ஹோண்டாவின் கார்கள் எப்போதுமே ஸ்பெஷல்தான். போட்டியாளர்களைவிட தரத்திலும், பெர்ஃபா மென்ஸிலும், மைலேஜிலும், நீடித்த உழைப்பிலும், கொடுக்கும் காசுக்குச் சரியான மதிப்புள்ள காராக இருக்கும் என்பது, ஹோண்டா மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை.

அந்த நம்பிக்கையை அசைத்துப் பார்த்த கார், ஜாஸ். உலகம் முழுவதும் வெற்றி பெற்ற ஜாஸுக்கு, இந்தியாவில் மார்க்கெட் சரியக் காரணம், இதன் அதிகப்படியான விலை. இப்போது எலீட் i20, போலோ, மைக்ரா, எட்டியோஸ் லிவா எனப் போட்டி பெருகிவிட்ட நிலையில், மீண்டும் வந்திருக்கிறது ஜாஸ்.

ஸ்டைல்

ஜாஸ் இன்னமும் ஒரு எம்பிவி கார் போன்ற தோற்றத்துடனேயே இருக்கிறது. உண்மையைச் சொல்லப்போனால், பழைய ஜாஸைவிட 10 மிமீ உயரமாகவும், 55 மிமீ நீளமாகவும் இருக்கிறது புதிய ஜாஸ். அதேசமயம், பழைய காரைவிட 10 கிலோ எடை குறைவான காராக இதை உருவாக்கியிருக்கிறார்கள். தாழ்வான பானெட்டின் டிஸைனும், மல்ட்டி லேயர் கிரில்லும், ஷார்ப்பான ஹெட்லைட்ஸும் ஜாஸின் முன்பக்கத்துக்குப் புதுத் தோற்றத்தைக் கொடுத்திருக்கின்றன. 15 இன்ச் டயர்கள் பொருத்தப்பட்டிருப்பது, காரின் பிரமாண்டத்தைக் கூட்டுகிறது. காரின் பின்பக்கம் கவர்கிறது. நீளமான பின்பக்கக் கண்ணாடியும், டெயில் விளக்குகளும் பின்பக்க அழகைக் கூட்டுகின்றன.

உள்ளே

ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் அதிக சிறப்பம்சங்கள்கொண்ட கார், எலீட் i20. அதைப் போட்டியாக வைத்துக்கொண்டுதான் ஜாஸைத் தயாரித்திருக்கிறது ஹோண்டா. ஜாஸின் விலை உயர்ந்த வேரியன்ட்டில் 6.2 இன்ச் ஸ்கிரீனும், விலை குறைவான வேரியன்ட்டுகளில் 5 இன்ச் டச் ஸ்கிரீனும் இடம் பிடித்திருக்கின்றன. ஆனால், i20 காரில் இருக்கும் கீ-லெஸ் என்ட்ரி வசதி ஜாஸில் இல்லை. ஆனால், இதற்கான ஆப்ஷன் இருக்கிறது. சில மாதங்கள் கழித்து இந்த வசதி அறிமுகப்படுத்தப்படலாம். பாதுகாப்புக்கு ஏபிஎஸ் பிரேக்குகளும், 2 காற்றுப் பைகளும், ஈபிடி சிஸ்டமும் ஜாஸில் உள்ளன.

யுஎஸ்பி போர்ட், ப்ளூ-டூத், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், கிளைமேட் கன்ட்ரோலுக்கு டச் ஸ்கிரீன் வசதி என ஜாஸ் யூத்ஃபுல்லாக இருக்கிறது. ஆனால், ஹுண்டாய் i20 காரில் பின்பக்கம் ஏ.சி வென்ட் இருக்கும் நிலையில், ஹோண்டா ஜாஸில் அது இல்லை. ஆனால், பின்னால் ஏ.சி வென்ட்டுக்கான தேவையும் ஜாஸில் ஏற்படவில்லை.

