இந்தியாவின் செல்லிங் செக்மென்ட், இப்போது மினி எஸ்யுவிக்கள்தான். முதன்முதலில் 15 லட்சம் ரூபாய்க்குள் ஒரு மிரட்டலான எஸ்யுவி காரை வாங்கலாம் என நம்ப வைத்தது மஹிந்திரா. XUV500 என்கிற பெயருடன் மஹிந்திரா அறிமுகப்படுத்திய 7 சீட்டர், முழுமையான எஸ்யுவி கார். விலை குறைவான இந்த 7 சீட்டர் காருக்கு அமோக வரவேற்பு. சட்டென மார்க்கெட்டைப் பிடித்தது. 5 சீட்டர்தான்; ஆனால், விலை 9 - 13 லட்சம் ரூபாய்க்குள் இருந்ததால், டஸ்ட்டர் விறுவிறுவென முதல் இடத்துக்கு முன்னேறியது. டஸ்ட்டரின் வருகை, மினி எஸ்யுவி கார்களுக்கு இந்தியாவில் மிகப் பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது என்பதை போட்டியாளர்களுக்கு உணர்த்தியது. ரெனோவின் கூட்டாளியான நிஸானும் டஸ்ட்டரின் வெற்றியைப் பகிர்ந்துகொள்ள விரும்பியதால், ஸ்டைலில் மட்டும் சின்னச் சின்ன வித்தியாசங்களைக் காட்டி, விலையைக் கொஞ்சம் லைட்டாகக் கூட்டி, டெரானோ காரை விற்பனைக்குக் கொண்டு வந்தது. இந்தியாவில் நிஸானை வாழ வைத்துக்கொண்டிருக்கும் கார்,

இப்போது டெரானோதான். டஸ்ட்டர், டெரானோ ஆகிய கார்களின் வெற்றி, இந்தியாவின் மார்க்கெட் லீடர்களான மாருதி, ஹூண்டாயை அசைத்தது. இரண்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது மினி க்ராஸ்ஓவர்/எஸ்யுவி கார்களை கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் வெளியிட்டிருக்கின்றன. மாருதியின் S-க்ராஸ், பெயரில் இருப்பதுபோலவே க்ராஸ்ஓவர் கார். ஹூண்டாய், க்ரெட்டாவை மினி எஸ்யுவி என அடையாளப்படுத்துகிறது. இங்கே போட்டி போட இருக்கும் கார்களில் XUV500 மட்டுமே முழுமையான 7 சீட்டர் எஸ்யுவி. மற்ற கார்கள் அனைத்துமே 5 சீட்டர் மினி எஸ்யுவி கார்கள். 7 சீட்டர் கார் என்பதால், XUV500 மற்ற கார்களைவிட 2 லட்சம் ரூபாய் அதிகம். டஸ்ட்டர், டெரானோ, S-க்ராஸ், க்ரெட்டா ஆகிய நான்கு கார்களுமே 10 - 17 லட்சம் ரூபாய்க்குள் போட்டி போடுகின்றன.

இந்த ஐந்து கார்களில், எந்த காரை வாங்கலாம்? எதில் எது பெஸ்ட்? பெர்ஃபாமென்ஸ் எப்படி? மைலேஜ் எவ்வளவு? அத்தனை கேள்விகளுக்கும் விடை இங்கே...

டிஸைன்

ஐந்து கார்களில் லேட்டஸ்ட் அறிமுகம், மாருதியின் S-க்ராஸ். அதனால், அதில் இருந்தே ஆரம்பிப்போம். S-க்ராஸ் காரை எஸ்யுவி என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். அதனால், கொஞ்சம் சேஃப் ஆக க்ராஸ்ஓவர் என்று சொல்லிவிட்டது மாருதி. அது மட்டுமல்லாமல் ஆல்ட்டோ, ஸ்விஃப்ட், டிஸையர் என 10 லட்சம் ரூபாய்க்குள் கார் வாங்க வேண்டும் என்றால், மாருதியின் ஷோரூமைத் தேடிவருகிறார்கள். 10 லட்சம் ரூபாய்க்கு மேல் என்றால், மாருதியின் பக்கம் வராமல் ரெனோ, ஃபோக்ஸ்வாகன், டொயோட்டா, ஹோண்டா என வழி மாறிவிடுகிறார்கள் என்பதால், புது வியூகம் அமைத்திருக்கிறது மாருதி. அதன்படி S-க்ராஸ் உள்ளிட்ட, இனிமேல் விற்பனைக்கு வரப்போகும் ப்ரீமியம் கார்கள் அனைத்தும் நெக்ஸா ஷோரூம்களில்தான் விற்பனைக்கு வரும் என அறிவித்திருக்கிறது மாருதி. முதல்கட்டமாக நெக்ஸா ஷோரூம்கள் சென்னை மற்றும் கோவையில் திறக்கப்பட்டுள்ளன. ஓகே. இப்போது காருக்கு வருவோம்.

