துணிமணிகளுக்கு மட்டும் அல்ல... இப்போது கார்களுக்கும் ஆடித் தள்ளுபடி வந்துவிட்டது. 50,000 ரூபாய் தள்ளுபடி, மாதத்துக்கு 2,675 ரூபாய் மட்டுமே தவணை, இன்ஷூரன்ஸ் இலவசம் என தினம் தினம் செய்தித் தாள்களைத் திறந்தால், கார் விளம்பரங்கள் பளிச்சிடுகின்றன. இந்த விளம்பரங்கள் வாடிக்கை யாளர்களை ஷோரூம் பக்கம் வர வைக்கக் கொடுக்கப்படும் வெறும் கவர்ச்சி விளம்பரங்களா? அல்லது உண்மையிலேயே வாடிக்கையாளர்களுக்குப் பயன் தரும் அறிவிப்புகளா? கண்டு பிடிக்க வாடிக்கையாளர்போல ஷோரூம்களைத் தொடர்பு கொண்டோம்.

மாதம் ` 2,675 மட்டும் செலுத்தி புத்தம் புதிய அமேஸுக்கு மாறுங்கள்!

ஆடி மாதத்தின் ஹிட் விளம்பரம் ஹோண்டாவின் இந்த விளம்பரம்தான். ‘உங்கள் காரை எக்ஸ்சேஞ்ச் கொடுத்த பிறகு 2,675 ரூபாய் மாதம் கட்டினால் போதும்; ஹோண்டா அமேஸ் உங்களுக்குச் சொந்தமாகும்’ என்றது இந்த விளம்பரம். ஸ்விஃப்ட், i20, டிஸையர் என மற்ற கார்களின் மாதத் தவணையைவிடவும் அமேஸின் மாதத் தவணை குறைவு என்ற விவரமும் இதில் சுட்டிக் காட்டப்பட்டு இருந்தது. விளம்பரத்தில் ஜூலை 4, 5-ம் தேதிக்கான ‘வீக் எண்ட் எக்ஸ்சேஞ்ச் கார்னிவல்’ என்றே போடப்பட்டிருந்தது. நாம் 10 நாட்கள் கழித்து மானஸரோவர் ஹோண்டாவுக்கு போன் செய்தோம்.

போனை எடுத்தவரிடம், ‘‘சார், அமேஸ் விளம்பரத்தைப் பார்த்துட்டுக் கூப்பிடுறேன். இந்த 2,675 தவணை பற்றிச் சொல்லுங்க...’’ எனக் கேட்டபோது, ‘‘சார், அது 7 வருஷத் தவணைத் திட்டம். உங்களோட பழைய காரை எக்ஸ்சேஞ்ச் பண்ணுனா இந்த ஆஃபர் கிடைக்கும்!’’ என்றவரிடம், ‘‘என்னிடம் இருக்கும் பழைய கார் ஃபிகோ. அது 2010 மாடல், 65,000 கி.மீ ஓடியிருக்கிறது’’ என்று சொன்னதும், ‘‘அது எவ்வளவு விலை போகும்னு பார்த்துட்டுச் சொல்றேன் சார்...’’ என்றவர், சில மணி நேரங்கள் கழித்து லைனில் வந்தார். ‘‘அது 2.5 லட்சம் வரைக்கும் போகும்... நீங்க டவுண் பேமன்ட் 4 லட்சம் கட்டினாத்தான் இந்த ஏழு வருஷத் தவணையில சேர முடியும்!’’ என்றவரிடம், ‘வேறு என்ன ஆஃபர் இருக்கிறது’ என்று கேட்டபோது, ‘‘நார்மலா வாங்கினீங்கன்னா இன்ஷூரன்ஸ்ல பாதி டிஸ்கவுன்ட் இருக்கு’’ என்று சொன்னார். ‘‘பாதின்னா எவ்ளோ?’’ என்றபோது, ‘‘இன்ஷூரன்ஸ் 21,000. அதில் 10,500 டிஸ்கவுன்ட் கொடுப்போம். கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் போனஸ் 15,000 ரூபாய் கொடுப்போம்!’’ என்றார்.

