பிரான்ஸின் மிஷ்லின் டயர்கள் தமிழகத்தில் எங்கே தயாராகின்றன தெரியுமா? மதுரையில் உள்ள டிவிஎஸ் ஸ்ரீ சக்ரா தொழிற்சாலையில்தான். உலகப் புகழ்பெற்ற மிஷ்லின் நிறுவனத்துக்கு இரு சக்கர வாகனங்களுக்கான டயர்களைத் தயாரித்து அளிக்கிறது டிவிஎஸ் நிறுவனம்.

டிவிஎஸ் குழுமத்தின் அங்கமான டிவிஎஸ் ஸ்ரீ சக்ரா நிறுவனம், 1982-ல் டயர் தயாரிப்பில் இறங்கியது. இன்றைக்கு மதுரையில் ஒரு தொழிற்சாலையும், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு தொழிற்சாலையும் வைத்திருக்கும் இந்த நிறுவனம், மாதந்தோறும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட டயர்களைத் தயாரிக்கிறது. இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களுக்கும், ஆஃப் ரோடு வாகனங்களுக்கும், தொழிற்சாலைப் பயன்பாட்டு வாகனங்களுக்கும் டயர்களைத் தயாரிக்கும் டிவிஎஸ், இந்த செக்மென்ட்டில் முன்னணியில் இருப்பதுடன், இப்போது மிஷ்லினுக்கும் டயர்கள் தயாரித்து வழங்குகிறது.

சமீபத்தில் மதுரையில் உள்ள டிவிஎஸ் டயர் தொழிற்சாலைக்குச் சென்றிருந்தபோது, டிவிஎஸ் டயர்களின் தனித்தன்மை குறித்தும் எதிர்காலத் திட்டம் குறித்தும் நம்மிடம் பேசினார், இயக்குனரான விஜயராகவன்.

‘‘இந்தியா முழுவதும் 3,000 டீலர்களை நியமித்திருக்கிறோம். இதன் மூலம் டிவிஎஸ் டயர் கிடைக்காத இடமே இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். டிவிஎஸ் டயர்ஸ் மற்றும் யூரோ க்ரிப் ஆகிய பிராண்டுகளில் டயர்களை உற்பத்தி செய்கிறோம். யூரோ க்ரிப் பிராண்ட், 80 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் பஜாஜ், ஹீரோ, ஹோண்டா, சுஸூகி, டிவிஎஸ், யமஹா ஆகிய நிறுவனங்களுக்கு சப்ளை செய்யப்படும் டிவிஎஸ் டயர்கள், உலகின் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது’’ என்றார்.

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவைப் பற்றிப் பேசும்போது, ‘‘1995-ல் துவக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறைக்காக, 35,000 சதுரடி பரப்பளவில் லேப் அமைத்துள்ளோம். இங்கு லேட்டஸ்ட் டெஸ்ட்டிங் கருவிகள் அனைத்தும் இருக்கின்றன. இந்தியாவின் அறிவியல்

தொழில்நுட்பத் துறையின் அங்கீகாரம் பெற்றது இந்த லேப். வாடிக் கையாளர்களின் தேவைகளுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதை மையமாகக்கொண்டு இந்தத் துறை செயல்படுகிறது.

எங்களது தயாரிப்பு எப்படி இருக்கும் என்பதை, தயாரிக்கும் முன்பே பத்து விதமாகப் பரிசோதிக்க முடியும். டயரை டெஸ்ட் செய்ய சிமுலேட்டர்கள் இருப்பதுடன், மதுரையில் டெஸ்ட் டிராக் ஒன்றை வைத்துள்ளோம். ஜப்பானிலும் ஐரோப்பிய நாடுகளிலும் எங்கள் டயர்களைச் சோதிக்க பிரத்யேக டெஸ்ட் டிரைவர்களும் இருக்கிறார்கள். கோடிக்கணக்கான இருசக்கர வாகன ஓட்டிகளின் வாழ்வுடன் பிணைந்திருக்கும் டயர்களை, நன்கு பரிசோதித்து தரம் உறுதி செய்யப்பட்ட பின்பே தருகிறோம்!’’ என்றார்.

உள்ளூர் டயர்... உலகத்தரம்!