கார் கண்டுபிடித்த காலத்தில் இருந்து மறக்கவும் மறுக்கவும் முடியாத பெயர் - பென்ஸ். சாதாரண கார்களுடன் பென்ஸை ஒப்பிட முடியாது. அதனால், ஒரு கார் ஆர்வலரின் இலக்கு, நிச்சயம் பென்ஸ் காராகத்தான் இருக்கும்.

தரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, நம்பிக்கை ஆகியவற்றுக்குப் பெயர் பெற்ற பென்ஸ் கார்கள், பழைய கார் மார்க்கெட்டில் மிக நல்ல விலைக்குக் கிடைக்கின்றன. ஆனால், யானையைக் கட்டித் தீனி போட முடியாது என நினைத்துக்கொண்டு, பலரும் பென்ஸ் கார் வாங்குவதைத் தவிர்த்துவிடுகிறார்கள். ஒப்பீட்டளவில் பராமரிப்புச் செலவு கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், அதன் தரத்துக்கு எந்த காரும் ஈடாகாது.

1984 முதல் 1996 ஆண்டு வரை, W124 பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட பென்ஸ் இ-க்ளாஸ் கார்கள் உலகப் புகழ்பெற்றவை. இதில் செடான் மற்றும் ஸ்டேஷன் வேகன் மாடல்கள் மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையானவை. தரம், பாதுகாப்பு, பெர்ஃபாமென்ஸ், சொகுசு ஆகியவற்றுக்காக மதிக்கப்படும் இந்த மாடல் கார்கள், இன்றைக்கும் பிரச்னையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. W124 பிளாட்ஃபார்மில் 4 டோர் செடான், 5 டோர் ஸ்டேஷன் வேகன், 2 டோர் கூபே, 2 டோர் கன்வெர்ட்டிபிள், 6 ஸ்டோர் லிமோஸின் என ஐந்து பாடி ஸ்டைலுடன் தயாரிக்கப்பட்டன. மேலும், பெட்ரோல் மாடலில் 4 சிலிண்டர், 6 சிலிண்டர், 8 சிலிண்டர் (V8) இன்ஜின்களும்... டீசல் மாடலில் 4 சிலிண்டர், 5 சிலிண்டர், 6 சிலிண்டர் இன்ஜின்களும் கொண்டிருந்தன. ஆனால், இந்தியாவில் அதிகம் விற்பனையானது 4 டோர் செடான் மாடலில் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினும், டீசல் மாடலில் 5 மற்றும் 6 சிலிண்டர் இன்ஜின்கொண்ட மாடல்களும்தான்.

4 ஸ்பீடு மற்றும் 5 ஸ்பீடு ஆகிய இரண்டுவிதமான கியர்பாக்ஸில் ஆட்டோமேட்டிக், மேனுவல் என நான்கு ஆப்ஷன்களை அளித்தது பென்ஸ். நீளமான வீல்பேஸ் கொண்ட இந்த இ-க்ளாஸ் மாடல் நம் நாட்டில் அதிகம். சென்னையில் ‘இ-க்ளாஸ் 300’ மாடல் காரை வைத்திருக்கும் துரைமோகனை தீவிரமான பென்ஸ் ரசிகர் என்றே சொல்லலாம்.

‘‘பென்ஸ் காரில் எனக்கு மிகவும் பிடித்த மாடல் என்றால், அது W124 பிளாட்பார்மில் தயாரான கார்கள்தான். சொகுசு, வசதி, நம்பகத்தன்மை என இன்றைக்கும் நவீன கார்களுடன் போட்டி போடும் அளவுக்குச் சிறந்த தயாரிப்புகள். என்னிடம் இ-க்ளாஸ் மாடலில் E300 மற்றும் E300D ஆகிய இரு கார்கள் இருக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளாக இந்த மாடல் கார்களைத்தான் நான் மாற்றி மாற்றிப் பயன்படுத்துகிறேன்.

