Published:Updated:

வால்வோவின் அட்டகாச கார் !

ஃபர்ஸ்ட் டிரைவ்தொகுப்பு: ராஜா ராமமூர்த்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ந்தியாவில் 2013-ம் ஆண்டு விற்பனைக்கு வந்த வால்வோ V40 க்ராஸ் கன்ட்ரி கார், வால்வோ V40 ஹேட்ச்பேக் காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் V40 ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது வால்வோ.

டிஸைன்

டிஸைனில் ஆர்ப்பாட்டமில்லாத அழகான காராக இருக்கிறது V40. இதன் போட்டி கார்களான பிஎம்டபிள்யூ 1 சீரிஸ், மெர்சிடீஸ் பென்ஸ் A க்ளாஸ் போன்ற கார்களுடன் ஒப்பிடும்போது, பிரம்மாண்டமாகவே இருக்கிறது. காரின் ஒட்டுமொத்த டிஸைனில் ‘முழுமை’ இருக்கிறது. பின்பக்க டெயில் லைட்ஸ், பின்பக்க விண்ட் ஸ்க்ரீனுக்குக் கீழ் உள்ள கறுப்பு வண்ண பேனல் ஆகியவை, புது அழகோடு இருக்கின்றன.

வால்வோவின் அட்டகாச கார் !

நாம் ஓட்டிய R-டிஸைன் ட்ரிம், காரின் உள்பக்கம் முழுவதும் கறுப்பு வண்ணமே வியாபித்து இருக்கிறது. ஸ்டீயரிங், டோர் ட்ரிம், கியர் லீவர், ஹேண்ட்பிரேக் லீவர், இருக்கைகளில் இரட்டைத் தையல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எல்லா வால்வோ கார்களைப் போலவே இதிலும் முன்பக்க இருக்கைகள் மிக சொகுசாக உள்ளன. டிரைவர் இருக்கைக்கு மெமரி வசதி உள்ளது. டேஷ்போர்டு டிஸைன் பார்க்க படு ஸ்மார்ட். ஆனால், சென்டர் கன்ஸோலில் இவ்வளவு பட்டன்கள் தேவை இல்லை. டயல்கள் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய 5-இன்ச் ஸ்கிரீன் மிகச் சிறிதாக உள்ளது. ஆனால், 8-இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் செம விஷுவல் ட்ரீட்!
விலை உயர்ந்த வேரியன்ட்டில் ‘பார்க் அஸிஸ்ட் பைலட்’ வசதியும் உண்டு. இந்த வசதி மூலம், கார் தானாகவே பேரலல் பார்க்கிங் செய்துகொள்ளும். காரை ஓட்டுபவர் ஆக்ஸிலரேட்டரை மிதிக்கவோ, ஸ்டீயரிங்கைத் திருப்பவோ வேண்டிய அவசியம் இல்லை.

இரண்டு பேர்தான் பின்னிருக்கையில் சொகுசாக அமர்ந்து செல்ல முடியும். ஆனால், கால்களை வைக்க இடவசதி தாராளமாக இருக்கிறது. பின் பக்க இருக்கைகளை மடித்துக் கொள்ளவும் முடியும்.

வால்வோ கார் என்றாலே பாதுகாப்பு வசதிகள்தானே! காருக்குள் இருக்கும் காற்றுப் பைகள் தவிர, ‘பெடெஸ்ட்ரியன் ஏர்பேக்’ வசதியும் V40 காரில் உள்ளது. காரின் முன் பக்க விண்ட்ஸ்கிரீனுக்குக் கீழே பானெட்டுக்குள் இருக்கும் இந்தக் காற்றுப் பை, கார் யார் மீதாவது மோதினால், மேலே விரிந்து, கார் மேல் மோதியவருக்குப் பெரிய அடி படாமல் தடுக்கும். 

மேலும் ‘சிட்டி சேஃப் 2’ வசதியும் இருக்கிறது. மணிக்கு 50 கி.மீ வேகம் வரை செல்லும்போது, வேறொரு வாகனத்துடன் மோத இருந்தால், அது தானாகவே பிரேக்கை அழுத்துகிறது.

வால்வோவின் அட்டகாச கார் !

இன்ஜின்

2.0 லிட்டர், 5 சிலிண்டர் இன்ஜின் 148 bhp சக்தியையும், 35.7 kgm டார்க்கையும் அளிக்கிறது. எடுத்த உடனே வேகம் பிடிக்கும் இன்ஜின் இது  இல்லை என்றாலும், டார்க் டெலிவரி நன்றாக உள்ளது.6- ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், இன்ஜினு டன் கச்சிதமாகப் பொருந்துகிறது. நாமே கியர் மாற்றிக்கொள்ளும் டிப்ட்ரானிக் வசதியும் உள்ளது. பென்ஸ் A க்ளாஸ் அளவுக்கு இந்த இன்ஜின் சத்தம் போடுவது இல்லை.

ஃப்ரன்ட் வீல் டிரைவ் என்பதால், ஓட்டுவதற்கு 1 சீரிஸ் அளவுக்கு ஜாலியாக இல்லை. மேலும், இதன் டர்னிங் சர்க்கிள்  ரேடியஸ் அதிகம் என்பதால், சிட்டியில் யு-டர்ன் போடும்போது சிக்கலாக இருக்கும். ஓட்டுதல் தரமும் இறுக்கமாகவே இருக்கிறது.

வால்வோவின் அட்டகாச கார் !

முழுவதும் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் V40 காரின் விலை, இங்கு அசெம்பிள் செய்து விற்பனையாகும் போட்டி கார்களைவிட குறைவாகவே உள்ளது. V40 பேஸிக் மாடலின் சென்னை ஆன் ரோடு விலை 30.43 லட்சம் ரூபாய். R-டிஸைன் மாடலின் விலை 34 லட்சம் ரூபாய். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, A க்ளாஸ் காருக்கும் 1 சீரிஸ் காருக்கும் நடுவில் இருக்கிறது, வால்வோ V40.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு