விற்பனைக்குத் தயாராகிவிட்டது, ரெனோவின் மினி காரான க்விட். ஆல்ட்டோ, இயான், நானோ, டட்ஸன் என குட்டி கார்கள் மோதும் மார்க்கெட்டுக்குள், க்விட் மூலம் நுழைகிறது ரெனோ. இந்த செக்மென்ட்டில் மாருதி, ஹூண்டாய் கார்களை வீழ்த்துவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால் க்விட், ஈஸியாக மார்க்கெட்டைப் பிடிக்கும் என மிகப் பெரிய நம்பிக்கையுடன் காத்திருக்கிறது ரெனோ.

3 - 4 லட்சம் ரூபாய்க்குள் விற்பனைக்கு வரவிருக்கும் க்விட், எப்படி இருக்கிறது? க்விட் பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 15 தகவல்கள்!

டிஸைன்

1.ஹேட்ச்பேக் விலைக்கு, ஒரு மினி க்ராஸ்ஓவர் காரையே தயாரிக்க முடியும் எனக் காட்டியிருக்கிறது ரெனோ. ஹேட்ச்பேக் கார்களின் கிரவுண்ட் கிளியரன்ஸ் பொதுவாக 170 மிமீ-க்குள் இருக்கும். ஆனால், க்விட்டின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மிமீ எனும்போதே இதன் உயரத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

2.முன்பக்க பானெட் கிரில்லைத் தாண்டி வரும் பம்ப்பர்கள், காருக்கு மிரட்டலான தோற்றத்தைத் தருகின்றன. இந்த உயரமான பம்ப்பரும், டுவின் க்ரீஸ் பானெட்டும் - இது பேபி டஸ்ட்டரோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஹெட்லைட், கறுப்பு வண்ண இன்சர்ட்டுகளுடன் சிம்பிளாக இருக்கிறது. ஏர் டேம் டிஸைன் கிரில்லின் டிஸைனோடு பொருந்திப் போகிறது.

காஸ்ட் கட்டிங்

3.காரை நெருங்கிச்சென்று பார்க்கும்போது, இது விலை குறைவான கார் என்பது புரிந்துவிடும். டஸ்ட்டரில் காட்டிய காஸ்ட் கட்டிங் வித்தைகளைவிட, க்விட்டில் கொஞ்சம் அதிகமாகவே காட்டியிருக்கிறது ரெனோ. முன்பக்க விண்ட் ஸ்கிரீனில் ஒற்றை வைப்பர், வெளியில் இருந்து மட்டுமே அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சைடு வியூ கண்ணாடிகள், வீல்களில் வெறும் 3 லாக்கிங் நட்டுகள், இழுக்கும் வசதி இல்லாத கதவு கைப்பிடிகள் என விலையைக் குறைக்கும் யுக்திகள் அதிகம்.

4.காரின் பிரமாண்டத்தைக் குறைப்பது, 13 இன்ச் டயர்கள்தான். சின்ன டயர்களால் மைலேஜ் அதிகம் கிடைக்கும் என்றாலும், இது காரின் ஒட்டுமொத்த டிஸைனோடு பொருந்தவில்லை.

உள்ளே!

5.பழுப்பு வண்ண ஒற்றை தீம் டேஷ் போர்டுடன் இருக்கிறது க்விட். சென்டர் கன்ஸோலில் செவ்வக வடிவத்தில் ஏ.சி வென்ட்டுகளும், டேஷ்போர்டின் இடது மற்றும் வலதுபக்கத்தில் வட்ட வடிவத்தில் ஏ.சி வென்ட்டுகளும் இடம் பெற்றிருக்கின்றன. முழுக்க முழுக்க டிஜிட்டல் டேஷ்போர்டு இடம் பிடித்திருக்கிறது. ஸ்பீடோ, ஓடோ, ட்ரிப், ஃப்யூல் மீட்டர்கள் அனைத்துமே டிஜிட்டல்தான்.

6.விலை உயர்ந்த மாடலில் 6 இன்ச் டச் ஸ்கிரீன் பொருத்தப்பட்டிருக்கிறது. யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ்போர்ட் வசதிகளும் உள்ளன. இந்த செக்மென்ட்டில் க்விட்டில் மட்டுமே இந்த வசதிகள் இருக்கின்றன. பவர் விண்டோஸ் பட்டன்கள் சென்டர் கன்ஸோலிலேயே வைக்கப்பட்டுள்ளன.

