மிகவும் வேகமான, வெற்றிகரமான பைக்கு களுக்குத்தான் ‘GSX’ எனும் பெயரைச் சூட்டும் சுஸூகி. ஆனால், நேக்கட் பைக்கான S1000 பைக்குக்கு ‘GSX’ பட்டம் கொடுத்து, GSX-S1000 பைக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபுல் ஃபேரிங் கொண்ட பைக் என்றால், இருக்கவே இருக்கிறது GSX-S1000F. இரண்டுமே முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டு, இங்கே விற்பனை செய்யப்படுகின்றன.

டிஸைன்

GSX-S1000 பைக்கின் டிஸைன் ஸ்மூத்தாக இருந்தாலும், மிரட்டலாக இருக்கிறது. ட்வின் LED பைலட் லைட்ஸ், பார்க்க செம கெத்து. பெட்ரோல் டேங்க் டிஸைனும், பைக்கின் ஒட்டுமொத்த டிஸைனுடன் பொருந்துகிறது. முன் பக்க ஃபோர்க்குகள் தங்க வண்ணத்தில் மின்னுவதால், பைக்கைப் பார்க்கவே ப்ரீமியமாகக் காட்சியளிக்கிறது. பைக்கின் பின் பக்க டிஸைன் சிம்பிளாக இருந்தாலும், சாலையில் தனித்துத் தெரிகிறது. கிராப் ஹேண்டில்ஸ் இல்லை.

ஃபுல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், படிக்கத் தெளிவாக இருக்கிறது. கைப்பிடிகள் சாஃப்ட்டாக, கச்சிதமாக இருக்கின்றன. பிரேக் லீவரில் மட்டும் ‘ரீச்-அட்ஜஸ்டபிள்’ வசதி உள்ளது. சுவிட்ச்சுகள் உயர்தரமானவை. டிராக்ஷன் கன்ட்ரோலை அட்ஜஸ்ட் செய்வதற்குத் தனி பட்டன் உண்டு. 17- லிட்டர் டேங்க், தொடைகளுக்கு நல்ல சப்போர்ட்டை அளிக்கிறது. பைக்கின் ஒட்டுமொத்தத் தரம் சிறப்பாக இருக்கிறது.

இன்ஜின்

999 சிசி, 4 ஸ்ட்ரோக், 4 சிலிண்டர், 143.5 bhp சக்தியை 10,000 ஆர்பிஎம்-ல் அளிக்கிறது GSX-S1000 -ன் இன்ஜின். இது, கவாஸாகி Z1000 பைக்கைவிட அதிகம். ஹோண்டா CB 1000R பைக்கைவிட மிகவும் அதிகம். 9,500 ஆர்பிஎம்-ல் 10.8 kgm சக்தியை அளிக்கிறது. எக்ஸாஸ்ட் சத்தம் செம ஸ்போர்ட்டி!

3-ஸ்டெப் டிராக்ஷன் கன்ட்ரோலை, தேவைப்பட்டால் ஆஃப் செய்துகொள்ளலாம். மிக அருமையாக இயங்குகிறது இந்த டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம். எந்தவிதமான சாலைகளிலும் பின் சக்கரம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இன்ஜின் திராட்டில் ரெஸ்பான்ஸ் ஸ்மூத்தாக இருப்பதால், பவர் டெலிவரியில் எடுத்ததும் பயமுறுத்தவில்லை. 5,000 ஆர்பிஎம்-ல் இருந்து 7,500 ஆர்பிஎம் வரை சிறப்பான பவர் டெலிவரியை அளிக்கிறது. அதன்பிறகு, 10,000 ஆர்பிஎம் வரை பவர் டெலிவரி இன்னும் சூப்பர். முதல் கியரே மணிக்கு 108 கி.மீ வேகம் வரை இழுக்கிறது. மணிக்கு 150 கி.மீ வேகத்தில் க்ரூஸ் செய்வதும் எளிதாக இருக்கிறது. கியர்கள் பைக்கின் வேகத்துக்கு ஏற்ப தாமதம் இல்லாமல் சட்டென மாறுகிறது.

ஓட்டுதல் தரம், கையாளுமை

எர்கானமிக்ஸ் சிறப்பாக இருப்பதால், நகருக்குள் பைக்கை ஓட்டுவது எளிதாக இருக்கிறது. பெரிய பைக்காக இருந்தாலும், ஓட்டும்போது லைட்டாக இருக்கிறது. முன்பக்கம் அப்சைடு-டவுன் ஃபுல்-அட்ஜஸ்டபிள் ஃபோர்க்குகள் உள்ளன. இதில் ஸ்ப்ரிங் ப்ரீலோடு, டாம்பிங், ரீபவுண்ட்,

கம்ப்ரஷன் போன்ற செட்டிங்குகளை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். பின்பக்கம் அலாய் ஸ்விங்-ஆர்ம்-உடன் அட்ஜஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளது. மலைச் சாலைகளில்கூட ஓட்டுவதற்கு எளிதாக இருக்கிறது சுஸூகி GSX-S1000. டன்லப் டயர்கள் நல்ல ரோடு கிரிப்பை அளிக்கின்றன.

முன் பக்கம் 310 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பக்கம் 250 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் உள்ளன. ஏபிஎஸ் சிஸ்டம், ஈரமான சாலைகளில்கூட சிறப்பாக இயங்குகிறது.
அருமையான ரோடு பிரசென்ஸ், பட்டையைக் கிளப்பும் எக்ஸாஸ்ட் சத்தம், மிரட்டலான டிஸைன், அலட்டல் இல்லாத பெர்ஃபாமென்ஸ் என பாஸ் மார்க் வாங்கும் S1000 பைக், ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல் போன்ற எலெக்ட்ரானிக் தொழில்நுட்பங்களுடன் டிஸ்டிங்ஷன் வாங்குகிறது. விலையும் மற்ற சூப்பர் பைக்குகளுடன் ஒப்பிடும்போது குறைவு என்பது கூடுதல் ப்ளஸ்!