விலையைப் பொறுத்தவரை, விற்பனைக்கு வந்தபோது சுமார் 40 லட்ச ரூபாய்க்கு மேல் விலைகொண்டிருந்த இவை, இப்போது 2.5 லட்ச ரூபாய் முதல் அதிகபட்சம் 5 லட்ச ரூபாய் வரை கிடைக்கின்றன. இது அளிக்கும் சொகுசும், பாதுகாப்பும் வேறு எந்த காரிலும் கிடைக்காது. இந்த காரைப் பயன்படுத்திப் பழகியவர்களுக்கு வேறு எந்த காரிலும் முழுத் திருப்தி கிடைக்காது’’ என்று பெருமை பொங்கப் பேசினார் துரைமோகன்.

‘‘என் கார், 1994-ம் ஆண்டுத் தயாரிப்பு. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் இருந்து இந்த காரை வாங்கினேன். இதுவரை பெரிதாக எந்தச் செலவும் வைத்தது இல்லை. முறையாகப் பராமரித்து வருகிறேன் என்பதால், வேறு பிரச்னைகளும் இல்லை. E300 எனும் இந்த மாடல், 6 சிலிண்டர் ட்வின் கேம் டீசல் இன்ஜின்கொண்டது. இன்ஜின் கம்பார்ட்மென்ட் மிகப் பெரிதாக இருக்கும். எலெக்ட்ரானிக்ஸ் சமாச்சாரங்கள் மிகக் குறைவு என்றாலும், இதில் இருக்கும் தொழில்நுட்பம் இப்போது உள்ள மற்ற கார்களுடன் போட்டி போடும். இதன் சிங்கிள் வைப்பர், விண்ட் ஷீல்டின் மறுமுனை வரை சென்று திரும்பும். விண்ட் ஷீல்டு மற்றும் விண்டோஸ் கண்ணாடிகள் மிகத் தடிமனானவை. சன் ரூஃப், பவர் விண்டோஸ் ஆகியவற்றின் மோட்டார்கள் இன்றும் சிறப்பாக இயங்குகின்றன. பின்பக்கம் மல்ட்டி லிங்க் சஸ்பென்ஷன் என்பதால், மேடு பள்ளங்களில் கார் ஏறி இறங்குவதே தெரியாது. சாலையின் அலுங்கல் குலுங்கல் காருக்குள் வராத அளவுக்கு சிறந்த சஸ்பென்ஷன் சிஸ்டம் கொண்டவை இந்த மாடல் கார்கள்.

சுமார் 1.5 டன் எடைகொண்ட இந்த கார், என் ஓட்டுதல் முறைக்கு லிட்டருக்கு 11 - 13 கி.மீ வரை மைலேஜ் அளிக்கிறது. முதன்முதலில் அண்டர் பாடி கவர், W124 பிளாட்பார்மில் உருவான கார்களுக்குத்தான் அளிக்கப்பட்டது. சாலையின் சத்தம் காருக்குள் கேட்காத அளவுக்கு அப்போதே மிகச் சிறப்பாக இன்சுலேஷன் செய்திருக்கிறார்கள். இதை வைத்திருப்பவர்கள் பெரிதாகக் கவலைப்படுவது சர்வீஸுக்குத்தான். ஆனால், எனக்கு அந்தக் கவலை கிடையாது. ஏனெனில், இதில் இருக்கும் ஒவ்வொரு உதிரி பாகமும் மிகத் தரமானவை. சுலபமாக எதுவும் உடைந்துபோவது இல்லை. பயன்படுத்துவதால் ஏற்படும் தேய்மானம் மட்டுமே புதியதை வாங்கவைக்கும். காரின் ஸ்பேர் பார்ட்ஸ் சென்னை, பெங்களூரு, புனே, மும்பை ஆகிய நகரங்களில் கிடைக்கின்றன. எங்காவது பயணம் செய்யும்போது வழியில் நின்றுவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் பலரை இந்த காரைவிட்டு விலகி ஓடவைக்கிறது. என் 15 ஆண்டு அனுபவத்தில் ஒருமுறைகூட அப்படி நிகழ்ந்தது இல்லை. கோவை, பெங்களூரு என அடிக்கடி இந்த காரில்தான் பயணம் செய்கிறேன். பென்ஸ் காரின் ருசி புரிந்தவர்்களுக்கு மட்டுமே இதன் அருமை புரியும்!’’ என்று சிலாகிக்கிறார் துரைமோகன்.