Published:Updated:

சென்னையில் பென்ட்லி!

சென்னையில் பென்ட்லி!

மோ.அருண் ரூப பிரசாந்த் 

 ##~##

க்ஸ¨ரி கார்களின் வரிசையில் ரோல்ஸ் ராய்ஸ் வரைக்கும் சென்னை சாலைகளில் பார்த்தாகிவிட்டது. அதில் லேட்டஸ்ட், பென்ட்லி. சென்னையில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு 'அட் த டோர் ஸ்டெப்’ டெஸ்ட் டிரைவ் தருவதற்காக டெல்லியிலுள்ள பென்ட்லி டீலரான எக்ஸ்க்ளூசிவ் மோட்டார்ஸ், பென்ட்லி கான்ட்டினென்ட்டல் ஃப்ளையிங் ஸ்பர் காரை, சமீபத்தில் நம் சிங்காரச் சென்னைக்குக் கொண்டு வந்திருந்தது.

இந்தியாவுக்கு விற்பனைக்கு என ஒதுக்கப்பட்ட கார்களே மொத்தம் நாற்பத்தைந்துதானாம். இந்த பென்ட்லியின் ஆரம்ப விலை

சென்னையில் பென்ட்லி!

2.24 கோடி.

பென்ட்லியைப் பொறுத்தவரை உலகில் உள்ள எல்லா பென்ட்லி கார்களும் ஒரே மாதிரி இருக்காது. எல்லா கார்களுமே ஏதாவது ஒரு வகையில் வித்தியாசப்படும். ஆர்டர் கொடுத்த பிறகுதான், கார் செய்வதற்கான முதல் போல்ட்டு நட்டை அவர்கள் கையில் எடுப்பார்கள். இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் மட்டும்தான் பென்ட்லிக்கான தொழிற்சாலை இருக்கிறது.

சென்னையில் பென்ட்லி!

ஃப்ளையிங் ஸ்பர் கார் மட்டும் நூறு கலரில் வருகின்றன. இதனுள் 5998 சிசி இன்ஜின் இடம் பிடித்திருக்கிறது. இதன் அதிகபட்ச சக்தி 552 bhp. டாப் ஸ்பீடு 318 கி.மீ.

உள்ளே இருக்கும் சீட்டுகள் அனைத்துமே மசாஜ் சீட்டுகள்தான். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு சாலையில் கப்பல் போவது போல் இருக்கும். ஆனால், உள்ளே உட்கார்ந்து இருப்பவர்களுக்கு விமானத்தின் காக் பிட்டில் உட்கார்ந்து இருப்பதுபோல் இருக்கும். இதில், ஒரு பட்டனை அழுத்தினால், கிரவுண்ட் கிளியரன்ஸ் 4 இன்ச் அதிமாகும். பென்ட்லி காரைப் பற்றி இத்தனை விவரங்கள் சேகரித்த பின்பும் கேட்கப்படாத ஒரு கேள்வி, உங்களிடம், என்னிடமும் மிச்சம் இருக்கிறது.

சென்னையில் பென்ட்லி!

'இந்த காரின் மைலேஜ் என்ன?’ எனும் கேள்விதான் அது!

வேண்டாம் பாஸ்..! அந்தக் கேள்வியை சாய்ஸில் விட்டு விடுவோம். சில கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருப்பதுதான் நல்லது!