ஐந்து கார்களில் பார்ப்பதற்கு மிகவும் சின்ன காராக இருக்கிறது மாருதியின் S-க்ராஸ். முன்பக்கத்தில் இருந்து பார்த்தால், ஒரு சின்ன ஹேட்ச்பேக் கார் போலவே இருக்கிறது. மற்ற கார்களுடன் போட்டி போடும் அளவுக்குப் பிரமாண்டமான காராக S-க்ராஸ் இல்லை. முன்பக்க கிரில்லுக்கு அடியில் வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு வண்ண பிளாஸ்டிக் கிளாடிங்குகள், கொஞ்சம் பெரிய கார் போன்ற எஃபெக்ட்டைத் தர முயற்சி செய்திருக்கிறது. அவ்வளவுதான்.

ஹூண்டாயின் க்ரெட்டா, ஒரு வழக்கமான எஸ்யுவி எப்படி இருக்க வேண்டுமோ, அதற்கு ஏற்ற வடிவத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பானெட் உயரமாக இருப்பதுடன் C-பில்லர் தடிமனாகவும் இருப்பது, காருக்கு ஒரு கெத்தான தோற்றத்தைத் தருகிறது. ஹூண்டாயின் பெரிய எஸ்யுவி காரான சான்டாஃபீ காரை அடிப்படையாகக்கொண்டே க்ரெட்டா வடிவமைக்கப்பட்டிருப்பதால், எஸ்யுவி காருக்கான குணாதிசயங்களோடு இருக்கிறது. முன்பக்க பம்ப்பர், நீளமான க்ரோம் பட்டைகள் கொண்ட க்ரில், கறுப்பு வண்ணத்துடன் கூடிய
A பில்லர், அதனுடன் இணைந்திருக்கும் பெரிய விண்ட் ஸ்கிரீன் என க்ரெட்டாவின் டிஸைனுக்கு அதிகம் உழைத்திருக்கிறது ஹூண்டாய். ஆனால், காரின் பின்பக்கம் மிகவும் சிம்பிளாக இருக்கிறது. எலீட் i20 காரில் காட்டியது போன்ற எந்த டிஸைன் ஜாலங்களும் பின்பக்கத்தில் இல்லை.

ஐந்து கார்களில் நீளமான, அகலமான, உயரமான கார், மஹிந்திரா XUV500. 4.6 மீட்டர் நீளம், 1.9 மீட்டர் அகலம், 1.8 மீட்டர் உயரம் என பிரமாண்டமாக இருக்கிறது XUV. S-க்ராஸ், க்ரெட்டா, டஸ்ட்டர், டெரானோ ஆகிய நான்கு கார்களுமே கிட்டத்தட்ட ஒரே நீள, அகல, உயர அளவுகளைக் கொண்டிருக்கின்றன. 4.3 மீட்டர் நீளம், 1.8 மீட்டர் அகலம், 1.6 மீட்டர் உயரம் என்பதுதான் இந்த கார்களின் சராசரி. உயரமான பானெட், சிறுத்தையின் நகக் கீறல்கள் போன்ற க்ரோம் க்ரில், நீளமான புதிய ஹெட்லைட்ஸ், Z வடிவ LED விளக்குகள் என மிகவும் மிரட்டலாக டிஸைன் செய்யப்பட்டிருக்கும் இந்திய எஸ்யுவி XUV500.

XUV காரைப் பார்த்துவிட்டு டஸ்ட்டரையும், அதன் இரட்டையரான டெரானோவையும் பார்த்தால், கொஞ்சம் ‘சப்’ என்றுதான் இருக்கும். ஆனால், மாருதி S-க்ராஸ் போல மோசமாக இருக்காது. மினி எஸ்யுவி காருக்கு இந்தியாவில் இவைதான் பெஞ்ச்மார்க். ஓரளவுக்கு உயரமான பானெட், நீளமான ஹெட்லைட்ஸ், பெரிய எஸ்யுவி கார் போன்று தோற்றமளிக்க வைக்கும் க்ரில், அதன் அடிப்பகுதியில் இடம் பிடித்திருக்கும் பிளாஸ்டிக் கிளாடிங் என மினி எஸ்யுவி என்று சொல்லும் அளவுக்கு இருக்கின்றன. டஸ்ட்டரைவிட, டெரானோவின் டிஸைன் எல்லாருக்குமே பிடிக்கும். டஸ்ட்டர் போல வெறுமனே இல்லாமல், பானெட் மீது இடம்பிடித்திருக்கும் இரட்டைக் கோடுகள், பக்கவாட்டில் இடம்பெற்றிருக்கும் நீளமான கோடு, வித்தியாசமான கிரில், அழகிய அலாய் வீல்கள் என டஸ்ட்டரைவிட தோற்றத்தில் சிறப்பாக இருக்கிறது டெரானோ. ஆனால், விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக, டஸ்ட்டர் மற்றும் டெரானோவில் காஸ்ட் கட்டிங் விஷயங்கள் அதிகம். 16 லட்சம் ரூபாய்க்குள் விற்கப்படும் இந்த கார்களில், இழுக்கும் வகையிலான கதவுக் கைப்பிடிகள் இல்லை. சிறிய கார்களில் இருப்பதுபோல மேலே தூக்கும்வகையில் கைப்பிடிகள் வைக்கப்பட்டுள்ளன.

