைக்கப்படும் இந்த பிளாட்ஃபார்மில்தான் ஃபியஸ்டா மற்றும் எக்கோஸ்போர்ட் கார்களும் தயாரிக்கப்படுகின்றன. காரின் அடிப்பகுதி, சஸ்பென்ஷன் பாகங்கள், சேஸி என அனைத்துமே ஃபியஸ்டா, எக்கோஸ்போர்ட்டில் இருப்பவைதான். ஆனால், ஃபியஸ்டா மற்றும் எக்கோஸ்போர்ட்டில் பயன்படுத்தப்படும் BORON STEEL இதில் பயன்படுத்தப்படவில்லை. போரான் ஸ்டீல், எடையைக் கூட்டாமல் அதிக உறுதியைத் தரும் பொருள். ‘காஸ்ட் கட்டிங்’ என்று சொல்லி, போரான் ஸ்டீலை ஃபோர்டு இதில் பயன்படுத்தவில்லை. இதனால், ஆஸ்பயரின் சேஸி, ஃபியஸ்ட்டா அளவுக்கு உறுதியாக இல்லை.

உள்ளே

காருக்கு உள்ளே ஃபியஸ்டா, எக்கோஸ்போர்ட் போலவே இருக்கிறது ஆஸ்பயர். ஸ்டீயரிங் வீல், கியர் லீவர், இறக்கை வடிவ சென்டர் கன்ஸோல் என அனைத்தும் அப்படியே அங்கிருந்து இங்கே எடுத்து ஒட்டப்பட்டது போலவே இருக்கின்றன. பழுப்பு மற்றும் பீஜ் என இரட்டை டேஷ்போர்டு வண்ணம், காருக்குள் அதிக இடவசதி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. டேஷ்போர்டு பாகங்கள் மற்றும் உள்பக்கப் பாகங்களின் தரம், போட்டியாளர்களைவிடச் சிறப்பாக இல்லை. டயல்களில் எந்தப் புதுமையும் இல்லை. டேக்கோ மீட்டர் டயலின் அளவுக்கு, ஃப்யூல் மீட்டரும் பெரிதாக இருக்கிறது.

2,491 மிமீ வீல்பேஸ் கொண்ட கார் ஆஸ்பயர் என்பதால், காருக்கு உள்ளே அதிக இவசதி இருக்கிறது. கதவுகள் பெரிதாக இருப்பதால், காருக்கு உள்ளே போய்வர சுலபமாக இருக்கிறது. தண்ணீர் பாட்டில், பேப்பர் மற்றும் கப்புகள் வைக்க காருக்குள் ஏராளமாக இடம் இருக்கின்றன. க்ளோவ் பாக்ஸ் பெரிதாக இருப்பதால், அங்கேயும் நிறையப் பொருட்களை வைக்க முடியும். ஆனால் பின்னிருக்கைப் பயணிகளுக்கு, பொருட்கள் வைத்துக்கொள்ள பெரிதாக கப் ஹோல்டர்கள் இல்லை. முன் பக்க இருக்கைகளின் பின் பாக்கெட்டுகளில்தான் பொருட்கள் வைக்க முடியும். 359 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கி என்பதால், சின்னப் பயணத்துக்குத் தேவையான பொருட்களை இதில் கொண்டு செல்ல முடியும்.

இவ்வளவு காலம், ஃபோர்டு கார்களில் அமெரிக்கன் முறைப்படி இண்டிகேட்டர் ஸ்டாக் இடது பக்கத்திலும், வைப்பர் ஸ்டாக் வலதுபக்கத்திலும் இருந்தது. இதை அப்படியே இந்திய முறைக்கு மாற்றிவிட்டது ஃபோர்டு. ஆஸ்பயரில் வலதுபக்கம் இண்டிகேட்டர் ஸ்டாக்கும், இடது பக்கம் வைப்பர் ஸ்டாக்கும் இடம் மாறியிருக்கின்றன. முழுக்க முழுக்க இந்தியர்களின் வசதிகளை முன்வைத்துத் தயாரிக்கப்பட்ட கார் என்பதை உணர்த்துவதற்காகத்தான் இந்த மாற்றமாம்!

