நெடுஞ்சாலையில் சீறிப் பறக்கும் டீசல் இன்ஜின், சிறப்பான ஓட்டுதல் தரம், அதிக இடவசதி மற்றும் சிறப்பம்சங்கள் என, மிட் சைஸ் கார் மார்க்கெட்டில் பலம் பொருந்திய காராக இடம்பிடித்துவிட்டது டாடா ஜெஸ்ட். கிட்டத்தட்ட ஜெஸ்ட்டின் இதே பலங்களோடு வருகிறது ஆஸ்பயர். ஃபோர்டின் ஆஸ்பயர், ஜெஸ்ட்டை அசைக்குமா?

பெர்ஃபாமென்ஸ்

இந்த இரண்டு கார்களுமே பவர்ஃபுல் டீசல் இன்ஜின்களைக்கொண்டவை. ஆஸ்பயரின் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 99bhp சக்தியையும், 21.9 kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. பவர்ஃபுல் இன்ஜின்கொண்ட இந்த காரின் எடை வெறும் 1,048 கிலோ மட்டுமே! டாடா ஜெஸ்ட்டில் இருப்பது ஃபியட்டின் 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின். இது, அதிகபட்சமாக 89 bhp சக்தியையும், 20.4kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதன் எடை 1,155 கிலோ. ஆஸ்பயரின் எடை குறைவாக இருக்கும்போதே, இது ஜெஸ்ட்டைவிட வேகமான காராக இருக்கும் என்பதைக் கணித்திருக்க முடியும். 0-100 கி.மீ வேகத்தை ஆஸ்பயர் 11.03 விநாடிகளில் கடக்க, இதே வேகத்தைத் தொட ஜெஸ்ட் 14.78 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது.

இரண்டு கார்களிலுமே டர்போ லேக் உள்ளன. ஆனால், ஜெஸ்ட்டுக்குள் இருக்கும் ஃபியட்டின் மல்ட்டிஜெட் இன்ஜினுக்கு உயிர் வருவதற்கு 2,000 ஆர்பிஎம் வரை ஆக்ஸிலரேட்டரை மிதிக்க வேண்டியிருக்கிறது. ஆஸ்பயரில் 1400 ஆர்பிஎம் வரை டர்போ லேக் இருப்பதால், ஜெஸ்ட்டைவிட ஆஸ்பயரை நகருக்குள் ஈஸியாக ஓட்ட முடிகிறது. ஆனால், ஆஸ்பயரின் கிளட்ச் ஹெவியாக இருக்கிறது. இது கால்களுக்கு அதிக வலியை ஏற்படுத்தும். ஜெஸ்ட்டின் கிளட்ச் லைட்டாக இருப்பதால், நகருக்குள் கியர்களை மாற்றி ஓட்டுவது ஈஸியாகவே இருக்கிறது. நெடுஞ்சாலையில் ஓட்டுவதற்கு இரண்டு கார்களுமே சிறப்பாக இருந்தாலும், அதிக பவர்கொண்ட கார் என்பதால், ஆஸ்பயர் முன்னிலையில் இருக்கிறது.

ஓட்டுதல் தரம்

பெர்ஃபாமென்ஸில் பின்தங்கினாலும், ஓட்டுதல் தரத்தில் முதல் இடத்தில் இருக்கிறது டாடா ஜெஸ்ட். ஆஸ்பயரின் சஸ்பென்ஷன் மேடு பள்ளங்களைச் சமாளித்தாலும், ஜெஸ்ட் அளவுக்குப் பிரமாதமாக இல்லை. எவ்வளவு பெரிய மேடு பள்ளமாக இருந்தாலும், காருக்குள் உட்கார்ந்திருப்பவர்களுக்கு எந்த அசௌகர்யமும் ஏற்படாது. சஸ்பென்ஷனில் கடமுடா சத்தமும் காருக்குள் கேட்காது என பக்காவான காராக இருக்கிறது ஜெஸ்ட். ஆஸ்பயரின் 14 இன்ச் வீல்களைவிட, 15 இன்ச் பெரிய வீல்களைக்கொண்டிருப்பதும் ஜெஸ்ட்டின் சிறந்த ஓட்டுதல் தரத்துக்கு ஒரு காரணம்.