ஐந்து கார்களுமே பில்டு குவாலிட்டியில் சுமார் ரகம்தான். ஐந்தில் மாருதி S-க்ராஸ் காரும், ஹூண்டாய் க்ரெட்டாவும் பில்டு குவாலிட்டியில் ஓரளவுக்குச் சிறப்பாக இருக்கின்றன. ஐந்து கார்களில் ரெனோ டஸ்ட்டர் மற்றும் மஹிந்திரா XUV இரண்டு கார்களில் மட்டுமே 4-வீல் டிரைவ் ஆப்ஷன் இருக்கிறது. மற்ற கார்கள் அனைத்துமே 2 வீல் டிரைவ் சிஸ்டத்தை மட்டுமே கொண்டவை. நிஸான் டெரானோவின் விலை குறைந்த மாடலைத் தவிர, மற்ற அனைத்து கார்களின் வேரியன்ட்டுகளிலுமே ஏபிஎஸ் பிரேக்ஸ் வசதி உண்டு. டஸ்ட்டர் மற்றும் டெரானோவின் விலை குறைந்த வேரியன்ட்டுகளில்கூட ஒரு காற்றுப் பை உண்டு. விலை உயர்ந்த வேரியன்ட்டுகளில் இரண்டு காற்றுப் பைகள் உள்ளன. ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மஹிந்திரா XUV 500 கார்களின் விலை உயர்ந்த மாடல்களில் 6 காற்றுப் பைகள் உள்ளன. ஹூண்டாய் க்ரெட்டா, XUV மற்றும் டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ் மாடல்களில், கூடுதல் பாதுகாப்பு வசதியாக எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் சிஸ்டமும் உள்ளது.

உள்பக்கம்

ஹேட்ச்பேக் கார் வடிவமைப்பை உறுதி செய்யும் வகையில், வழக்கமான எஸ்யுவி கார்களில் ஏறுவதுபோன்று உயரமாக இல்லாமல், காருக்குள் நுழைவதுபோல கொஞ்சம் தலையைக் குனிந்து S-க்ராஸ் காருக்குள் ஏற வேண்டியிருக்கிறது. காருக்குள் சீட்டிங் பொசிஷனும் ஹேட்ச்பேக் காரையே நினைவுபடுத்துகிறது. கேபின் குவாலிட்டி சிறப்பாகவே உள்ளது. க்ளோவ்பாக்ஸ் மேலே உள்ள டெக் ஷர் ஃப்னிஷ் ஸ்போர்ட்டியாக இருப்பதோடு, அலுமினிய ஃபினிஷ் காருக்குள் லைவ்லினெஸ்ஸைக் கூட்டுகிறது. நீல வண்ண ரிம்முக்குள் இருக்கும் டயல்களும் உள்பக்கத்தை கலர்ஃபுல்லாக மாற்றுகின்றன. வழக்கமான மாருதி சுஸூகி கார்களில் இருக்கும் டேஷ்போர்டுதான் என்றாலும், ஹை ரெசல்யூஷன் கொண்ட டச் ஸ்க்ரீன், டேஷ்போர்டின் தரத்தைக் கூட்டுகிறது. ஆனால், பவர் விண்டோஸ் ஸ்விட்ச்சுகளும், கண்ணாடி கன்ட்ரோல்களும் விலை குறைவான மாருதி கார்களில் இருந்து S-க்ராஸுக்கு இடம் மாறியிருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டாவின் கேபின் இம்ப்ரஸிவ்வாக இருக்கிறது. இரட்டை வண்ண டேஷ்போர்டு காருக்குள் ரிச்னெஸ்ஸைக் கூட்டுகிறது. டிரைவர் சீட்டில் உட்கார்ந்தால், எல்லா கன்ட்ரோல்களுமே கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதோடு, சென்டர் கன்ஸோலில் இடம்பிடித்திருக்கும் ஸ்கிரீன் உயரமாக இருப்பது, டிரைவரும் பார்ப்பதற்கு வசதியாக இருக்கிறது.

வெளியே மட்டும் XUV மிரட்டலாக இல்லை. காருக்குள் உட்கார்ந்தாலும் மிரட்டலாகவே இருக்கிறது. உயரமான இருக்கைகள், வெளிச்சாலையை முழுவதும் பார்த்து ஓட்டக்கூடிய சீட்டிங் பொசிஷன் என்பதால், டிரைவர் சீட்டில் உட்கார்ந்ததுமே ஒரு எக்ஸ்ட்ரா எடை தலையில் கூடுகிறது. இந்த ஃபீலுக்காகவேதான் பலரும் XUV காரை வாங்குகிறார்கள் என்பது அனுபவத்தில் உணர்ந்த உண்மை. பழைய XUV காரைவிட ஃபிட் அண்டு ஃபினிஷ் சிறப்பாக இருந்தாலும், இன்னமும் பெஸ்ட்டாக இல்லை.