வாழ்க்கையை எளிதாக்குங்கள் எட்டியோஸ் உடன்!

அடுத்ததாக டொயோட்டா - ‘வாழ்க்கையை எளிதாக்குங்கள் எட்டியோஸ் சீரிஸ் உடன்!’ என்றது டொயோட்டா விளம்பரம். கார்களுக்குக் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் வட்டி வசூலிக்கப்படும் நிலையில், 5.99 சதவிகிதம் மட்டுமே வட்டி என்பதுதான் இந்த விளம்பரத்தின் முக்கியத்துவம். அதில் இருந்த டீலர் எண்களில், ஹர்ஷா டொயோட்டாவுக்கு போன் செய்தேன். டொயோட்டா எட்டியோஸ் லிவா டீசல் மாடல் வாங்கப் போகிறேன் என்று சொன்னேன். போனை எடுத்தவர், ‘‘எட்டியோஸ் லிவாவின் டாப் எண்ட் மாடலின் சென்னை ஆன் ரோடு விலை 8.47 லட்சம் சார். 5.99 ஸ்கீமுக்குப் போகணும் என்றால், 4.20 லட்சம் ரூபாய் டவுண் பேமன்ட் கட்டணும். 36 மாசம்தான். அதாவது, 3 வருஷம்தான் லோன் பீரியட். மாசத்துக்கு நீங்கள் 13,499 ரூபாய் தவணை கட்ட வேண்டியிருக்கும்’’ என்றார்.

டொயோட்டாவின் விளம்பரத்தில், ‘எட்டியோஸ் லிவாவின் தவணை 6,666 ரூபாயில் இருந்து ஆரம்பம்’ எனக் குறிப்பிடப்பட்டு, கண்டிஷன்ஸ் அப்ளை போட்டிருந்தது. அந்த கண்டிஷன்ஸ் அப்ளைக்கு என்ன அர்த்தம் என்றால், லிவாவின் பெட்ரோல் இன்ஜின்கொண்ட குறைந்த விலை மாடலுக்கு மட்டுமே இந்தத் தவணை.

லோன் விவரங்களைச் சொல்லி முடித்ததும், விற்பனைப் பிரதிநிதி மறக்காமல் சொன்னது: ‘‘டொயோட்டா ஃபைனான்ஸ் கம்பெனி ஆரம்பிச்சி மூணு வருஷம் ஆகிறதால, இந்த மாதம் மட்டும்தான் இந்த ஆஃபர்!’’

இந்த ஜூலையில் மழை போன்ற சலுகைகள்!

‘மழை போன்ற சலுகைகள்’ என்கிற ஸ்லோகனுடன் ‘போலோவுக்கு வெறும் 3.99 சதவிதம் மட்டுமே வட்டி’ என்ற விளம்பரத்தை வெளியிட்டிருந்தது ஃபோக்ஸ்வாகன். கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் 10,000, லாயல்டி போனஸ் 10,000 என்றும் சொல்லப்பட்டிருந்தது. டெர்ம்ஸ் அண்டு கண்டிஷன்ஸில் 3.99 சதவிகித வட்டிச் சலுகை போலோ டீசலில் மட்டுமே என்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது.

போன் அடித்தேன். டீசலின் விலை உயர்ந்த மாடல் வேண்டும்் என்றதும், ‘‘விலை உயர்ந்த மாடலின் சென்னை ஆன் ரோடு விலை 9.21 லட்சம் ரூபாய். எக்ஸ்ஷோரூமில் இருந்து 90 சதவிதம்தான் லோன் தருவோம். 7.16 லட்சம் ரூபாய்க்கு நீங்கள் லோன் கட்ட வேண்டியிருக்கும். இந்தத் திட்டப்படி 3 ஆண்டுகள் மட்டுமே தவணை. அதனால், நீங்கள் 2 லட்சம் ரூபாய் டவுண் பேமென்ட் கட்டினால் மாதத்துக்கு 21,000 ரூபாய் தவணை வரும்!’’ என சிம்பிளாகச் சொன்னார் சேல்ஸ்மேன். விளம்பரத்தில் இருந்த சிம்பிள் திட்டம் இதுதானா?