சில முக்கியமான, பயனுள்ள அம்சங்களை ஆஸ்பயரில் சேர்த்திருக்கிறது ஃபோர்டு. கியர் லீவருக்கு முன்னால் செல்போன் வைத்துக்கொள்ள, சின்ன சைஸ் அலமாரி போல ரப்பரால் மூடப்பட்ட இடம் கொடுக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டின் முனையில், அதாவது டிரைவரின் இருக்கைப் பக்கம் டேஷ்போர்டுக்குள் சின்ன இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பொருட்களை வைத்துக்கொள்ளலாம். கதவை மூடும்போது இந்த இடத்துக்குள் பொருட்கள் இருப்பது எதுவும் வெளியே தெரியாது.

ஆஸ்பயரில் எந்த காரிலும் இல்லாத வசதியாக ‘மை கீ’ எனும் சாவியை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஃபோர்டு. இதன்படி காரின் அதிகபட்ச வேகத்தையும், மியூஸிக் சிஸ்டத்தின் வால்யூமையும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செட் செய்துகொள்ள முடியும். உங்கள் மகன் அல்லது மகளிடம் காரைக் கொடுக்கிறீர்கள் என்றால், அவர்கள் அதிக வேகம் செல்ல முடியாதபடி - உதாரணத்துக்கு 100 கி.மீ வேகத்தைத் தாண்ட முடியாதபடி செட் செய்யலாம். அதேபோல், உங்கள் டிரைவர் அல்லது வேலட் பார்க்கிங்கில் விடும்போதும் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதை செட் செய்வது ஈஸியாக இருப்பதோடு, செட்டிங்கை மாற்ற வேண்டும் என்றால், மாற்றுச் சாவி கையில் இருந்தால்தான் முடியும். இதனால், வேறு யாரும் உங்கள் செட்டிங்கை அவ்வளவு ஈஸியாக மாற்றிவிட முடியாது.

இவை அனைத்தையும் மிஞ்சும் அம்சம்தான், ‘போன் டாக்’ (Phone Dock)வசதி. இதன்படி சென்டர் கன்ஸோலுக்கு மேலே கொடுக்கப்பட்டிருக்கும் போன் டாக்கிங் இடத்தில், போனை வைத்துவிட்டு லாக் செய்துவிட்டால் போதும்; எவ்வளவு பெரிய மேடு பள்ளத்தில் கார் எகிறிக் குதித்தாலும், போன் வெளியே வராது. பட்டனை அழுத்தினால்தான் போனை வெளியே எடுக்க முடியும். போனை ‘ஸிங்க்’ செய்துகொண்டால், போனில் இருக்கும் மியூஸிக் மற்றும் மெசேஜ் மற்றும் அழைப்புகளைப் பயன்படுத்த முடியும். விபத்து ஏற்பட்டால் 108 சேவைக்குத் தகவல் சொல்லும் எமெர்ஜென்சி அசிஸ்ட் வசதியும் இதில் இடம் பெற்றுள்ளது.

இடவசதி

எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் அலுப்பே தெரியவில்லை. கால்களை நீட்டி மடக்கி வைத்துக்கொள்ள அதிக இடவசதி இருக்கிறது. விலை உயர்ந்த மாடலில் லெதர் சீட்ஸ் வசதியும் உண்டு. பின் இருக்கைகளிலும் இடவசதி தாராளம். மிட் சைஸ் கார்களிலேயே அதிக இடவசதி கொண்ட கார் ஆஸ்பயர்தான். இருக்கைகள் மிகவும் சௌகரியமாக இருக்கின்றன. முன் இருக்கைகளில் இடம் இருந்தாலும், ‘நான் போய் பின்னால் உட்கார்ந்துகொள்கிறேன்’ என்று சொல்லும் அளவுக்கு, பின் இருக்கைகள் மிகவும் வசதியாக இருக்கின்றன. ஆனால், ஹூண்டாய் கார்களில் இருப்பது போன்ற பின்பக்க ஏ.சி வென்ட் இதில் இல்லை.
ஆறு காற்றுப் பைகள் இருக்கும் ஆஸ்பயரின் டாப் மாடலில்கூட, காரின் மேற்கூரையில் கை வைத்துப் பிடித்துக் கொள்வதற்கான கைப்பிடிகள் இல்லை.