ரெனோ டஸ்ட்டர், நிஸான் டெரானோவின் கேபினுக்கும் இது பொருந்தும். மேலே தூக்கும்படியான கைப்பிடிகளும், மேனுவல் ஏ.சி கன்ட்ரோல்களும் 10 ஆண்டுகளுக்கு முன்பாக வந்த கார்களில் உள்ளதுபோல இருக்கிறது. புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் டச் ஸ்கிரீன், சென்டர் கன்ஸோலில் மிகவும் தாழ்வாக வைக்கப்பட்டிருப்பதோடு, தெருமுனைக் கடையில் போய் ஃபிட் செய்ததுபோல இருக்கிறது. நிஸான் டெரானோவிலும் இதே கதைதான். மேலும், இரண்டு கார்களிலும் தண்ணீர் பாட்டில், பேப்பர், கப் போன்ற பொருட்கள் வைப்பதற்கான இடங்கள் மிக மிகக் குறைவாக உள்ளன.

இடவசதி

ஐந்து கார்களில், க்ரெட்டாவில்தான் முன்பக்க இடவசதி மிகச் சிறப்பாக உள்ளது. சீட்டுகள் மிகவும் பெரிதாக இருப்பதோடு, குஷனிங் சரியாக செய்யப்பட்டிருக்கிறது. மாருதியின் லெதர் இருக்கைகளிலும் இதே கம்ஃபர்ட் இருக்கிறது. கூடுதலாக ஸ்டீயரிங்கை முன்னும் பின்னும்; மேலும் கீழும் அட்ஜஸ்ட் செய்யும் வசதி இருப்பதால், S-க்ராஸ் காரில் வசதியான டிரைவிங் பொசிஷனைத் தேர்ந்தெடுக்க முடிகிறது. இதே வசதி XUV 500 காரிலும் உள்ளது. ஆனால், ஸ்டீயரிங் மிகவும் உயரமாக வைக்கப்பட்டுள்ளதால், எவ்வளவு குறைந்த லெவல் அட்ஜஸ்ட்மென்ட்டில் வைத்தாலும் உயரமாகவே இருக்கிறது. XUV காரிலும் முன்பக்க இடவசதி அதிகமாக இருந்தாலும் கதவுகளில் இருந்துவரும் பிளாஸ்டிக்குகள் கை, கால்களுக்கு இடையூறாக இருக்கிறது. டஸ்ட்டரிலும், டெரானோவிலும் இருக்கும் ஃப்ளாட்டான முன்பக்க இருக்கைகள் சொகுசாக இல்லை என்றாலும் வசதியாக இருக்கிறது. ஆனால், இரண்டு கார்களிலுமே நெடுஞ்சாலையில் ஓட்டும்போது இடதுகாலை ரெஸ்ட் செய்துகொள்ள வசதியாக டெட் பெடல் இல்லை. ஸ்டீயரிங்கின் உயரத்தைத்தான் அட்ஜஸ்ட் செய்ய முடியும் என்றாலும், அதுவுமே அட்ஜஸ்ட் செய்வதற்குக் கொஞ்சம் சிக்கலாகத்தான் இருக்கிறது.

பின்னிருக்கை இடவசதியைப் பொறுத்தவரை நீளமான காரான XUVதான் டாப். நடுவரிசை இருக்கைகளில் மூன்று பேர் வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியும். XUV காரில் மட்டுமே மூன்றாவது வரிசையில் இருக்கைகள் உள்ளன. இங்கே இடவசதி தாராளம் இல்லை என்றாலும், இரண்டு பேர் உட்கார முடியும்.

மற்ற நான்கு கார்களில், பின்னிருக்கை இடவசதியில் முதல் இடத்தில் இருப்பது ஹூண்டாய் க்ரெட்டா. ஆனால், இதில் இரண்டு பேர் மட்டுமே வசதியாக, சொகுசாக உட்கார்ந்து பயணிக்க முடியும். சீட்டுக்கு மேல் இருந்து வரும் நடுப்பக்க பேக் ரெஸ்ட், மூன்றாவது நபருக்கான வசதியான சீட்டிங் பொசிஷனை காலி செய்துவிடுகிறது. மேலும், கண்ணாடிகளும் உயரமாக இருப்பதால், ஒரு எஸ்யுவிக்குள் உட்கார்ந்து பயணிக்கும் ஃபீல் க்ரெட்டாவில் கிடைக்கவில்லை.
பின்னிருக்கை உயரமாக இருப்பதால், S-க்ராஸில் நல்ல வியூ கிடைக்கிறது. பின் இருக்கையில் கால்களை நீட்டி மடக்கி உட்கார இடம் இருப்பதோடு, சீட்டுகளைச் சாய்க்கவும் முடிகிறது. ஆனால், மூன்று பேர் உட்கார இடம் இல்லை. காருக்குள் ஹெட்ரூம் குறைவாகவே இருக்கிறது. பின்பக்க இடவசதியில் டெரானோவும், டஸ்ட்டரும் சிறப்பாகவே இருக்கின்றன. பின்னிருக்கைகள் உயரமாக இருப்பதால், ஒரு எஸ்யுவி காருக்குள் உட்கார்ந்திருக்கும் ஃபீல் கிடைக்கிறது. ஆனால், இரண்டு கார்களிலுமே பவர் விண்டோஸ் ஸ்விட்ச்்சுகள் கதவில் முழங்கையை வைக்கும் இடத்தில் இருப்பது எரிச்சலைக் கிளப்புகிறது. டெரானோவில் இடம் பிடித்திருக்கும் பின் பக்க ஏ.சி வென்ட்டுகள், பின்னிருக்கையில் மூன்று பேர் வசதியாக உட்கார முடியாமல் செய்துவிடுகிறது. இந்தப் பின்பக்க ஏ.சி வென்ட் தொல்லை, டஸ்ட்டரில் இல்லை.