டஸ்ட்டர் வாங்கலையோ டஸ்ட்டர்!

‘வழங்குகிறோம் ரெனோவின் 4 ஆண்டுக்கான அசத்திடும் கொண்டாட்டம்’ என்ற பெயரில், ‘டஸ்ட்டரை புக் செய்து, 71,000 ரூபாய் வரையிலான ஆதாரங்களைப் பெறுங்கள்’ என்ற விளம்பரத்தில் இடம் பிடித்திருந்த முதல் செல்போன் எண்ணுக்குத் தொடர்புகொண்டேன். ‘‘டஸ்ட்டர் வாங்கலாம்னு இருக்கேன். பேப்பர்ல ஆஃபர் போட்டிருந்தது” என்றவுடன்... ‘‘ஓ அதுவா சார்... அது டெல்லில இருந்து கொடுத்த விளம்பரம். இருங்க எங்க சேல்ஸ்பெர்ஸனை கால் பண்ணச் சொல்றேன்!’’ என்றார் மறுமுனையில் இருந்த பெண்.

இரண்டு நாட்கள் ஆன பிறகும் அவர்களிடம் இருந்து எந்த போன் அழைப்பும் வரவில்லை. அடுத்த டீலர் செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டபோது, அவர்களிடம் இருந்தும் அதே பதில். ‘‘எங்கள் சேல்ஸ்மேன் உங்களை அழைப்பார்!’’ என்றார்கள். அழைப்பு வரவில்லை. மூன்றாவது டீலரைத் தொடர்புகொண்டபோது, அவர் ‘‘டஸ்ட்டர் 110bhp மாடலின் விலை உயர்ந்த வேரியன்ட்டின் விலை 15.21 லட்சம் ரூபாய். இதில் 51,000 ரூபாய் தள்ளுபடி!” என்றார். மேலும் விவரங்கள் கேட்டபோது, ‘‘எங்க எக்ஸிக்யூட்டிவைக் கூப்பிடச் சொல்கிறேன்’’ என்றார். அவர் சொன்னபடியே எக்ஸிக்யூட்டிவ் அழைத்தார் ‘‘71,000 ரூபாய் டிஸ்கவுண்ட் பற்றிக் கேட்டபோது, ‘‘நாங்க 80,000 ரூபாய் வரைக்கும் 85bhp மாடலுக்கு டிஸ்கவுன்ட் தர்றோம். 110bhp மாடல் என்றால், 55,000 ரூபாய் டிஸ்கவுண்ட் மட்டுமே! இன்னைக்கே 50,000 ரூபாய் கொடுத்து புக் பண்ணீட்டீங்கன்னா, உங்களுக்குப் பிடிச்ச கலர் காரை அலாட் பண்ணிடுவோம்!’’ என்றார்.

சில மணி நேரங்கள் கழித்து மீண்டும் ரெனோ எக்ஸிக்யூட்டிவிடம் இருந்து போன் வந்தது. ‘‘சார், நீங்க கேட்ட மாதிரியே 71,000 ரூபாய் டிஸ்கவுண்ட் தர்றோம். ஆனா சீக்கிரம் 50,000 ரூபாய் செக் கொடுத்து காரை புக் பண்ணிடுங்க. சில்வர் கலர் காரை அலாட் பண்ணிடுறேன். எக்ஸ்ட்ராவா 5,000 ரூபாய் ஆக்சஸரிஸ்ல டிஸ்கவுண்ட் தர்றேன். ரெனோ ஃபைனான்ஸ்ல வாங்கினா 9.9 சதவிகிதம்தான் வட்டி. தவணை குறைவா இருக்கும்’’ என்றவரிடம், ‘‘வேறு டீலர்களிடமும் பேசிவிட்டு வருகிறேன்’’ என்று சொல்லி போனை வைத்தேன்.

