இந்தியாவின் நம்பர் ஒன் பைக் தயாரிப்பாளர் என்கிற நம்பர் ஒன் இடத்தை, ஹீரோவுடன் பகிர்ந்துகொண்டிருந்த ஹோண்டா, இப்போது தனியாக முதல் இடம் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது. இந்த ஆண்டு 9 புதிய மோட்டார் சைக்கிள்களைக் (அப்டேட் வெர்ஷன்களையும் சேர்த்து) களம் இறக்குவதுதான் ஹோண்டாவின் திட்டம். 100சிசி பைக்குகள்தான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் என்பதால், 110சிசி திறன்கொண்ட புதிய பைக்காக லிவோவைக் களமிறக்கியிருக்கிறது ஹோண்டா. எப்படி இருக்கிறது லிவோ?

டிஸைன்

ஹீரோவின் வழக்கமான 100சிசி பைக்குகளைப்போல இல்லாமல், ஸ்டைலாக டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது ஹோண்டா லிவோ. அதேசமயம், சிபி ட்விஸ்ட்டர் போன்று மாடர்னாக இல்லாமல், நடுத்தர வயதினருக்குப் பிடிக்கும் வகையில் டிஸைன் செய்யப்பட்டுள்ளது. பவர்ஃபுல் ஹெட்லைட், அதனைச் சுற்றியிருக்கும் ஃபேரிங், பெட்ரோல் டேங்கின் இரு பக்கமும் ஸ்கூப் ஆகியவை, இதை மற்ற 100சிசி பைக்குகளில் இருந்து வித்தியாசப்படுத்துகிறது. ஸ்பீடோ மீட்டர் மற்றும் பெட்ரோல் இருப்பைக் காட்டும் மீட்டர் ஆகிய இரண்டுமே அனலாக்தான். ஆர்பிஎம், ட்ரிப் மீட்டர்கள் இல்லை. ஆல் பிளாக் தீம் படி அலாய் வீல், இன்ஜின், சைலன்ஸர், செயின் கார்டு ஆகியவை கறுப்பு நிறத்தில் உள்ளன.

பெர்ஃபாமென்ஸ்!

பட்டன் ஸ்டார்ட் இருப்பதால், கிக்கரை மிதிக்க வேண்டிய முயற்சி தேவை இல்லை. ஆக்ஸிலரேட்டரை முறுக்கியதும் 100சிசி பைக்குகளுக்கே உரிய அலறல் சத்தம் கேட்கிறது. ஆனால், அதிர்வுகள் பெரிதாக இல்லை. 110சிசி திறன்கொண்ட இந்த பைக், அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 8.25 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. அதேபோல், 5,500 ஆர்பிஎம்-ல் 0.88 kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. குறைந்த ஆர்பிஎம்-ல் அதிக டார்க் இருப்பதால், நகருக்குள் ஓட்டுவதற்குச் சிறப்பாக இருக்கிறது. ஹோண்டாவின் வழக்கமான பட்டர் ஸ்மூத் கியர்பாக்ஸ் இயக்குவதற்கு ஈஸி. காலில் தட்டத் தட்ட... கியர்கள் சரியாக மாறுகின்றன. ட்விஸ்ட்டரில் இருப்பதுபோல் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இதில் இடம் பெற்றுள்ளது.

111 கிலோ எடைகொண்ட இந்த பைக்கை, நகருக்குள் ஓட்டுவது மிகவும் ஈஸியாக இருக்கிறது. முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் பொருத்தப்பட்டிருக்கும் ட்யூல் ஷாக் சஸ்பென்ஷன், மேடு பள்ளங்களை நன்றாகச் சமாளிக்கிறது. ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டிருப்பதால், திடீர் பஞ்சர் தலைவலிகளில் இருந்து தப்பிக்கலாம். முன்பக்கம் 240மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் 130 மிமீ டிரம் பிரேக்கும் இடம் பிடித்திருப்பதால், பிரேக்ஸ் ஷார்ப்பாகவே இருக்கின்றன.

லிவோ பைக்கை நாம் இன்னும் முழுமையாகச் சோதிக்கவில்லை. அராய் சான்றிதழ்படி ஹோண்டா சொல்லும் மைலேஜ், லிட்டருக்கு 74 கி.மீ!

மிட் ரேஞ்ச் வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு தயாரிக்கப்படுபவைதான் 100, 110சிசி பைக்குகள். கடுமையான டிராஃபிக் நெருக்கடிகளில் தினமும் சென்று வர சுலபமாகவும், அதேசமயம் அதிக மைலேஜ் தரக்கூடியவையாகவும் இவை இருக்க வேண்டும் என்பது அவசியம். அந்த வகையில் மிகவும் சிறப்பான பைக்காக இருக்கிறது ஹோண்டா லிவோ. போட்டியாளரான ஹீரோ பேஷன் எக்ஸ் ப்ரோவுடன் ஒப்பிடும்போது, லிவோ நகருக்குள் ஓட்டுவதற்கு ஈஸியாக, ஃப்ளெக்ஸிபிளாக இருப்பதோடு, சஸ்பென்ஷனும் சிறப்பாக இருக்கிறது. ஹீரோ பேஸன் ப்ரோ பைக்கின் சென்னை ஆன் ரோடு விலை 63,545 ரூபாய்.

ஹோண்டா லிவோ பைக்கின் விலை 66,803 ரூபாய். ஹீரோ பேஸன் பைக்கைவிட விலை அதிகம்தான் என்றாலும், தரமான பைக் லிவோ. 100சிசி பைக்குகள் வாங்க வேண்டும் என்கிற திட்டத்தில் இருப்பவர்கள், மிஸ் செய்யாமல் டெஸ்ட் செய்ய வேண்டிய பைக், ஹோண்டா லிவோ!