மினி மஹிந்திரா பொலேரோவின் பெயர் TUV3OO

எஸ்யுவி என்றாலே மஹிந்திராதான். ஸ்கார்ப்பியோ, பொலேரோ, குவான்ட்டோ, XUV500 என்று ‘ஓ’ வரிசையில் முடியும் எஸ்யுவி-களுக்கு நடுவே, புதிதாக வரவிருக்கிறது TUV300. இதை ‘த்ரீ டபுள் ஓ’ என்றுதான் உச்சரிக்க வேண்டுமாம். பீரங்கியின் உருவத்தை அடிப்படையாகக்கொண்டு ஹைட்ரோஃபார்ம்டு சேஸியில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இது, இப்போது இந்தியச் சாலைகளில் தீவிரமாக டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. மஹிந்திராவின் சக்கான் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட இருந்தாலும், சென்னையில் உள்ள மஹிந்திரா சிட்டி ரிஸர்ச் சென்டரில்தான் டிஸைன் செய்யப்பட்டுள்ளது TUV300 கார்.

குவான்ட்டோ கார்போல இதன் ஸ்பேர் வீல் பின்னால் ‘டெய்ல் கேட்’டில் வைக்கப்பட்டிருக்கிறது. குவான்ட்டோவில் இருப்பதுபோல A மற்றும் B பில்லர்கள் கொஞ்சம் குட்டையாக இல்லாமல் உயரமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், ஸ்போர்ட்டி லுக் தருவதோடு, இது வளைவுகளில் பார்வையை மறைக்காது. புதிய ‘எம்ஹாக்’ டர்போ டீசல் இன்ஜின்கொண்ட இது, 80bhp பவருடன், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வரவிருக்கிறது. இதில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உண்டு; ஆனால், இப்போதைக்கு ஆட்டோமேட்டிக் கிடையாது. மஹிந்திராவின் மற்ற எஸ்யுவிக்களில் பயன்படுத்தாத புதிய ஸ்டீயரிங் வீல், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்றவை இதில் இருக்குமாம். சீட்டிங்கைப் பொறுத்தவரை, மூன்று வரிசைகள் - கடைசி வரிசை ஜம்ப் சீட்டுகளாக இருக்கும். டாப் மாடலில் 17 இன்ச் கொண்ட சியட் டயர்களும், பேஸிக் மாடலில் 16 இன்ச் கொண்ட டயர்களும் இருக்கும்.

செப்டம்பர் 10-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆக இருக்கும் இதன் விலை, சுமார் 5.5 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கலாம்.

சென்னையில் ரானேவின் காற்றுப் பை தொழிற்சாலை!

ரானே TRW ஸ்டீயரிங் சிஸ்டம்ஸ் நிறுவனம், சென்னை சிங்கப்பெருமாள் கோயில் அருகே புதிய அதிநவீன ஏர்பேக் தொழிற்சாலையைத் தொடங்கியுள்ளது. இதன் துவக்க விழாவில் பேசிய ரானே TRW நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹரீஷ் லக்ஷ்மன், “தற்போது இந்தத் தொழிற்சாலையில் ஆண்டுக்கு ஐந்து லட்சம் காற்றுப் பைகளை உற்பத்தி செய்யும் வசதி உள்ளது. இது இரண்டு ஆண்டுகளில் பத்து லட்சமாக உயரலாம். மஹிந்திரா மற்றும் ஃபோர்டு ஆகிய நிறுவனங்களுக்கு காற்றுப் பைகளை சப்ளை செய்கிறோம். விரைவில் ரெனோ நிறுவனத்துக்கும் சப்ளை செய்யவிருக்கிறோம்!” என்றார். ஃபோர்டு, மஹிந்திரா, டாடா, ரெனோ, மாருதி சுஸூகி, அசோக் லேலாண்ட் ஆகிய நிறுவனங்களுக்கு சீட் பெல்ட்டுகளை உற்பத்தி செய்து அளிக்கும் இந்த நிறுவனம், தனது சீட் பெல்ட் தயாரிப்பில் 15 சதவிகிதத்தை பிரேசில், கொலம்பியா, வியட்னாம், தாய்லாந்து முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது.

- ஜெ.விக்னேஷ்

2 லட்ச ரூபாய்க்குள் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!

ராயல் என்ஃபீல்டு - புல்லட், தண்டர் பேர்டு பைக்குகளைத் தாண்டி, ஸ்டைலான பைக்குகள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகிறது. கடந்த ஆண்டு கஃபே ரேஸர் வகை கான்ட்டினென்ட்டல் ஜிடி அறிமுகமான நிலையில், அடுத்து அட்வென்ச்சர் பைக்கை அறிமுகப் படுத்துகிறது. ‘ஹிமாலயன்’ என்று பெயரிடப்பட்டு இருக்கும் இதன் ஸ்பை படங்களை, முதன்முதலில் வெளியிட்டது மோட்டார் விகடன்தான். மீண்டும் மோ.வி வாசகர் டோலி ஆஸ்டென் கேமராவில் சிக்கியிருக்கிறது ஹிமாலயன்.

ஹிமாலயன் அட்வென்ச்சர் டூரிங் பைக்கில், புதிய 410 சிசி சிலிண்டர் இன்ஜின் உள்ளது. கான்டினென்ட்டல் ஜிடியின் ஹெட்லைட்ஸ், முன்பக்க சஸ்பென்ஷன், எக்ஸாஸ்ட்டைக் கொண்டுள்ளது. ஆனால், அதில் இருந்த டபுள் சஸ்பென்ஷனுக்குப் பதிலாக, மோனோஷாக் சஸ்பென்ஷன் இதில் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்க டயர் பெரிதாக இருக்கிறது. இரண்டு வீல்களிலுமே டிஸ்க் பிரேக் உள்ளது.

இந்த ஆண்டு நவம்பரில், தீபாவளிக்கு முன்பாக விற்பனைக்கு வரவிருக்கிறது ஹிமாலயன். விலை 2.50 லட்சம் ரூபாயைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2 லட்சம் ரூபாய்க்குள் இந்த பைக்கை விற்பனைக்குக் கொண்டுவர ராயல் என்ஃபீல்டு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.