எனக்கும் என் கணவர் தினேஷ் குமாருக்கும் வாகனங்கள் பற்றிய ஆர்வம் அதிகம். இருவருமே அவ்வப்போது புதிதாக வரும் இரு சக்கர வாகனங்கள் பற்றி அப்டேட் செய்துகொள்வோம். என் கணவருக்கு யமஹா மீது பயங்கர க்ரேஸ்.

ஏன் யமஹா ஆல்ஃபா?

நான் ஏற்கெனவே பயன்படுத்திக் கொண்டிருந்த ஸ்கூட்டருக்குக் கொஞ்சம் வயசாகிவிட்டதால், அதைக் கொடுத்துவிட்டு புதிய ஸ்கூட்டர் வாங்கலாம் என்று தீர்மானித்தோம். ஸ்கூட்டர்களைப் பற்றி ஓரளவு தெரியும் என்பதால் ஹோண்டா டியோ, யமஹா ரே, ஆல்ஃபா ஆகிய மூன்றையும் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். எனக்கும் என் ஆசிரியர் பணிக்கும் ஏற்றதுபோல, புதிய ஸ்கூட்டரைத் தேர்வு செய்வதில் உறுதியாக இருந்தேன். ஹோண்டா டியோவை டெஸ்ட் டிரைவ் செய்தபோது, அதன் சீட்டிங் பொசிஷன் எனக்கு வசதியாக இல்லை. யமஹா ரே, தாழ்வாக இருப்பதுபோலத் தோன்றியது. மேலும், மைலேஜ் குறைவாகக் கிடைக்கிறது எனக் கேள்விப் பட்டேன். பின்பு, யமஹா ஆல்ஃபாவை ஓட்டிப் பார்க்கலாம் என ஷோரூம் சென்றேன்.

ஷோரூம் அனுபவம்

திருச்சி யமஹா டீலரான ‘SS யமஹா’ ஷோரூமுக்குச் சென்று, ஆல்ஃபாவைப் பற்றி விசாரித்தேன். டெஸ்ட் டிரைவ் செய்துபார்த்தபோது, என் உயரத்துக்கு ஏற்றதாக இருந்தது. மேலும் அதன் வசதிகள் மனநிறைவைத் தந்தன. ஆல்ஃபாவில் ஹேண்டில் க்ரிப் நன்றாக இருந்தது. எல்லாம் பிடித்து விடவே, புக் செய்தேன்.

எப்படி இருக்கிறது?

ஆல்ஃபாவின் பிக்-அப் சீராக இருக்கிறது. சஸ்பென்ஷனும் செம ஸ்மூத். அதனால், இதை ஓட்டும்போது எந்தவித அலுப்பும் தெரியவில்லை. இன்ஜினில் இருந்து சத்தம், அதிர்வு போன்ற பிரச்னைகள் இல்லை. என் ஓட்டுதல் முறைக்கு லிட்டருக்கு 53 கி.மீ வரை மைலேஜ் அளிக்கிறது ஆல்ஃபா. சீட்டுக்குக் கீழே உள்ள ஸ்டோரேஜ் ஸ்பேஸ், ஷாப்பிங் செல்ல உதவியாக இருக்கிறது. இதற்கு முன்பு பஜாஜ் மற்றும் டிவிஎஸ் ஸ்கூட்டர்களை ஓட்டிக் கொண்டிருந்தேன். அவற்றைவிட ஆல்ஃபாவை ஓட்டும்போது மிக செளகரியமாக உணர்கிறேன்.

ப்ளஸ்

ஆல்ஃபாவில் எனக்குப் பிடித்ததே இதன் ஸ்டைலிஷான வெளிப்புறத் தோற்றம்தான். ஹேண்டில் செய்வது சுலபம்; பொருட்களை வைக்க சீட்டுக்குக் கீழே தேவையான இடவசதி; சிறப்பான கையாளுமை; சுவிட்ச்களின் தரம்; பில்லியன் ரைடருக்கும் வசதியான சீட் என இதன் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

மைனஸ்

முன்பக்கம் பெரிய அளவில் இடவசதி இல்லை என்பது குறையாக உள்ளது. டிஸ்க் பிரேக் ஆப்ஷன் கொடுத்திருக்கலாம். கூடுதல் ஆக்சஸரீஸ் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. செல்போன் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வைக்க, முன்பக்கம் பாக்கெட் இல்லை. வழக்கமான ஸ்கூட் டர்களில் இருப்பதுபோல இல்லாமல், ஹோண்டா டியோவில் இருப்பதுபோல ஹெட் லைட் இன்னும் கொஞ்சம் ட்ரெண்டியாக இருந்திருக்கலாம்.

என் தீர்ப்பு

குடும்பத்துக்கு ஏற்ற ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்றால், என்னுடைய சாய்ஸ் யமஹா ஆல்ஃபா!