துவங்கிவிட்டது பண்டிகை சீஸன். விழாக்காலம் என்றாலே புதுப் புது கார், பைக் படையெடுக்கும். இந்த ஆண்டும், புதிய அறிமுகங்களுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால், இம்முறை இந்திய ஆட்டோமொபைல் சந்தையை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் கார்கள் வெளிவரவிருப்பதுதான், ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கான விழாக் காலச் செய்தி.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, மாருதி சுஸூகி இந்தியாவுக்குள் அடியெடுத்து வைத்த போது, அதன் முதல் கார் மாருதி 800. ஜென், ஆல்ட்டோ என்று பல ரூபங்களை அது எடுத்தபோதும், 800சிசி இன்ஜின் என்பது மட்டும் மாறவில்லை. இன்றும் இந்தியாவின் டாப் செல்லர் இந்த இன்ஜின்கொண்ட ஆல்ட்டோதான். இந்த மார்க்கெட்டைப் பிடிக்க, ஹூண்டாய் அறிமுகப்படுத்திய இயான், ஆல்ட்டோவுக்கு சரியான போட்டியாக இல்லை. எப்போதும் முதல் இடத்தில் இருக்கும் ஆல்ட்டோவுக்கு, முதன்முறையாக பிரமாண்ட போட்டியாளராக க்விட் காரை அறிமுகப்படுத்துகிறது ரெனோ. இந்தியாவில் நான்கே ஆண்டுகள் அனுபவத்துடன் மாஸ் மார்க்கெட்டில் போட்டி காரை ரெனோ கொண்டுவருவது வரவேற்கத்தக்கது. '3 4 லட்சம் ரூபாய்க்குள் கார் வாங்க நினைப்பவர்கள், ரெனோ க்விட் வாங்கலாமா; இந்த காரில் என்ன ஸ்பெஷல்?’ க்விட் குறித்த முக்கியமான 15 தகவல்களை இந்த இதழில் கொடுத்திருக்கிறோம்.

4 மீட்டருக்குள் குவான்ட்டோ எனும் மினி எஸ்யுவி காரை, முதன்முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்திய நிறுவனம் மஹிந்திரா. இது, எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால், சோர்ந்துவிடாமல் அடுத்த 4 மீட்டர் காருக்குத் தயாராகிவிட்டது மஹிந்திரா. 'பொலேரோவின் அடிப்படையில் ஒரு மினி எஸ்யுவியைத் தயாரித்தால் எப்படி இருக்கும்’ இந்த சிந்தனையின் வடிவமே, ஜிஹிக்ஷி300. இந்த மாதம் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த கார், இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் மிக ஆர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர, புது வரவான ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மாருதி ஷிக்ராஸ் கார்களை, போட்டியாளர்களான மஹிந்திரா ஙீஹிக்ஷி500, ரெனோ டஸ்ட்டர், நிஸான் டெரானோ ஆகிய கார்களுடன் ஒப்பிட்டிருக்கிறோம். 15 லட்சம் ரூபாய்க்குள் ஒரு எஸ்யுவி வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருப்பவர்களுக்கு, இந்த ஒப்பீடு மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

பைக் மார்க்கெட்டைப் பொறுத்தவரை இந்த ஆண்டின் மிக முக்கியமான பைக், யமஹாவின் ஸி3. லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களுடன் வந்திருக்கும் யமஹாவின் இந்த பவர்ஃபுல் பைக் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அத்தனை விஷயங்களும் இந்த இதழில் இருக்கின்றன.

ரெனோ க்விட், ஃபிகோ ஆஸ்பயர், மஹிந்திரா ஜிஹிக்ஷி300, ஃபோர்டு எண்டேவர், ஹோண்டா ஜாஸ், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி ஷிக்ராஸ் யமஹா ஸி3, ஹோண்டா லிவோ, ஹோண்டா சிபி ஹார்னெட் 160 என பண்டிகைக் காலத்தைக் கொண்டாட வரிசை கட்டி நிற்கின்றன வாகனங்கள். இதில், உங்களுக்கான வாகனத்தைத் தேர்ந்தெடுக்க உதவும் வழிகாட்டியாக, இந்த இதழ் இருக்கும் என்று நம்புகிறேன்!