டிஸைன்

இரண்டு கார்களையும் அருகருகே நிறுத்தி வைத்துப் பார்த்தால், இந்த கார்களின் முன்பக்கம் உங்களைக் கவரும். ஆனால், இரண்டு கார்களின் பின் பக்கமுமே கொஞ்சம் அஷ்ட கோணலாக இருப்பதுபோல் இருக்கும். இரண்டு கார்களின் பக்கவாட்டு மற்றும் பின்பக்கத் தோற்றமுமே சுமார் ரகம்தான். ஆஸ்பயரைவிட அகலமான மற்றும் உயரமான காராக இருப்பதால், ஸ்டெபிளிட்டியில் சிறப்பாக இருக்கிறது ஜெஸ்ட். இடவசதியைப் பொறுத்தவரை இரண்டு கார்களுமே சிறப்பாக இருந்தாலும், ஜெஸ்ட் ஒருபடி மேலே இருக்கிறது. ஆஸ்பயரின் பின் இருக்கைகளில் மூன்று பேர் வசதியாக உட்கார முடியாது. ஆனால், ஜெஸ்ட்டில் மூன்று பேருக்கு இடம் இருக்கிறது. அதிக வசதிகள்கொண்ட டேஷ்போர்டு, 5-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் கலர்ஃபுல் டயல்கள் கொண்டு, ஆஸ்பயரை வீழ்த்துகிறது ஜெஸ்ட்.

டாடா ஜெஸ்ட்டில் கிளட்ச், பிரேக், ஆக்ஸிலரேட்டர் பெடல்கள் இருக்கும் இடம் மிகவும் குறுகலாக இருப்பதால், காரை ஓட்டுபவர் கிளட்ச் மிதிக்க வேண்டிய தேவையற்ற சமயங்களில் இடது காலை நீட்டி வைக்க இடம் இல்லை. மேலும், சீட்டை எவ்வளவு உயரமாக அட்ஜெஸ்ட் செய்துவைத்தாலும், ஜெஸ்ட்டின் ஸ்டீயரிங் வீல் மிகவும் உயரமாக இருக்கிறது. மேலும், தண்ணீர் பாட்டில் மற்றும் கப்புகள் வைக்க அதிக கப் ஹோல்டர்களும் இல்லை.
ஆனால், இந்தக் குறைகள் ஏதும் ஃபோர்டு ஆஸ்பயரில் இல்லை. இருக்கைகளின் சொகுசுத் தன்மையைப் பொறுத்தவரை ஆஸ்பயர்தான் லீடிங். ஆஸ்பயரின் டிரைவிங் பொசிஷன் மிகச் சிறப்பாக இருக்கிறது. இதனால், நீண்ட தூரப் பயணங்களின்போதும் களைப்பு தெரியவில்லை. ஆனால், டேஷ்போர்டு பிளாஸ்டிக்ஸ் தரமும், சென்டர் கன்ஸோல் பட்டன்களும் ஆஸ்பயரின்

மதிப்பைக் கெடுப்பது போல இருக்கின்றன.

இரண்டில் எந்த காரை வாங்கலாம் என்ற கேள்விக்குப் பதிலைத் தேடினால் பிராண்ட் பெயர்தான் முதலில் நினைவுக்கு வருகிறது. டாடாவா, ஃபோர்டா என்றால், ஃபோர்டுக்கே அதிக வாக்குகள் விழும். ஆஸ்பயரில் டச் ஸ்கிரீன் இல்லை; பின் இருக்கைகளில் மூன்று பேர் உட்கார முடியாது; ஓட்டுதல் தரமும் ஜெஸ்ட்டைவிட சுமார்தான் என்றாலும், ஆஸ்பயரை விட்டுவிட்டு ஜெஸ்ட்டை வாங்கலாம் எனச் சொல்ல முடியாது. நீண்ட தூரம் பயணித்தாலும் களைப்பே தெரியாத சொகுசான இருக்கைகள், பவர்ஃபுல் இன்ஜின் மற்றும் அதிக மைலேஜ் என்பதைத் தாண்டி, நெடுஞ்சாலையில் அதிகம் பயன்படுத்தக்கூடிய காராகவும் இருக்கிறது, ஆஸ்பயர் டீசல்!