இதன் மூலம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நீங்கள் உங்கள் முடிவை எந்த அளவுக்குத் தாமதப்படுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு டிஸ்கவுன்ட் கிடைக்கும் என்பதே!
9,999 கட்டுங்கள்!

‘9,999 ரூபாய் மட்டுமே செலுத்தி, உங்கள் பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய எர்டிகாவை ஓட்டிச் செல்லுங்கள்’ என்றது மாருதியின் விளம்பரம். போனில் தொடர்பு கொண்டு எர்டிகா பற்றி விசாரித்தேன். ‘‘9,999 ரூபாய் டவுன் பேமென்ட் கட்டி எர்டிகா வாங்குற ஸ்கீம்னா, உங்களோட பழைய கார் நான்கு லட்சம் ரூபாய்க்கு விலை போகணும் சார். மீதியை நீங்க தவணையில கட்டணும்!’’ என்றவர்களிடம், ‘‘2010 டீசல் இன்ஜின், டாப் எண்ட் மாடல் ஃபிகோ வைத்திருக்கிறேன். 65,000 கி.மீ ஓடியிருக்கிறது. இதை எந்த விலைக்கு எடுத்துக்கொள்வீர்கள்?’’ என்று கேட்டபோது, ‘‘ட்ரூ வேல்யூவில் கேட்டுவிட்டு வருகிறேன்’’ என்றார். மீண்டும் லைனில் வந்தவர், ‘‘ஃபோர்டு ஃபிகோவை 2.5 லட்ச ரூபாய்க்கு எடுத்துக்கொள்வோம். இருந்தாலும் இறுதி விலையை காரை நேரில் பார்த்துவிட்டுத்தான் சொல்ல முடியும்’’ என்றார்.

பழைய சிந்தனையைப் புதிதாக்கிக் கொள்ளுங்கள்...

‘LED டிவி இலவசம். மொத்தம் 80,000 ரூபாய் வரை பயன்கள்’ எனச் சொன்னது ஃபோர்டு ஃபிகோவின் விளம்பரம். டீலர்களுக்கு போன் அடித்தோம். ‘‘பேஸிக் மாடல்ல 15,000 ரூபாய்தான் டிஸ்கவுன்ட். டாப் மாடல் வாங்கினீங்கன்னா 30,000 கேஷ் டிஸ்கவுன்ட் உண்டு. டீசல் டாப் எண்ட் மாடலின் விலை 7.40 லட்சம் ரூபாய். இதை நீங்க வாங்கினீங்கன்னா 30,000 கேஷ் டிஸ்கவுன்ட்டும் LED டிவியும் கிடைக்கும். டிவி வேண்டாம் என்றால் 60,000 ரூபாய் கேஷ் டிஸ்கவுன்ட் வாங்கிக்கலாம்!’’ என்றார். ‘‘அப்போ 80,000 ரூபாய் வரை பயன் பெறுங்கள்னு விளம்பரம் போட்டிருக்காங்களே” எனக் கேட்டபோது, ‘‘அது டிவி விலையை வெச்சுப் போட்டுருக்காங்க சார்’’ என்றார்.
விளம்பரங்களைப் பார்க்கலாமே தவிர, அதை நம்பக் கூடாது என்பது புரிந்தது. போனில் பேசும்போதே இவ்வளவு தடாலடி மாற்றங்கள் என்றால், நேரில் சந்தித்து டீலை முடிக்கும்போது டீலர்கள் இன்னும் ஷாக் கொடுப்பார்கள் என்பது மட்டும் புரிந்தது!