பின்பக்க இடவசதியைப் பொறுத்தவரை, ஹோண்டா ஜாஸ்தான் நம்பர் ஒன். கால்களை நீட்டி மடக்கி உட்கார்ந்து பயணிக்க, தாராளமான இடவசதி உள்ளது. ஜாஸின் விலை உயர்ந்த வேரியன்ட்டில் மேஜிக் சீட் வசதி உள்ளது. இதன்படி, டிரைவர் சீட்டைத் தவிர, எல்லா இருக்கைகளையுமே மடக்கிக்கொள்ளலாம். இதனால், வீட்டைக் காலி செய்து கொண்டுபோகும் அளவுக்கு இடவசதி உள்ளது. ஹோண்டா ஜாஸில், பெட்ரோல் டேங்க் முன் இருக்கைகளுக்குக் கீழே வைக்கப்பட்டிருப்பதால், பின்னிருக்கைகளின் கீழே பைகள் உள்ளிட்ட பொருட்களை வைக்கவும் இடம் இருக்கிறது.

இன்ஜின்!

அமேஸில் இருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்தான் ஜாஸிலும் இருக்கிறது. ஹோண்டாவின் இந்த காமென் ரெயில் டீசல் இன்ஜின், 98.6bhp சக்தியை 3,600 ஆர்பிஎம்மிலேயே வெளிப்படுத்துகிறது.

பழைய ஜாஸ் மற்றும் பிரியோவில் இருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் புதிய ஜாஸிலும் இடம் பிடித்திருக்கிறது. இது அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்-ல் 88.7bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. பெட்ரோல் மாடலில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு ஆப்ஷன்களுமே உண்டு. டீசல் மாடலில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பிடித்துள்ளது.

ஹோண்டாவின் டீசல் இன்ஜின், சத்தம் போடும் இன்ஜினாக இருப்பதுதான் மிகப் பெரிய பலவீனம். ஆனால், ஹோண்டா சிட்டி காரில் எழும்பும் சத்தத்தைவிடவும் ஜாஸில் குறைவாகக் கேட்பது ஆறுதல். கார், வேகமாகப் போகப் போக சத்தம் குறைவாகக் கேட்பதுபோல இருக்கிறது. டர்போ லேக் இல்லாமல் ஓட்டுவதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதுதான் ஜாஸின் பலம். 1,500 - 2,500 ஆர்பிஎம் வரை பவர் டெலிவரி மிகவும் சீராக இருப்பதால், நகருக்குள் ஒரு பெட்ரோல் காரை ஓட்டுவது போன்றே ஈஸியாக இருக்கிறது. கிளட்ச் ஹெவியாக இல்லை என்பதோடு, கியர் லீவரும் ஸ்போர்ட்டியாக இருப்பதால், டிரைவிங் அனுபவம் ஜாஸில் குதூகலம்தான். நெடுஞ்சாலைப் பயணம் ஈஸியாகவே இருந்தாலும் ஓட்டுதல் அனுபவம் அவ்வளவு ஜாலியாக இல்லை. காரணம், 4,000 ஆர்பிஎம்-க்கு மேல் இன்ஜினில் பவர் இல்லை.

ஆனால், பெட்ரோல் இன்ஜினில் 6,800 ஆர்பிஎம் வரை பவர் டெலிவரி சீராக இருக்கிறது. இதனால் நகரம், நெடுஞ்சாலை என இரண்டுவிதமான சாலைகளிலும் ஓட்டுவதற்குச் சிறப்பாக இருக்கிறது ஜாஸ் பெட்ரோல். பவர் டெலிவரி சீராக இருந்தாலும் இன்ஜினில் அதிக பவர் இல்லை என்பதால், பெட்ரோலில் பவர்ஃபுல் பெர்ஃபாமென்ஸ் மிஸ்ஸிங்.

0 - 100 கி.மீ வேகத்தை ஜாஸ் டீசல் 12.33 விநாடிகளில் கடக்க, ஜாஸ் பெட்ரோல் இதே வேகத்தைக் கடக்க 14.20 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல், இதே வேகத்தைத் தொட 14.89 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது.

ஓட்டுதல் தரம்!

