ஜாவா...

பைக் ஆர்வலர்களை இணைக்கும் இரண்டெழுத்து மந்திரம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பே தயாரிப்பில் இருந்து நிறுத்தப்பட்ட இந்த ஜாவாவுக்கு இன்றுவரை பிறந்தநாள் கொண்டாடி வருகிறார்கள் ஜாவா ரசிகர்கள்.

ஜூலை 12... ஜாவா - யெஸ்டி பைக் தினம். இந்த தினத்தை சென்னையிலும் திருப்பூரிலும் விழா எடுத்துக் கொண்டாடினர் ஜாவாவின் ரசிகர்கள்.

ஜாவாவின் ஃப்ளாஷ்பேக்கைச் சொல்ல வேண்டும் என்றால், இது அடிப்படையில் செக்கோஸ்லேவியாவைச் சேர்ந்த நிறுவனம். இது, 1960-ம் ஆண்டு, கர்நாடக மாநிலம் மைசூரில், ‘ஐடியல் ஜாவா இந்தியா’ என்ற பெயரில் பைக் தயாரிக்க ஆரம்பித்தது. 1996-ம் ஆண்டு வரை சுமார் 36 ஆண்டுகள் நம் நாட்டில் 7 மாடல்கள் வரை பைக்குகளைத் தயாரித்து விற்பனை செய்தது. ‘Forever Bike - Forever Value’ என்ற இதன் தாரக மந்திரம் அப்போது ஊர் உலகம் முழுக்க ஒலித்தது. கொடுக்கும் பணத்துக்கும் தாண்டிய தரம் இதற்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.

சென்னையைச் சேர்ந்த ‘ரோரிங் ரைடர்ஸ்’ ஜாவா - யெஸ்டி பைக் கிளப்பில், முந்நூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த கிளப்பில் அனைத்து மாடல் ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகளும் உள்ளன. இன்ஜினீயர்கள், டாக்டர்கள், வக்கீல்கள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், அரசு அதிகாரிகள், மெக்கானிக்குகள், கல்லூரி மாணவர்கள் என பல்வேறு விதமான துறைகளின் சங்கமம் இந்த பைக் கிளப். கடந்த 13 ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த கிளப் உறுப்பினர்கள் ஜாவா தினத்தை தங்கள் பிறந்த நாளைவிட அதிக உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.

இந்த கிளப்பின் டாக்டர் என அழைக்கப்படும் மெக்கானிக் சேகர், ஜாவா பைக்குகளைப் பழுது பார்ப்பதில் 36 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ‘‘இந்த கிளப் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதில் இருக்கிறேன். இப்போது என்னையும் சேர்த்து நான்கு மெக்கானிக்குகள் உள்ளனர்!’’ என்றார் பெருமை பொங்க!

திருப்பூரில் இயங்கி வரும் ஜாவா பைக் கிளப் உறுப்பினர்கள், திருப்பூரில் இருந்து ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரை பேரணியாகச் சென்று ஹெல்மெட் விழிப்பு உணர்வுப் பிரசாரம் செய்தனர்.

“இந்த பைக்கை ஓட்டும்போது எனக்கு பத்து வயது குறைவதாக உணர்கிறேன்’’ என்ற இந்த கிளப்பின் தலைவர் சிவசுப்ரமணியத்துக்கு வயது 55. ‘நாங்கள் ஒன்றாகச் செயல்படுவதால், பைக்கில் ஏதாவது பிரச்னை என்றால், எங்களுக்குள் கலந்துகொண்டு பிரச்னையைச் சரி செய்துவிடுவோம். மேலும், ஸ்பேர் பார்ட்ஸ் தேவைப்பட்டாலும் அது கிடைக்கும் இடத்தை யாராவது ஒருவர் அறிந்து வைத்திருப்பார். அதனால் மெயின்டனன்ஸ் ஈஸிதான்!’’ என்றார்.

ஜாவாவுக்கு ஒரு ஓஹோ!