பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணிவது சரி; அந்த ஹெல்மெட்டில் இன்னும் என்னவெல்லாம் இருந்தால் கூடுதல் பாதுகாப்பு என ஆராயத் துவங்கிவிட்டனர் ஹெல்மெட் பிரியர்கள். ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டும்போது, பிரேக் பிடித்தால் ஹெல்மெட்டின் பின்புறத்தில் விளக்கு ஒளிர்வதுபோல ஒரு ஹெல்மெட்டை உருவாக்கியுள்ளார்,c“ஹெல்மெட் போட்டுக்கொண்டு பைக் ஓட்டுவது, நான் பொதுவாகக் கடைப்பிடிக்கும் பழக்கம். சமீபத்தில் ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் சொன்னதும், ஹெல்மெட்டில் கூடுதலாகப் பாதுகாப்புக்கு ஏதாவது செய்யலாமே என யோசித்தேன். பைக்கில் பிரேக் பிடிக்கும்போது, பைக்கின் பின்பக்கம் சிவப்பு விளக்கு ஒளிர்வதுபோல, ஹெல்மெட்டின் பின்னால் சிவப்பு விளக்கு  ஒளிர்ந்தால் மிக உபயோகமாக இருக்குமே என்று நினைத்தேன். அதைச் செய்தும் முடித்துவிட்டேன்!” என்கிறார் ஜான்சன்.

ஒளிரும் ஹெல்மெட் !

 ‘‘இப்போது, என் இரு சக்கர வாகனத்தில் பிரேக்கை அழுத்தும்போது, ஹெல்மெட்டிலும் விளக்குகள் ஒளிரும். எனது ஸ்கூட்டரின் டெயில் லைட் இணைப்பில் ஒரு டிரான்ஸ்மீட்டரைப் பொருத்தி, அதன் ரிசீவரை ஹெல்மெட்டில் பொருத்திவிட்டேன். ஹெல்மெட்டின் பின்பக்கம் LED விளக்குப் பட்டையை உறுத்தாத அளவில் ஃபிக்ஸ் செய்து, ரிசீவருடன் இணைத்துள்ளேன். அவ்வளவுதான் இந்த மெக்கானிஸம்.
ரீசிவரில், ரீ-சார்ஜபிள் 12 வோல்ட் பேட்டரி இருக்கிறது. இதை செல்போன் போல சார்ஜ் செய்யலாம். அதேபோல், ரிசீவரில் ஆன்/ஆஃப் ஸ்விட்ச் இருக்கிறது. தேவையற்ற சமயத்தில் ஆஃப் செய்துகொள்ளலாம். இந்த சென்ஸார் 20 அடி தூரம் வரைக்கும் இயங்கும்.

நான் முதன்முதலில் இதைப் போட்டுக்கொண்டு பயணம் செய்தபோது, நிறைய பேர் என்னிடம், ‘எங்கே வாங்கிய ஹெல்மெட்’ என்று விசாரித்தார்கள். ‘பார்க்க மிக நன்றாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது’ என்று சொன்னார்கள். இதை இன்னும் தேவைக்கேற்றபடி எப்படி எல்லாம் மாற்ற முடியும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்!” என்கிறார் ஜான்சன் உற்சாகமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு