இந்திய இளைஞர்களின் மனதை மயக்கிய முதல் பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் பைக், பல்ஸர்தான். பெரிய டேங்க், ஒற்றை ஹெட்லைட் என 14 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான பல்ஸர், அதன் பிறகு பல அதிரடி மாற்றங்களைக் கண்டது. இப்போது 200சிசி இன்ஜினுடன் ரேஸ் ஸ்போர்ட் பைக்காகக் களம் இறங்கியிருக்கும் பல்ஸர் RS, பல்ஸர் பிராண்டில் இப்போதைக்கு இந்தியாவின் உச்சபட்ச பைக்!

இதனுடன் இங்கே போட்டி போடப் போவதும் பஜாஜின் பைக்தான். ஆனால், வேறு தரத்தில், வேறு களத்தில் உருவான பைக். பஜாஜின் கட்டுப்பாட்டில் இருக்கும் கேடிஎம் நிறுவனத்தின் RC200 பைக். இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கு முன்பாக, இதில் என்னென்ன மாற்றங்களை எல்லாம் செய்ய முடியுமோ, அதை அத்தனையும் செய்து இந்தியாவுக்குள் கொண்டு வந்திருக்கிறது பஜாஜ்.

போட்டி எப்படி?

கேடிஎம் RC200, பஜாஜ் RS200 ஆகிய இரண்டு பைக்குகளுமே ஒரே நிறுவனத்தில் இருந்து வெளிவருபவை என்பதால், இரண்டுக்கும் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. இன்ஜின் வெவ்வேறானவை என்றாலும், இன்ஜின் லே-அவுட்டுக்கான ப்ளூ பிரின்ட் ஒன்றுதான். பஜாஜ் பல்ஸரில் இருந்து பிரீமியம் பைக்காக கேடிஎம் RC200 மாடலை அடையாளப்படுத்த, அதில் சில சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அப்சைடு டவுன் முன்பக்க ஃபோர்க், சேஸிக்கான அலாய் ஸ்விங் ஆர்ம் என டெக்னிக்கலாக ஸ்ட்ராங்கான பைக்காக இருக்கிறது. பல்ஸர், பட்ஜெட்டை மனதில் வைத்து நம் ஊருக்குத் தேவையான டெக்னிக்கல் விஷயங்களோடு இருக்கிறது.

கேடிஎம் RC200 இன்ஜின், அதிகபட்சமாக 10,000 ஆர்பிஎம்-ல் 24.7 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. பல்ஸர் RS200, அதிகபட்சமாக 9,750 ஆர்பிஎம்-ல் 24.2bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. இரண்டு பைக்குகளின் டார்க்கும் கிட்டத்தட்ட ஒன்றுதான். 8,000 ஆர்பிஎம்-ல் கேடிஎம் 1.96kgm டார்க்கையும், பல்ஸர் 1.9kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இரண்டு பைக்குகளிலுமே 199.5சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின்தான் இடம்பெற்றிருக்கிறது. இன்ஜின், பவர் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்றாலும், கேடிஎம் பைக்கை பெர்ஃபாமென்ஸில் தூக்கி நிறுத்துவது, இதன் எடை. பல்ஸரைவிட RC200 பைக்கின் எடை 11 கிலோ குறைவு.

இரண்டு பைக்குகளையும் இருங்காட்டுக் கோட்டையில் உள்ள ரேஸ் டிராக்கில் வைத்து டெஸ்ட் செய்தோம். ரேஸ் டிராக்கின் நேர் சாலையில் அதிகபட்ச வேகத்தில், RC200 பைக்கைவிட பல்ஸர் 200 வேகமாக இருக்கிறது. RC200, 130 கி.மீ வேகத்தைத் தொட, பல்ஸர் 132.1 கி.மீ வேகத்தைத் தொடுகிறது. வளைவுகளில் ஓட்டும் போதுதான் கேடிஎம் பைக்கின் டெக்னாலஜி துணை நிற்கிறது. வளைவுகளில் அதிகமாக கியர்களை குறைக்காமல் ஓட்ட முடிகிறது. இதனால், பல்ஸரைவிட 1-3 கி.மீ வேகமாகவே இருக்கிறது RC200.

இருங்காட்டுக்கோட்டை ரேஸ் டிராக்கில், இந்தியாவின் நம்பர் ஒன் பைக் ரேஸரான ரஜினி இந்த பைக்கை ஓட்டினார். அவர் 3.71 கி.மீ தூரம் கொண்ட ரேஸ் டிராக்கின் ஒரு லேப்பை, கேடிஎம் RC200 பைக்கில் 10.56 விநாடிகளில் கடந்தார். வளைவுகளில் ஓட்டும்போது பல்ஸரின் வேகம் குறைவாக இருப்பதால், பல்ஸர் RS200 பைக்கில் ரஜினியின் லேப் டைமிங் 13.63 விநாடிகள்.

எங்கே வித்தியாசம்?

பெர்ஃபாமென்ஸில் இரண்டு பைக்குகளிலும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. அப்படி என்றால் எதற்காக நான் 40,000 ரூபாய் கூடுதல் விலை கொடுத்து கேடிஎம் RC200 பைக்கை வாங்க வேண்டும்? பில்டு குவாலிட்டி, ஸ்ட்ராங் சேஸி, அகலமான டயர்கள், சிறப்பான சஸ்பென்ஷன் மற்றும் ஷார்ப் பிரேக்குக்காகத்தான் 40,000 ரூபாய் கூடுதலாகக் கொடுக்க

வேண்டும். தலைகீழான முன்பக்க ஃபோர்க் மற்றும் மோனோஷாக் பின்பக்க சஸ்பென்ஷன் சப்போர்ட்டுக்கு அலாய் ஸ்விங் ஆர்ம் இருப்பதால், வளைவுகளில் வளைத்துத் திருப்பி ஓட்டுவதற்குச் சிறப்பாக இருக்கிறது RC200. இரண்டு பைக்குகளிலுமே எம்ஆர்எஃப் டயர்கள்தான் என்றாலும், RC200 பைக்கில் டயர்கள் அகலமாக இருப்பதால், ஸ்டெபிளிட்டி சிறப்பாக இருக்கிறது.

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையில் கேடிஎம் RC200 பைக் சிறப்பாக இருந்தாலும், இதை நகருக்குள் தினம்தோறும் டிராஃபிக்கில் பயன்படுத்த முடியாது. மாறாக, பல்ஸர் RS200 பைக்கை கம்யூட்டர் பைக்காகப் பயன்படுத்த முடியும். ரேஸ் ஆர்வம் உள்ளவர்கள்; சென்னை, கோவை டிராக்கில் பைக்கை மாதம் இருமுறை ஓட்ட விரும்புபவர்கள் என்றால், கேடிஎம் RC200 நல்ல சாய்ஸ்!