7.சென்டர் கன்ஸோலில் பெரிய ஸ்விட்ச்சுக்கான இடம் உள்ளது. இங்கேதான் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கான பட்டன் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். இதன் மூலம் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலுக்கு மேனுவல் லீவர் இருக்காது என்பது உறுதியாகி இருக்கிறது.

8.டஸ்ட்டரைப்போல இல்லாமல், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பொருட்கள் வைக்க காருக்குள் அதிக இடம் இருக்கிறது. 12 வோல்ட் பவர் சாக்கெட்டும் இடம் பெற்றுள்ளது.

பாதுகாப்பு?

9.ஆல்ட்டோ, நானோ, இயான், டட்ஸன் என்றதுமே, எல்லோருக்கும் இவை பாதுகாப்பான காராக இருக்குமா என்ற கேள்வி நிச்சயம் எழும். க்விட்டின் எடை வெறும் 670 கிலோ மட்டுமே! இது, ஆல்ட்டோ, இயான் ஆகிய கார்களைவிடக் குறைவு. நானோவைவிட வெறும் 35 கிலோ மட்டுமே அதிகம். அராய் சான்றிதழ்படி, இந்தியாவில் இது எல்லா க்ராஷ் டெஸ்ட்டிலுமே தேர்ச்சி பெற்றுவிடும் என்றாலும், ஐரோப்பிய சோதனைகளில் தேறுவது சந்தேகம்தான்.

10. 3.68 மீட்டர் நீளம்தான் என்றாலும், காருக்குள் உண்மையிலேயே அதிக இடவசதி இருக்கிறது. உயரமானவர்கள்கூட டிரைவர் சீட்டில் உட்கார்ந்து வசதியாக ஓட்ட முடியும். காருக்குள்ளே நுழைவதும் வெளியே வருவதும் ஈஸியாகவே இருக்கிறது. பின் இருக்கைகளைப் பொறுத்தவரை, முட்டியைக் கொஞ்சம் மடக்கி உட்கார வேண்டியிருக்கிறது என்பது மைனஸ்.

11.எந்தச் சின்ன ஹேட்ச்பேக் கார்களிலும் இல்லாத அளவுக்கு, 300 லிட்டர் கொள்ளளவு வசதிகொண்ட டிக்கியைக் கொண்டிருக்கிறது க்விட். இது, ஆல்ட்டோ 800 காரைவிட 123 லிட்டர் அதிகம்.

இன்ஜின்

12 .800சிசி, 3 சிலிண்டர் இன்ஜினைக்கொண்டிருக்கிறது க்விட். இது அதிகபட்சமாக 57bhp சக்தியை வெளிப்படுத்தும். இந்த இன்ஜினில், புதுமையான தொழில்நுட்பங்கள் எதுவும் இல்லை. ஆனால், ‘அதிகப்படியான மைலேஜ் தரும் காராக இது இருக்கும்’ என்று சொல்கிறது ரெனோ. ‘காரின் எடையும் குறைவு என்பதால், லிட்டருக்கு 25 கி.மீ மைலேஜ் தரும் காராக இது இருக்கும்’ என்கிறது ரெனோ.

13. ஹூண்டாய் இயானைப் போலவே க்விட்டிலும் 1 லிட்டர் இன்ஜினை அறிமுகப்படுத்த இருக்கிறது க்விட். ஆனால், இது அடுத்த ஆண்டுதான் விற்பனைக்கு வரும்.

14. க்விட் காரின் தயாரிப்புக்காக மட்டும் 3,000 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறது ரெனோ. க்விட் காருக்கான இன்ஜின், கியர்பாக்ஸ், சஸ்பென்ஷன், பாடி என அனைத்துமே இந்தியாவில், இந்திய சப்ளையர்களால் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இன்ஜின் நாக்(Knock) சென்ஸார், கனெக்ட்டிங் ராடு, இன்ஜெக்டர்கள் ஆகியவை மட்டுமே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

15. 3 - 4 லட்சம் ரூபாயில் அதிக இடவசதிகொண்ட, ஸ்டைலான பேபி டஸ்ட்டரைக் கொடுத்து, அனைவரின் பார்வையையும் திருப்பியிருக்கிறது ரெனோ. பெர்ஃபாமென்ஸும், மைலேஜும் ரெனோ சொல்வதை உண்மையாக்கினால், க்விட் இந்தியாவின் நம்பர் ஒன் காராக உயரும் என்பதில் சந்தேகம் இல்லை!