ஐந்து பேர் காருக்குள் உட்கார்ந்த பிறகு, டிக்கியில் பொருட்கள் வைக்க எந்த காரில் அதிக இடம் இருக்கிறது என்று பார்த்தால், முதலில் வந்து நிற்பது டஸ்ட்டரும், டெரானோவும்தான். XUV 500 காரில்தான் மிகக் குறைவான இடவசதி இருக்கிறது. ஆனால், மூன்றாவது வரிசை இருக்கைகளை மடக்கிவிட்டால், பொருட்கள் வைக்க அதிக இடம் கிடைத்துவிடுகிறது. XUV, S-க்ராஸ் தவிர்த்து மற்ற மூன்று கார்களிலுமே இரண்டாவது வரிசை இருக்கைகளை முழுவதுமாக மடக்கிக்கொள்ள முடியும். XUV, S-க்ராஸில் மட்டுமே 60:40 ஸ்பிளிட் வசதி உள்ளது. S-க்ராஸின் டிக்கி கதவு மிகவும் தாழ்வாக இருப்பதால், பொருட்களை ஈஸியாக வைக்க முடியும்.

சிறப்பம்சங்கள்

எல்லா கார்களின் அதிக விலைகொண்ட வேரியன்ட்டுகளுடன் ஒப்பிடும்போது, XUV W10 மாடலில் சன்ரூஃப் மற்றும் ஆட்டோமேட்டிக் சீட் அட்ஜஸ்ட் வசதி இருக்கிறது. ஆனால், இதன் விலை 20 லட்ச ரூபாயைத் தொட்டுவிடுவதால், ஒப்பீட்டுக்கு W8 மாடலை எடுத்துக்கொள்வோம்.
எல்லா கார்களிலுமே ஆக்ஸ் இன் போர்ட், யுஎஸ்பி போர்ட், ப்ளூ-டூத் வசதி உள்ளன. க்ரெட்டாவில் கூடுதலாக 1 GB மியூஸிக் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. ஐந்து கார்களில் டெரானோவில் மட்டுமே CD ப்ளேயர் வசதி இருக்கிறது. அதே சமயம், டெரானோவில் மட்டுமே ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் வசதி இல்லை. மேலும், டச் ஸ்கிரீன் நேவிகேஷன் வசதியும் இல்லை. XUV மற்றும் S-க்ராஸில் வாய்ஸ் கமாண்ட் வசதிகள் உள்ளன. ஆனால், இதைச் செயல்படுத்துவதற்குள் காரை ஓட்ட வேண்டும் எண்ணமே போய்விடுகிறது. க்ரெட்டா மற்றும் டஸ்ட்டரில் இடம் பிடித்திருக்கும் டச் ஸ்கிரீனில் அதிகமாக க்ளார் அடிக்கிறது. இதனால், அதில் தெரியும் எண்களையும், காட்சிகளையும் சரியாகப் பார்க்க முடியவில்லை. மாருதியின் S-க்ராஸ் காரின் ஸ்கிரீன்தான் க்ளேர் இல்லாமல் பளிச்சென இருக்கிறது.

டஸ்ட்டர் மற்றும் டெரானோவில் வெறும் மேனுவல் ஏ.சி மட்டுமே இருக்க, மற்ற மூன்று கார்களிலுமே ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி வசதி உள்ளன. க்ரெட்டா, டெரானோ மற்றும் XUV 500 கார்களில், பின்பக்கமும் ஏ.சி வென்ட் இடம்பிடித்துள்ளன. எல்லா கார்களின் விலை உயர்ந்த வேரியன்ட்டுகளிலுமே லெதர் இருக்கைகள் இருக்கின்றன. டஸ்ட்டரில் மட்டுமே இது ஆப்ஷனல் வசதியாக இருக்கிறது.

