மிட் சைஸ் செடான் கார்களில், முழுமையான காராக இருக்கும் ஹூண்டாய் எக்ஸென்ட்டுக்குச் சவால் விடுகிறது ஆஸ்பயர். அவ்வளவு எளிதாக எக்ஸென்ட்டை வீழ்த்திவிடுமா ஆஸ்பயர்?

டிஸைன்

ஃபிகோ ஆஸ்பயருடன் ஒப்பிடும் போது, முழுக்க முழுக்க மிட் சைஸ் காராகவே வடிவமைக்கப்பட்டு உருவான காராகவே இருக்கிறது ஹூண்டாய் எக்ஸென்ட். ஆஸ்ட்டன் மார்ட்டினில் இருப்பதுபோன்ற கிரில் முன்பக்கத்துக்கு அழகு கூட்டினாலும், பக்கவாட்டு மற்றும் பின்பக்கத் தோற்றம் மிகவும் சுமார். போட்டி கார்களைவிட அதிக வீல்பேஸ் கொண்ட காராக இருந்தாலும், ஆஸ்பயரின் 14 இன்ச் வீல்கள் மிகச் சிறிதாக இருக்கின்றன. ஆஸ்பயரின் டிக்கி வெறும் 359 லிட்டர் கொள்ளளவு மட்டுமே கொண்டிருக்க, எக்ஸென்ட் 407 லிட்டர் கொள்ளளவு கொண்டிருக்கிறது.

ஆஸ்பயருடன் ஒப்பிடும்போது, ஹூண்டாயின் டேஷ்போர்டு கலர்ஃபுல்லாக மட்டும் அல்ல, தரமாகவும் இருக்கிறது. கியர் லீவர் பொசிஷன் கைகளுக்கு எட்டும் வகையில், வசதியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. காருக்குள் பொருட்கள் வைப்பதற்கான இடமும் அதிகம். ஆனால், எக்ஸென்ட்டின் முன்பக்க இருக்கைகள் சிறிதாக இருப்பதோடு, இருக்கைகளில் குஷனிங் சிறப்பாக இல்லை.

எக்ஸென்ட்டுடன் ஒப்பிடும் போது, ஃபோர்டு ஆஸ்பயரின் இருக்கைகளின் சொகுசுத் தன்மை பெஸ்ட் என்றே சொல்லலாம். கால்களை, நீட்டி மடக்கி உட்கார அதிக இடவசதி இருக்கிறது. ஆனால், ஹூண்டாயின் கேபின் தரத்துடன் ஒப்பிடும்போது, ஆஸ்பயர் பின்னுக்குப் போய்விடுகிறது. டயல்கள் மிகச் சின்னதாக இருப்பதோடு, சென்டர் கன்ஸோலில் ஏகப்பட்ட பட்டன்கள் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஆஸ்பயரில் இடம்பெற்றுள்ள போன் டாக் (Phone dock) எனப்படும் போனை வைக்கும் இடவசதி, நிச்சயம் வரவேற்கத்தக்க அம்சம். போனை கூகுள் மேப்புடன் இணைத்துப் பயன்படுத்துபவர்களுக்கு, இது மிகவும் வசதியான விஷயமாக இருக்கும்.

பின்னிருக்கை இடவசதியில் எக்ஸென்ட், ஆஸ்பயரை நெருங்கவே முடியாது. எக்ஸென்ட்டில் கால்களை நீட்டி உட்கார இடம் இருந்தாலும் பின்பக்க இடவசதி மிகவும் நெரிசலாக இருப்பதோடு, இருக்கைகளும் தட்டையாக இருக்கின்றன. கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி, ப்ளூடூத், யுஎஸ்பி போர்ட், ஸ்டீயரிங் கன்ட்ரோல்ஸ் ஆகியவை இரண்டு கார்களிலும் இருக்கின்றன. ஆஸ்பயரில் இல்லாத வசதிகளாக, எக்ஸென்ட்டில் பின்பக்க ஏ.சி வென்ட், ரியர்வியூ கேமரா, 1 ஜிபி மியூஸிக் ஸ்டோரேஜ், பட்டன் ஸ்டார்ட், கூல்டு க்ளோவ் பாக்ஸ் என விலைக்கேற்ற சிறப்பம்சங்கள் உள்ளன. ஆனால், ஆஸ்பயரில் விலை குறைந்த வேரியன்ட்டில்கூட இரண்டு காற்றுப் பைகள் இருப்பதோடு, விலை உயர்ந்த வேரியன்ட்டில் 6 காற்றுப் பைகள் இருக்கின்றன. எக்ஸென்ட்டின் விலை உயர்ந்த வேரியன்ட்டில், இரண்டு காற்றுப் பைகள் மட்டுமே உள்ளன.

இன்ஜின்

இங்கே நாம் ஒப்பிடுவது, பெட்ரோல் இன்ஜின்களை மட்டுமே! இரண்டு கார்களிலுமே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கள்தான் இடம்பிடித்துள்ளன. ஆஸ்பயரின் இன்ஜின் அதிகபட்சமாக 86.7 bhp சக்தியை வெளிப்படுத்த, எக்ஸென்ட் 81.8 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. ஆனால், இதில் ட்விஸ்ட் என்னவென்றால், அதிக பவர்கொண்ட ஆஸ்பயர்தான் வேகப் போட்டியில் கடைசி இடத்தில் இருக்கிறது. 0-100 கி.மீ வேகத்தை ஹூண்டாய் எக்ஸென்ட் 14.23 விநாடிகளில் கடக்க, இதே வேகத்தைத் தொட ஃபோர்டு ஆஸ்பயர் 16.63 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது. ஆஸ்பயரைவிட, எக்ஸென்ட் ஸ்மூத்தான கியர்பாக்ஸையும், லைட்டான கிளட்ச்சையும் கொண்டிருக்கிறது.

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை!

ஓட்டுதல் தரத்தைப் பொறுத்தவரை ஃபோர்டுதான் முன் நிற்கிறது. ஆஸ்பயரின் சஸ்பென்ஷன் மோசமான சாலைகளிலும் பெரிய அதிர்வுகள் ஏதும் இல்லாமல் சமாளிக்கிறது. ஆனால், எக்ஸென்ட்டின் சஸ்பென்ஷன் காருக்குள் அலுங்கல் குலுங்கல்களை ஏற்படுத்துகிறது.

ஆஸ்பயரின் கையாளுமை சுமார் ரகம்தான் என்றாலும், எக்ஸென்ட் அதைவிட மோசமாக இருக்கிறது.

எக்ஸென்ட் முழுமையான மிட் சைஸ் காராகவும், அதிக சிறப்பம்சங்கள் மற்றும் அதிக பெர்ஃபாமென்ஸ் கொண்ட காராக இருந்தாலும், ஆஸ்பயர்தான் பாதுகாப்பான காராக இருக்கிறது. இருக்கைகளும், இடவசதியும் ஆஸ்பயரின் மிகப் பெரிய பலம். ஓட்டுதல் தரத்திலும் சிறப்பான காராக இருக்கிறது ஆஸ்பயர். இரண்டு கார்களுக்கும் இடையே விலையில் பெரிய வித்தியாசம் இருக்காது என்பதால், எக்ஸென்ட் பெட்ரோல் காரைவிட சிறந்த கார் - ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் பெட்ரோல்.