ப்ரீமியம் ஹேட்ச்பேக் என வகைப்படுத்தப்படும் இந்த 6-10 லட்சம் ரூபாய் ஹேட்ச்பேக் கார்களில், ஓட்டுதல் தரம் என்பது மிகவும் முக்கியம். மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது அலுங்கல் குலுங்கல் இல்லாத காராகவும், திருப்பங்களில் வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு கையாளுமையில் சிறந்த காராகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் ஜாஸ் வெற்றி பெறுகிறது. அதிக வேகங்களில் பயணிக்கும்போதும், ஹோண்டா ஜாஸ் ஸ்டெபிலிட்டியில் சிறந்த காராக இருக்கிறது. அதேபோல், ஸ்டீயரிங் ஃபீட்பேக்கிலும் ஜாஸ் சிறப்பாக இருக்கிறது. அதாவது, ஸ்டீயரிங்கை வளைக்கும்போது முன் வீல்களின் திருப்பம் உடனடியாக ஸ்டீயரிங்கில் தெரிய வேண்டும். அதில் ஜாஸ் சிறப்பாக இருக்கிறது.

ஜாஸின் ஸ்டீயரிங்கை மேலும் கீழும் மட்டுமே அட்ஜஸ்ட் செய்ய முடியும். ஜாஸ் காரின் மிகப் பெரிய மைனஸ் என்பது, இதன் உயரமான டேஷ்போர்டும், ஏ-பில்லரும்தான். ஏ-பில்லர் மிகவும் தடிமனாக இருப்பதால், வளைவுகளில் சாலையை மறைக்கிறது. விபத்துகளுக்கு இது வித்திடும் என்பதால், கவனம் தேவை.

மைலேஜ்!

ஜாஸின் எடை குறைவு என்பதால், மைலேஜில் சிறப்பாக இருக்கிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கொண்ட மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 12.3 கி.மீ-யும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் 11.4 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது. டீசல் இன்ஜின்கொண்ட ஜாஸ், நகருக்குள் 14.34 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 19.8 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது. ஒட்டுமொத்தமாக, டீசல் இன்ஜின் லிட்டருக்கு 17.1 கி.மீ வரை மைலேஜ் தருவதால், 40 லிட்டர் டேங்க்கை நிரப்பினால், 700 கி.மீ தூரம் வரை தடையின்றி பயணிக்க முடியும்.

விலை

ஹோண்டா ஜாஸின் விலை உயர்ந்த பெட்ரோல் மாடலின் சென்னை ஆன் ரோடு விலை, 8.53 லட்ச ரூபாய். இது, ஹூண்டாய் எலீட் i20 காரைவிட கிட்டத்தட்ட 40 ஆயிரம் ரூபாய் அதிகம்.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட காரின் விலை 9.70 லட்ச ரூபாய். டீசல் இன்ஜின்கொண்ட விலை உயர்ந்த மாடலின் சென்னை விலை, 10.16 லட்சம் ரூபாய். இது, ஹூண்டாய் எலீட் i20 காரைவிட 60 ஆயிரம் ரூபாய் அதிகம்.

அதிக இடவசதிகொண்ட ஹேட்ச்பேக் கார்தான் வேண்டும் என்றால், ஹோண்டா ஜாஸ்தான் நீங்கள் வாங்க வேண்டிய கார். பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டு கார்களின் மைலேஜுமே சிறப்பாக இருக்கிறது. ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையிலும் மிகச் சிறந்த காராக இருக்கிறது ஜாஸ். ஆனால், பெட்ரோல், டீசல் என இரண்டு இன்ஜின்களுமே பெர்ஃபாமென்ஸில் சுமாராகவே இருக்கின்றன. விலையும் இந்த செக்மென்ட்டின் டாப் செல்லரான ஹூண்டாய் எலீட் i20 காரைவிடவும் அதிகமாகவே இருக்கிறது. பெர்ஃபாமென்ஸ் பெரிய பிரச்னை இல்லை, தரமான ஹேட்ச்பேக் வேண்டும் என்றால் - ஹோண்டா ஜாஸ், நல்ல சாய்ஸ்!