XUV 500, டெரானோ, டஸ்ட்டர் ஆகிய கார்களில் ரிவர்ஸ் சென்ஸார்கள் மட்டுமே உள்ளன. க்ரெட்டா மற்றும் S-க்ராஸ் ஆகிய கார்களில் ரிவர்ஸ் கேமராக்கள் இடம்பிடித்துள்ளன. கூடுதலாக, கண்ணாடிகளை ஆட்டோமேட்டிக்காக டிம் செய்யும் வசதியும் இடம்பெற்றுள்ளது. S-க்ராஸ் மற்றும் XUV 500 கார்களில் மட்டுமே மழையை சென்ஸ் செய்யும் சென்ஸார்களும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸும் இடம்பிடித்துள்ளன.

இன்ஜின், கியர்பாக்ஸ் மற்றும் பெர்ஃபாமென்ஸ்

ஐந்து கார்களுமே 4 சிலிண்டர் டீசல் இன்ஜின், காமென் ரெயில் மற்றும் வேரியபிள் ஜியோமெட்ரி டர்போ சார்ஜர்களைக் கொண்டிருப்பவை. மாருதியில் இடம் பிடித்திருக்கும் இன்ஜின் மட்டுமே இந்தியாவுக்குப் புது இன்ஜின். இவ்வளவு காலமும் ஃபியட்டின் 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜினுடன் ஓட்டிக்கொண்டிருந்த மாருதி, இந்த முறை ஃபியட்டின் 1.6 லிட்டர் டீசல் இன்ஜினை கடன் வாங்கியிருக்கிறது (மாருதி இதை DDiS320 என அழைக்கிறது). வெர்னா, எலான்ட்ரா கார்களில் பழக்கமான அதே 1.6 லிட்டர் டீசல் இன்ஜின்தான் க்ரெட்டாவில் இடம் பிடித்திருக்கிறது. டஸ்ட்டர் மற்றும் டெரானோவில் இருப்பது நிஸான் மற்றும் ரெனோவின் எல்லா கார்களிலுமே இடம்பிடித்திருக்கும் 1.5 லிட்டர் K9K இன்ஜின். மஹிந்திராவில் மட்டுமே மிகப் பெரிய 2.2 லிட்டர் ‘எம்ஹாக்’ இன்ஜின் இடம்பெற்றுள்ளது. ஐந்து கார்களிலுமே 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளன.

மாருதியின் S-க்ராஸ் இன்ஜின் அதிகபட்சமாக 118bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. இதன் அதிகபட்ச டார்க் 32.6kgm. இது பெரிய இன்ஜினைக்கொண்ட XUV 500 காரின் 33.6kgm டார்க்குக்கு அடுத்தபடியாக உள்ளது. மேலும், S-க்ராஸ் காரின் எடை வெறும் 1,275 கிலோ மட்டுமே! இதனால் டார்க் to வெயிட் ரேஷியோவில் முதல் இடத்தில் இருக்கிறது S-க்ராஸ். ஆனால், டெக்னிக்கலாக இவ்வளவு ஸ்ட்ராங்காக இருந்தும் பெர்ஃபாமென்ஸ் ஸ்ட்ராங்காக இல்லை.

1,800 ஆர்பிஎம் வரை இருக்கும் டர்போ லேக், எஸ்-க்ராஸை ஆட்டிப் படைக்கிறது. கியர்களுக்கான இடைவெளியும் அதிக அளவில் இருப்பதால், ஒவ்வொரு கியர்களையும் மாற்ற அதிக ஆக்ஸிலரேஷன் தேவைப்படுகிறது. இதனால், நகருக்குள் ஓட்டுவதற்கு S-க்ராஸ் சிறப்பாக இல்லை. ஆனால், கிளட்ச் ஹெவியாக இல்லாமல் இருப்பதும், கியர் ஷிஃப்ட் ஈஸியாக இருப்பதும் ஆறுதல். ஆளே இல்லாத சாலைகளில் மட்டுமே S-க்ராஸ் ராஜா. 1,800 ஆர்பிஎம் முதல் 4,500 ஆர்பிஎம் வரை பவர் மிகவும் சிறப்பாக இருப்பதால், ஓவர்டேக் செய்வது மிகவும் ஈஸியாக இருக்கிறது. 80 - 100 கி.மீ வேகத்தில், ஐந்து கார்களில் வேகமான கார், S-க்ராஸ்தான். 100 கி.மீ வேகத்தில் 6-வது கியரில் க்ரூஸ் செய்ய சிறப்பாக இருக்கிறது S-க்ராஸ். ஆனால், இன்ஜின் சத்தம்தான் அதிகமாகக் கேட்கிறது.