கவர்ச்சியான சிறப்பம்சங்களை மட்டும் கொடுத்தால் போதும்; இந்தியாவில் லட்சக்கணக்கில் கார்களை விற்றுவிடலாம் என்கிற முடிவுக்கு நாங்களும் வந்து விட்டோம் என்பதை ஆஸ்பயர் மூலம் உணர வைக்கிறது ஃபோர்டு. ஐரோப்பிய, அமெரிக்க கார்களுக்கான கட்டுமானத் தரம் இதில் இல்லை. அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் என்பதற்காக, எடையைக் குறைத்திருக்கிறோம் என்கிறது ஃபோர்டு. ஆனால், டீசல் இன்ஜின் கொண்ட மாடலின் எடை வெறும் 1,048 கிலோதான் என்பது, மிகக் குறைவு.

இன்ஜின்

1.5 லிட்டர் டீசல், 1.2 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் என மூன்று வகையான இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வரவிருக்கிறது ஆஸ்பயர். 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டுமே! மேனுவல் கியர்பாக்ஸ் வசதி கிடையாது. இந்த மூன்று இன்ஜின்களுமே, மற்ற ஃபோர்டு கார்களில் இடம்பெற்றிருக்கும் அதே இன்ஜின்கள்தான் என்றாலும், பெர்ஃபாமென்ஸை அதிகரிக்க ட்யூன் செய்யப்பட்டிருக்கின்றன.

முதலில் கவனம் ஈர்த்தது 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்தான். ஆஸ்பயரின் எடை குறைவு என்பது மட்டும் அல்ல, ஃபியஸ்டாவில் உள்ள 90bhp சக்திகொண்ட இன்ஜின் இதில் 98.9bhp சக்தியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டார்க்கும் 20.8kgm-ல் இருந்து 21.9 kgm ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது. இதனால், மற்ற மிட் சைஸ் கார்களைவிடவும் வேகமாக இருக்கிறது ஆஸ்பயர். 0-100 கி.மீ வேகத்தை வெறும் 11 விநாடிகளில் கடக்கிறது. 1,400 ஆர்பிஎம் வரை பவர் இல்லாமல் இருக்கிறது. நகருக்குள், குறைந்த வேகத்தில் ஓட்டும்போது மட்டுமே இது தெரியும். வேகம் பிடிக்க ஆரம்பித்துவிட்டால், பறக்கிறது ஆஸ்பயர்.

கிளட்ச் கொஞ்சம் ஹெவியாக இருப்பது, நகருக்குள் ஓட்டும்போது கால்களுக்குக் கூடுதல் சுமையைக் கொடுக்கிறது. டீசல் இன்ஜினுக்கே உரிய அதிர்வுகளும், சத்தமும் இருந்தாலும், பெர்ஃபாமென்ஸில் அப்ளாஸ் அள்ளுகிறது ஆஸ்பயர். அராய் சான்றிதழ்படி லிட்டருக்கு 25.8 கி.மீ மைலேஜ் தருகிறது ஆஸ்பயர்.

