Published:Updated:

'தோஸ்த்' துக்கில்லை வாஸ்து!

'தோஸ்த்' துக்கில்லை வாஸ்து!

>>சார்லஸ்  >>ச.இரா.ஸ்ரீதர் 

 ##~##

ஸ், ட்ரக்குகளில் மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்ட அசோக் லேலாண்ட் லோகோ, முதன்முறையாக லைட் கமர்ஷியல் வாகனத்தில் இடம் பெற்றுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு உருவான அசோக் லேலாண்டு - நிஸான் கூட்டணியின் முதல் வாகனமாக, மார்க்கெட்டுக்கு வந்துவிட்டது தோஸ்த்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

லைட் கமர்ஷியல் வாகன மார்க்கெட்டின் தாதாக்களான டாடா ஏஸ், பியாஜியோ அபே, மஹிந்திரா பொலிரோ பிக்-அப், மஹிந்திரா மேக்ஸிமோ ஆகிய வாகனங்களுடன் இது போட்டி போட இருக்கிறது. ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களும் வெகுவிரைவில் இந்த மார்க்கெட்டுக்குள் இறங்க இருக்கின்றன.

தண்ணீர் கேன் சப்ளை, காய்கறிகள் சப்ளை போன்றவற்றுக்கு இவை இப்போது வியாபாரிகளுக்குப் பயன்பட்டு வருகின்றன. இந்தத் தேவையை சிறப்பாகப் பூர்த்தி செய்து மார்க்கெட்டின் உச்சத்தைப் பிடித்தது டாடா ஏஸ். அதனைத் தொடர்ந்து வெளிவந்த மஹிந்திராவின் வாகனங்களும் மார்க்கெட்டில் ஹிட்! சின்ன நகரங்கள் மற்றும் கிராமங்களில் பொருட்கள் கொண்டு செல்ல இந்த வகை வாகனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதால், 'ரூரல்’ மார்க்கெட்டை அதிகம் நம்பி இப்போது விற்பனைக்கு வந்திருக்கிறது தோஸ்த்.

'தோஸ்த்' துக்கில்லை வாஸ்து!

வடிவமைப்பு

கார்கள் வடிவமைக்கும்போது என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்படுமோ, அவை அத்தனையையும் தோஸ்த்தை வடிவமைக்க அசோக் லேலாண்ட் கையாண்டுள்ளது. டாடா ஏஸ், மஹிந்திரா பொலிரோ, மேக்ஸிமோ வாகனங்களில் உள்ளதுபோல கிரில், தோஸ்த்தில் இல்லை. அதற்குப் பதில் ஃப்ளாட்டான முன் பக்கத்தில் நடுநாயகமாக கொலுவிருப்பது அசோக் லேலாண்டின் சின்னம். ஹெட் லைட்டினுள் ஹாக்கி பேட் வடிவமைப்பில் இண்டிகேட்டர் லைட் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதே ஹாக்கி பேட் 'எல்’ வடிவ டிசைன் ரியர் வியூ கண்ணாடிகளிலும், ஸ்டீயரிங்கிலும் தொடர்கிறது.

'தோஸ்த்' துக்கில்லை வாஸ்து!

பொதுவாக, இதுபோன்ற வாகனங்களில் கண்டு கொள்ளாமல் விடப்படும் ஒரு அம்சம், ஓட்டுனர் வசதி. இதில், அதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நகருக்குள் வளைத்து நெளித்து அதிகம் ஓட்டக்கூடிய இந்த வாகனத்துக்கு, மிக முக்கியத் தேவையான பவர் ஸ்டீயரிங் இதில் இருக்கிறது.

'தோஸ்த்' துக்கில்லை வாஸ்து!

வெயிலில், டிராஃபிக் நெருக்கடியில் சிக்கி டிரைவர்கள் எரிச்சலாவதைக் குறைக்க, குளு குளு ஏ.ஸி வசதியையும் இதில் கொடுத்திருக்கிறார்கள். டேஷ் போர்டு பிளாஸ்டிக் குவாலிட்டி எதிர்பார்த்ததைவிட சிறப்பாக உள்ளது. மல்ட்டி பர்ப்பஸ் வாகனங்களுக்கு இணையாக ஓட்டுனர் இருக்கை அதிக இடவசதியுடன் இருக்கிறது. முன் இருக்கைகளை முழுவதுமாக மடித்துவிட்டு டிரைவர்கள் படுத்து ஓய்வெடுக்கவும் வசதி செய்திருக்கிறார்கள்.

தோஸ்த்தில், அதிகபட்சமாக 1250 கிலோ எடை கொண்ட பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். இது மற்ற லைட் கமர்ஷியல் வாகனங்களைவிட அதிகம் (மஹிந்திரா மேக்ஸிமோ- 850 கிலோ, பொலிரோ- 1150 கிலோ, டாடா ஏஸ்-750 கிலோ). வெளிப்பக்க ஸ்டைலைக் கூட்ட இதில் அலாய் வீல்களும் உண்டு!

இன்ஜின்

3 சிலிண்டர், காமென் ரெயில் டீசல் இன்ஜெக்ஷன், 1478 சிசி இன்ஜினுடன் வெளிவருகிறது தோஸ்த். இதில் 5-ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அசோக் லேலாண்ட் நிறுவனமே தோஸ்த் வாகனத்துக்கென ஸ்பெஷலாகத் தயாரித்திருக்கும் இன்ஜின். இது அதிகபட்சமாக 3300 ஆர்பிஎம்-ல் 55 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. அதேபோல், 2400 ஆர்பிஎம்-ல் 15.29 kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது.

சாலைகளில்...

பவர் டெலிவரி சீராக இருக்கிறது. ஆனால், லைட் கமர்ஷியல் வாகனங்களுக்கே உரிய அதிர்வுகளும், இன்ஜின் சத்தமும் இருந்தாலும், போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது தோஸ்த்தில் இது குறைவாகவே இருக்கிறது. கார் ஓட்டுவது போன்று கியர் ஷிஃப்ட் ஸ்மூத்தாக இருக்கிறது. நகரில் குறைவான வேகத்தில் செல்லும் அளவுக்கு இன்ஜின் ட்யூன் செய்யப்பட்டு இருப்பதால், நான்காவது கியரில் 25 கி.மீ வேகத்தில்கூட பயணிக்க முடிகிறது. அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தைத் தொட முடிகிறது. கையாளுமை மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் ஸ்டீயரிங் வீல் மிகவும் பெரியதாக இருப்பதால், ட்ரக்கை ஓட்டுவது போன்று உணர்வு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. டர்னிங் சர்க்கிள் ரேடியஸ் குறைவாக இருப்பதால், நகருக்குள் யூ-டர்ன்களை சட்டென எடுக்கலாம்!

இது லிட்டருக்கு 12 கி.மீ வரை மைலேஜ் தரும் என எதிர்பார்க்கலாம்!

'தோஸ்த்' துக்கில்லை வாஸ்து!

''தோஸ்த்தைத் தொடர்ந்து நிஸானின் பிராண்டில் இரண்டு வாகனங்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதில் ஒன்று செவர்லே டவேரா, டொயோட்டா இனோவா கார்களுக்குப் போட்டியாக வெளிவர இருக்கிறது. தோஸ்த் உள்ளிட்ட அசோக் லேலாண்ட் - நிஸான் கூட்டணியில் உருவாகும் வாகனங்களை உற்பத்தி செய்ய பிரத்யேக ஷோ-ரூம்கள் திறக்கப்பட்டுள்ளன!'' என்றார் இந்துஜா ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் துணைத் தலைவர் டாக்டர் சுமத்ரன்.