S-க்ராஸுடன் ஒப்பிடும்போது, மெருகேறிய இன்ஜினாக இருக்கிறது க்ரெட்டா. இன்ஜின் ஐடிலிங்கில் இயங்கும்போது சத்தம் கேட்கவில்லை என்பதோடு, அதிர்வுகளும் இல்லை. 2,500 ஆர்பிஎம் கடக்கும்போதுதான் இன்ஜின் சத்தம் காருக்குள் கேட்க ஆரம்பிக்கிறது. 126bhp சக்திகொண்ட இந்த இன்ஜினை, நகருக்குள் ஓட்ட அதிக மெனக்கெடத் தேவை இல்லை. டர்போ லேக் அதிகம் இல்லை என்பதால், நகருக்குள் ஸ்டாப் அண்டு ஸ்டார்ட் டிராஃபிக்கில் ஓட்டுவதற்கு ஈஸியாகவே இருக்கிறது. அதிக சக்திகொண்ட கார் என்பதால், 0 - 100 கி.மீ வேகத்தில் முதல் இடத்தில் இருக்கிறது க்ரெட்டா. மற்ற கார்கள் அனைத்துமே 0 - 100 கி.மீ வேகத்தைத் தொட 11-12 விநாடிகள் எடுத்துக்கொள்ளும் நிலையில், க்ரெட்டாவுக்கு 10.81 விநாடிகள் மட்டுமே தேவைப் படுகிறது.

108.5bhp சக்திகொண்ட டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ் காரின் பெர்ஃபாமென்ஸ், 0 -100 கி.மீ வேகத்தில் குறைவாக இருந்தாலும், கியர்களுக்கு இடையே அதாவது 20-40, 40-80, 80-100 கி.மீ வேகங்களில் மிகவும் வேகமாக இருக்கிறது. இந்த காரிலும் டர்போ லேக் உண்டு. ஆனால், இது 1,500 ஆர்பிஎம் வரை மட்டுமே! ஐந்தாவது மற்றும் ஆறாவது கியரில் 100 கி.மீ வேகத்துக்கு மேல் நெடுஞ்சாலையில் ஓட்டுவதற்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது டஸ்ட்டர்.

டெரானோவில் இருப்பதும் அதே 108.5bhp சக்திகொண்ட இன்ஜின்தான் என்றாலும், இன்ஜின் காலிப்பரேஷனில் மாறுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதிகபட்ச டார்க்கான 25kgm டார்க்கை டெரானோ 2,250 ஆர்பிஎம்-ல் எட்டுகிறது. இதே டார்க்கை டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ் 1,750 ஆர்பிஎம்-ல் தொடுகிறது. டஸ்ட்டரைவிட கொஞ்சம் அதிகமான டர்போ லேக் இருப்பதால், நகருக்குள் அடிக்கடி கியர்களை மாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. மேலும், டெரானோவின் கிளட்ச்சும் ஹெவியாக இருக்கிறது.

ஐந்து கார்களில் அதிக சக்தி கொண்ட கார், மஹிந்திரா XUV500. 138bhp சக்திகொண்ட XUV, அதிக எடைகொண்ட காரும்கூட! 1,830 கிலோ எடை என்பதால், அதிக பவர் இருந்தும் உபயோகம் இல்லை என்பது போலவே இருக்கிறது. கியர்களை மாற்றுவது என்பது அவ்வளவு ஈஸியாக இல்லை. மேலும், அதிர்வுகளும் காருக்குள் அதிகமாகவே இருக்கிறது. 0 - 100 கி.மீ வேகத்தைத் தொட 12.34 விநாடிகளை எடுத்துக் கொள்கிறது XUV.

ஒட்டுதல் மற்றும் கையாளுமை

மாருதி S-க்ராஸ் மிகவும் தாழ்வான சேஸியைக் கொண்டிருப்பதால், ஒரு காரை இயக்குவதுபோலவே இருக்கிறது. வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு ஸ்போர்ட்டியான ஹேட்ச் பேக் கார் போலவே இருக்கிறது. வேகம் பிடிக்க ஆரம்பித்துவிட்டால், காருக்குள் ஆட்டம் காண ஆரம்பிக்கிறது. ஸ்டீயரிங் எந்த ரெஸ்பான்ஸும் இல்லாததுபோலவே இருக்கிறது. ஆனால், S-க்ராஸ் காரின் ஸ்டெபிலிட்டி மிகவும் சிறப்பாக இருப்பதால், நெடுஞ்சாலைப் பயணங்களைத் தைரியமாக மேற்-கொள்ளலாம்.

குறைந்த வேகத்தில் ஓட்டுதல் அனுபவம் க்ரெட்டாவில் சிறப்பாக உள்ளது. ஸ்டீயரிங்கும் வளைத்து, நெளித்து ஓட்டத் தூண்டுவதாக இருக்கிறது. இதனால், நகருக்குள் ஓட்டுவதற்கு மிகச் சிறப்பான காராக உள்ளது க்ரெட்டா. வேகமாகப் பறக்கும்போது, மற்ற ஹுண்டாய் கார்கள் போல இல்லாமல் ஸ்டெபிலிட்டி சிறப்பாக இருப்பதோடு, ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸும் நன்றாக உள்ளது.
திருப்பங்களில் வளைத்து நெளித்து ஓட்டும்போது, டஸ்ட்டருக்கும் டெரானோவின் ஓட்டுதல் தரத்துக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால், டெரானோவில் மோசமான மேடு பள்ளங்கள் கொண்ட சாலையில் பயணிக்கும்போது, ஸ்டீயரிங் கிக் பேக் அதிகம் இருப்பதோடு, ஆட்டமும் அதிகமாக இருக்கிறது. இரண்டு கார்களுமே ஸ்டெபிலிட்டியில் மிகச் சிறப்பாக உள்ளன.
பழைய XUV காரைவிட ஓட்டுதல் தரத்திலும் கையாளுமையிலும் முன்னேற்றம் இருந்தாலும், இன்னமும் பல குறைகளுடன் இருக்கிறது XUV 500. மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது, காருக்குள் அதிகப்படியான ஆட்டத்தை உணர முடிகிறது. இதனால், சின்னச் சின்ன பள்ளங்களுக்கும் காருக்குள் இருப்பவர்கள் அலெர்ட்டாக இருக்க வேண்டியிருக்கிறது.