ஃபிகோவில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வெறும் 70bhp சக்தியை மட்டும் அளிக்க, ஆஸ்பயரில் இருக்கும் அதே இன்ஜின் 87bhp சக்தியை அளிக்கிறது. பெட்ரோல் இன்ஜினின் ஆரம்ப வேகம் சிறப்பாக இருக்கிறது. இதனால், டிராஃபிக் நெருக்கடிகளில் குறைந்த வேகத்தில் ஓட்டுவதற்குச் சிறப்பாக இருக்கிறது. ஆனால், மிட் ரேஞ்சில் சுத்தமாக பவர் இல்லை. இதனால், ஆக்ஸிலரேட்டர் மீது ஏறி நின்று மிதித்து, அதிகபட்ச வேகம் போகத் துடிக்கிறது, ஆக்ஸிலரேட்டரின் மீதிருக்கும் கால். மிட் ரேஞ்சில் பவர் இல்லாததால், ஓவர்டேக் செய்வது சிரமமாக இருக்கிறது.

கையாளுமை

ஆஸ்பயரில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், இதன் ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை. எவ்வளவு பெரிய மேடு பள்ளமாக இருந்தாலும், அதிர்வுகளும் ஆட்டமும் இல்லாமல் சமாளிக்கிறது ஃபோர்டின் சஸ்பென்ஷன். ஃபோர்டு கார்கள் எப்போதுமே கையாளுமையில் சிறப்பாக இருக்கும். அந்த எண்ணத்தோடு ஆஸ்பயரை ஓட்டினால் ஏமாற்றமே மிஞ்சும். ஃபியஸ்டா, எக்கோஸ்போர்ட் அளவுக்குக் கையாளுமையில் சிறந்த காராக இல்லை ஆஸ்பயர். இதற்கு மிக முக்கியக் காரணம், ஸ்டீயரிங்தான். வளைத்து நெளித்து ஓட்டும்போது இயைந்து வேலை செய்யக்கூடிய ஸ்டீயரிங்காக இது இல்லை. டீசல் காரைவிட, பெட்ரோல் கார் வளைவு நெளிவுகளில் வளைத்து ஓட்ட சிறப்பாக இருக்கிறது. ஆனால், ஃபோர்டு கார்களில் இருக்கும் வழக்கமான ‘ஃபன் டு டிரைவ்’ இதில் மிஸ்ஸிங்.

பிரேக்குகள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. எவ்வளவு வேகத்தில் சென்றாலும் பிரேக் அடித்தால், ஆட்டம் எதுவும் இல்லாமல் நிற்கிறது ஆஸ்பயர்.

முதல் தீர்ப்பு!

மார்க்கெட் லீடரான ஸ்விஃப்ட் டிசையரை விடவும் ஆஸ்பயரை விலை குறைவான காராகக் கொண்டுவர முயற்சித்து வருகிறது ஃபோர்டு. டிஸையரின் விலைக்கு ஆஸ்பயர் வந்தாலே, நிச்சயம் ஹிட்தான். காரணம், அதிக இடவசதி, சொகுசான இருக்கைகள், பவர்ஃபுல் இன்ஜின் என காரை வாங்கத் தூண்டும் முக்கிய விஷயங்களில் ‘சென்டம்’ வாங்குகிறது ஆஸ்பயர். பின்பக்க இடவசதியும், டீசல் இன்ஜினின் பெர்ஃபாமென்ஸும் போட்டி கார்களைவிட பல படிகள் மேலே இருக்கின்றன.

ஆனால், காரின் டிஸைனும், ஃபோர்டு கார்களின் வழக்கமான ஃபன் டு டிரைவ் உணர்வும் இதில் மிஸ்ஸிங். பெட்ரோல் இன்ஜினின் பெர்ஃபாமென்ஸ் ரொம்ப சுமார். ரியர் ஏ.சி வென்ட், பார்க்கிங் சென்ஸார்கள் இதில் இல்லை என்பது சில வாடிக்கையாளர்களுக்குக் குறையாக இருக்கும். போட்டி கார்களை வீழ்த்தக்கூடிய காரா ஆஸ்பயர் என்பதற்கான உங்களின் கேள்விக்கு, அடுத்தடுத்த பக்கங்கள் விடை சொல்லும்!