மைலேஜ்

126bhp சக்திகொண்ட ஹூண்டாய் க்ரெட்டாதான் மைலேஜில் நம்பர் ஒன். நகருக்குள் 12.5 கி.மீ, நெடுஞ்சாலையில் 17.5 கி.மீ மைலேஜ் தருகிறது க்ரெட்டா. இதற்கு டஃப் ஃபைட் கொடுப்பது, மாருதி S-க்ராஸ். நகருக்குள் 12.1 கி.மீ, நெடுஞ்சாலையில் 17.8 கி.மீ மைலேஜ் தருகிறது. பெரிய கார் என்பதால், மஹிந்திரா XUV நகருக்குள் 10.2 கி.மீ, நெடுஞ்சாலையில் 14.3 கி.மீ மைலேஜ் தருகிறது.

டெரானோவுக்கும், டஸ்ட்டருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. டெரானோ நகருக்குள் 11.8 கி.மீ, நெடுஞ்சாலையில் 17 கி.மீ, டஸ்ட்டர் நகருக்குள் 11.5 கி.மீ, நெடுஞ்சாலையில் 16.8 கி.மீ மைலேஜ் தருகிறது.

ஐந்து கார்களில் விலை அதிகமான கார் XUV 500. அதேசமயம் அந்த விலைக்குக் கிடைக்கும் ஒரே 7 சீட்டர் எஸ்யுவியும் XUVதான். அதிக சிறப்பம்சங்களைக் கொண்டிருப்பதோடு, முழுமையான எஸ்யுவி காராகவும் இருக்கிறது. ஆனால் ஃபிட் அண்ட் ஃபினிஷ், டெக்னாலஜி மற்றும் ஓட்டுதல் தரத்தில் மற்ற கார்களைவிட பின் தங்கியிருக்கிறது மஹிந்திரா XUV500.

ஐந்து கார்களில் விலை குறைவான கார் டெரானோதான். பார்ப்பதற்கும், பயணிப்பதற்கும், ஓட்டுவதற்கும் சிறந்த எஸ்யுவி காராகவே இருக்கிறது டெரானோ. ஆனால் 15 லட்சம் ரூபாயை நியாயப்படுத்தும் அளவுக்குச் சிறப்பம்சங்கள் எதுவும் இல்லாமல் சாதாரணமாக இருக்கிறது டெரானோ. கிளட்ச்சும் ஹெவியாக இருப்பது டெரானோவின் மைனஸ்.

டர்போ லேக் அதிகம் கொண்ட காராகவும், அதிவேக பெர்ஃபாமென்ஸில் சுமாரான காராகவும் இருக்கிறது மாருதி S-க்ராஸ். மற்றபடி சிறப்பம்சங்களிலும், இடவசதியிலும் ஓகேதான். ஆனால் டஸ்ட்டரைவிடவும் விலை அதிகமாக விற்பனைக்கு வந்திருப்பது S-க்ராஸின் பலவீனம்.
விலை குறைவான ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஒரே கார் ரெனோ டஸ்ட்டர்.

பெர்ஃபாமென்ஸிலும் ஓட்டுதல் தரத்திலும் முதலில் நிற்கிறது டஸ்ட்டர். நீங்கள் ஆஃப் ரோடு பிரியர் என்றால் உங்களுக்கு டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ்தான் நல்ல சாய்ஸ். ஆனால், டஸ்ட்டர் 2 வீல் டிரைவ் போதும் என்பவர்கள் க்ரெட்டாவுக்குப் போகலாம்.

ஸ்டைலிலும், சிறப்பம்சங்களிலும், இடவசதியிலும் முதல் இடத்தில் இருக்கிறது ஹூண்டாய் க்ரெட்டா. இன்ஜின் ரிஃபைன்மென்ட்டிலும், டஸ்ட்டரைவிட ஒரு படி மேலே இருக்கிறது க்ரெட்டா. ஆனால் டஸ்ட்டர் அளவுக்கு வளைத்து நெளித்து ஓட்ட க்ரெட்டா சிறப்பாக இல்லை என்றாலும், மோசமான காராக இல்லை. பலவீனங்களைவிட அதிக பலங்களைக் கொண்ட கார் என்பதால், இந்தப் போட்டியில் ஆட்டோமேட்டிக்காக முதல் இடத்தில் முன்நிற்கிறது க்ரெட்டா.